Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Sunday, May 28, 2006

எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்

எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்

இன்று காலை இன்டியன் எக்ஸ்பிரஸ். வழக்கம்போல, அரசியல், விளையாட்டு தவிர்த்து சென்னை பக்கத்தை புரட்டினேன்.

முதல் ரேங்கில் வந்த பையனின் தந்தையை கேட்கிறார்கள் நிருபர்கள் ‘உங்கள் பையன் வெற்றியின் ரகசியம் என்ன?’.

தந்தையின் பதில் படித்து வியந்தேன்.

‘நான் தினசரி காலையில் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். மாலையில் அதேமாதிரி திருப்பி அழைத்து வருவைன். பள்ளியில் அவன் ஒரு சக நண்பர்களோடும் பேசாமல் பார்த்துக்கொள்வேன். அவன் யாரோடும் பழகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பேன். அவர்களால், இவன் கவனம் தப்பி வேண்டாத விழயங்களில் திரும்பாமல் இருந்தான்....’ என்கிறார் அவர்.

என்ன ஆச்சரியம். உண்மையாகவா? இப்பொழுது பையன்களை மற்ற பையன்களிடமிருந்து பாதுகாக்கவா வேண்டியிருக்கிறது!

எந்த கூடல் (association) நன்மை தரவேண்டுமோ, அது எப்படி எதிர்மறையாக ஆகும்!.

கலி ரொம்பத்தான் முத்திவிட்டது. டாக்டர்களிடமிருந்து நமது உடம்பை காக்கவேண்டியிருக்கிறது. (கிட்னியையும் சேர்த்துதான்). வக்கீல்களிடமிருந்து நமது வழக்கை காக்க வேண்டியிருக்கிறது. வைதீகர்களிடமிருந்து நமது இறை நம்பிக்கையை காக்க வேண்டியிருக்கிறது. கரைவேட்டிகளிடமிருந்து தேசத்தை காக்கவேண்டியிருக்கிறது.

பெற்றோர்களின் இப்போது தலையாய தலைவலியே இந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்தான். என் வீட்டில் சினிமா, சீரியல் டிவி காட்சிகள் கொஞ்சமும் அனுமதி இல்லை. ஆனால், பையன் மன்மத ராசாவிலிருந்து எல்லாம் பாடுகிறான். அர்த்தம் புரியாமல், வார்த்தைகள் தெரியாமல். எல்லாம் ஸ்கூல் சத்சங்கம்தான்.

இப்பொழுதய குழந்தைகள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘Raising Positive Child in a negative world…” என்ற அருமையான புஸ்தகம் zig zaglar என்பவரால் எழுதப்பட்டது. எப்பொழுதோ படித்தது. அமெரிக்க கலாசார கோரங்களை தழுவி இருந்தாலும் இப்போதய மேல்மட்ட தமிழர்களின் கலாசார குழப்பங்களுக்கு ஒப்பியே இருக்கிறது.

டிவி தான் மிகப்பெரிய வில்லன்.

‘பிள்ளையை தின்னும் புழக்கடை முனியும்’ என்று எப்போதும் காலையில் ஜபிப்போம். குழந்தையில் நான் அப்பாவை கேட்பேன் புழக்கடை முனி எப்படி இருக்கும் என்று. இப்பொழுது அது டி.விதான் என்று தெரிந்து கொண்டேன்.

டிவி குழந்தைகளை மிக தீவிரமாக பாதிக்கிறது என்பதற்கு ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நிரூபணத்தில் இருக்கின்றன.

ஒரு பழைய 1985ல் அமெரிக்க சர்வேயில் பாருங்கள் (இப்போது 2006ல் இது கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கலாம்...) 75 சதவீத ஜோடிகளின் உறவுகள் (sexual relationships) இல்லறத்துக்கு அப்பாற்பட்டே நடக்கின்றன. 90% தடவை களியாட்டங்களில் மது அருந்துவது போல் காட்டப்படுகிறது. அதாவது மது அருந்துவது a source / celebration of fun என்று பதிக்கப்படுகிறது. அதிலும் கொடுமை, 16 முறை மது வழங்கும்போது அதில் 15 முறை எதிராளியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது.

டிவி பார்க்கும் குழந்தைகள் டிவியை பார்த்து அல்லாத செயல்களை செய்வது ஒரு தாக்கம் என்றால், அதை விட அதிகமாக அவர்கள் செய்யாமல் இருப்பது மனோரீதியாக பெரிய தாக்கம் என்று amercian society of paediatrics ல் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

டிவி பார்க்கும் குழந்தைகள் passive பொழுதுபோக்கையே விரும்புகிறார்கள். அதிக சத்தம் போடும் பாட்டுக்களையே விரும்புகிறார்கள். Interactivity அதிகம் குறைந்துவிடுகிறது.

டிவியில் மிகவும் கொடுமையானது குழந்தைகள் நிகழ்ச்சிகள்தான். இதில் வரும் வன்முறை இவர்கள் மனத்தை வன்முறைக்கு தயாராக்கி விடுகிறது. ஒரு அடி காயம் ரத்தம் என்றால் இவர்கள் சந்தோஷமாக சிரிக்கிறார்கள்.

நாலு குழந்தைகளை சேர்த்தால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது விளையாட விரும்பாமல் எல்லோரும் சேர்ந்து டிவி பார்க்க உட்காருகிறார்கள். நீங்கள் பையனை டிவியிடமிருந்து தவிர்த்தாலும் நண்பர்கள் விடுவதில்லை.

இனிய மாலைப் பொழுது. நான் பார்க்குக்கு போய் விளையாடலாம் என்று என் வீட்டில் கூடிய குழந்தைகளை சொன்னேன். என் பையனின் நண்பன் என்னிடம் ‘பார்க் போர் அங்கிள். அதே ride, அதே games!. அதே புட்பால்! போரடிக்கும். வேற ஏதாவது டிவி பார்க்கலாமே’ என்றான்.

என்ன கொடுமையடா இது?

நான் படித்தபோது “What is the probability of having 2 consecutive Ace in a pack of cards” என்று ஸ்கூலில் என்னை கேள்வி கேட்டார் வாத்தியார். நான் திணறினேன். ‘நான் சீட்டுக்கட்டை பார்த்தது இல்லை சார். அதில் எத்தனை கார்டு என்று தெரியாது’ என்று அவமானமாக சொன்னேன். வாத்தியார் சிரித்து உட்காரச்சொன்னார்.

அப்பாவிடம் மாலையில் சொன்னேன். ‘அந்த வாத்தி, சீட்டு விளையாட சொல்லி கெடுக்கிறானா பசங்கள. என்ன கிரகசாரம்டா ...’ என்று எங்கப்பா வாத்தியாரை திட்டினார்.

பாஸ்ட் பார்வேட் இப்போ. என் பையன் (9 வயது) பிரண்ட்ஸ் வீட்டிற்கு போய் வந்தான். என்னடா பண்ணினே? என்றேன். ‘ஒரே வெயில் அப்பா. ஒன்னும் பண்ணல. இரண்டு ரவுண்ட் சீட்டு விளையாடினேன்’ என்றான்.

கலி காலமடா சாமி!

Tuesday, May 23, 2006

பார்ப்பனர்கள் நவீன இந்தியாவின் தலித்துக்கள்

Are Brahmins the Dalits of today?

http://in.rediff.com/news/franc.htm ல் Francois Gautier இவ்வாறு எழுதுகிறார்.

பார்ப்பனர்களை வசதியாக ஒரு சமூகமாக பல உள்நோக்கம் கொண்ட அமைப்புகள் சித்தரிக்கின்றன.

ஆனால், இந்தியாவில் அவர்கள் உண்மையான நிலை வேறு.

டில்லியில் 50 பொது கழிப்பிடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் கழுவும் வேலை செய்பவர்கள் பார்ப்பனர்கள். இந்த ‘சுலப் டாய்லெட்’ ஒரு பார்ப்பனரால் சமூக நலனுக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதுவா, மேற்குடி மட்டம் என்று சொல்லமுடியும்?

ஒவ்வொரு டாய்லெட்டையும் 5 முதல் 6 பார்ப்பனர்கள் நாள் முழுதும் சுத்தம் செய்கிறார்கள். பத்து வருடம் முன் அவர்கள் உத்தர்பிரதேசத்திலிருந்து வேலே தேடி டில்லி வந்தவர்கள். அவர்கள் கிராமங்களில் இன்று 60 சதவீதம் வரை தலித்துக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு யூனியன் அமைத்து எல்லா வேலைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

டில்லி ரயில் நிலையத்தில் பல பார்ப்பன கூலிகளை பார்க்கலாம். அவற்றில் கிருபா ஷங்கர் என்பவரிடம் பேசியபோது ‘எங்கள் பூர்வீக கிராமங்களில் தலித்துக்கள் 5 அல்லது 6 குழைந்தைகளை நிம்மதியாக வளர்க்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வேலை சுலபமாக கிட்டிவிடுகிறது. என் ஒரே மகள் கல்லூரியில் படிக்கிறாள். ஆனால், வேலை கிடைக்குமா தெரியாது’ என்றார்.

டில்லியில் ரிக்சா இழுக்கும் பல பார்ப்பனர்களை பார்க்கலாம். படேல் நகர் என்ற இடத்தில் 50 சதவீதம் ரிக்சா ஓட்டுபவர்கள் பார்ப்பனர்கள். கிராமங்களில் வேலை இன்றி டில்லிக்கு வந்தவர்கள்.

இவர்கள் நாள் முழுக்க உழைத்தும் கைக்கும் வாய்க்கும் போதவில்லை என்கிறார்கள்.

வாராணசியில் ரிக்சா இழுப்பவர்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்கள்.

காஷ்மீர் பண்டிட் எனப்படும் 4 லட்சம் பார்ப்பனர்கள், தங்கள் ஊர்களிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதால் ஓட்டு செல்வாக்கு இல்லாமல் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலைமை வட இந்தியாவில் மட்டும் அல்ல.

ஆந்திராவில் வீட்டு வேலை மற்றும் சமையல் செய்யும் 75 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். J. ராதாகிருஷ்ணா என்பவரால் (Brahmins of India by J Radhakrishna, published by Chugh Publications) மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி எல்லா (100% ) கோயில் குருக்கள்கள் ஆந்திராவில் வருமைக் கோட்டுக்கு கீழே வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் 80% பேர் தாங்கள் வறுமைக்காகவும், தங்கள் பாரம்பரிய உடைக்காகவும் (குடுமி முதலிய) பல கேலிக்கு ஆளாவதாக குறிப்பிடுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு நவீன படிப்பில் இடம் கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் இத் தொழிலையே நாட வேண்டி இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில், பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. படிப்பவர்களும், 44% ஆரம்ப கல்வி அளவிலும், 36% நடுத்தர கல்வி அளவிலும் படிப்பை விட்டு விடுகிறார்கள் என்று ஆராய்ச்சி குறிக்கிறது.

ஆந்திராவில் பார்ப்பனர்களில் 55% பேர் வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் – மாதம் 650க்கும் குறைவாக. (இந்தியா மொத்தம் 45% பேர்தான் வருமைக் கோட்டிற்கு கீழே)

இந்தியாவின் மற்ற பாகங்களிலும் இதே நிலைமைதான்.

கர்னாடகா நிதி மந்திரி சட்டசபையில் தெரிவித்த சராசரி வருட வருமான நிலைமை (annual per capital income): கிருத்துவர்கள் – ரூ:1562; ஒக்கலிகர்கள் – ரூ: 914; முஸ்லிம்கள் – ரூ: 794; SC – ரூ: 680; ST – ரூ:577; பார்ப்பனர்கள் – ரூ: 537.

இவர்களின் அதீதமான வறுமை இவர்களை கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயரச் செய்தது. நகரங்களில் பரவி விட்டதால் இவர்கள் கூட்டமைப்பு குறைந்து சமுதாயத்தில் அரசாங்கத்தில் தங்கள் குரல் இல்லாமல் போகிறது. முதலில் அரசாங்க வேலையை சார்ந்திருந்த இவர்கள் அரசாங்க கொள்கைகளால், நவீன தொழிலான மருத்துவம், பொறியியல் என்று மாறினார்கள். அதிலும் கொள்கைகள் இவர்களுக்கு விரோதமாகி இவர்கள் வேறு திட்டங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர பிரதேச ஆராய்ச்சியின் படி, பார்ப்பனர்களில் பெரும்பான்மையோர் பிழைப்புக்கு வீட்டுவேலை செய்கிறார்கள். அவர்களில் 75% வேலையின்மை இருக்கிறது. இதில் 70% பரம்பரை தொழிலை சார்ந்துள்ளார்கள். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கோயில்களில் புசாரியாக மாதம் ரூ.500 ல் வாழ்க்கை நடத்துகின்றன.

கோயில் அர்ச்சகர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. தமிழ்நாட்டு பணக்கார ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகருக்கு மாதம் ரூ.300ம் தினசரி ஒரு பட்டை சாதமும் சம்பளம் (ஆதாரம்; Census Department studies). அதே கோவிலில் அரசாங்க ஊழியர்கள் சம்பளம் ரூ.2,500 மாதத்துக்கு.

இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது. இவ்வாறு ஒரு திட்டமும் அர்ச்சகர்களுக்கு இல்லை.

இந்நிலையில் வேறு சில மேற்பட்ட வகுப்பு என்று வகுப்பப்ட்ட்வர்களும் வாய்மொழியின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் gautier தன் கட்டுரையில்.

நன்றி

Monday, May 22, 2006

இந்தியாவில் சிறுபான்மையினரின் தீண்டாமை

(குறிப்பு: இந்த பதிப்பில் 'தீண்டாமை' என்ற சொல் aparthid என்கிற ஆங்கில வார்த்தையை குறிக்கிறது. untouchability அல்ல. aparthid க்கு இதுதான் சரியான வார்த்தையா என்பது தெரியவில்லை....)


இந்தியாவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்துக்களுக்கு எதிராக தீண்டாமை குற்றம் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களால் பல வருடங்களாக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் சுலேகா.காம் என்கிற தளத்தில் ஒரு கடிதம் பார்த்தேன். அதில் இவ்வாறு ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.

இதை இங்கே படிக்கலாம்.

http://www.sulekha.com/news/nhc.aspx?cid=450138

இந்த கடிதம் மூர்த்தி முத்துசாமி என்கிறவர் அப்போதய (ஜூலை 2005) அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு எழுதிய கடிதம். இவர் ஒரு அமெரிக்க குடிமகன். இந்திய அமெரிக்க இன்டெலக்சுவல் போரம் என்ற அமைப்பை சார்ந்தவராம்.

அவர் கடித்த்தில் முக்கியமாக எனக்கு தெரியவந்தவை சில விஷயங்கள்.

சமீப காலம் வரை, தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினர் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு பெரும்பான்மை சொத்துக்களை அநியாயமாக குவித்துக்கொண்டார்கள். அம்மாதிரி நிலை இந்தியாவிலும் நடந்துவருகின்றது.

இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் துணைபோகிறது.

கிருத்துவர்களின் இந்து தீண்டாமை;

மூன்றாம் தர நாடுகளில் வெகுவாக முயற்சித்து “மத அறுவடை” என்று தங்கள் ஆக்கிரமிப்புகளை பரப்பிவரும் கிருத்துவர்கள் அம்மாதிரி செயலுக்காக பிறித்தாளும் கொள்கை, மற்றும் தீண்டைமையை இந்தியாவில் கை கொண்டுள்ளார்கள்.

அதற்கு ஆதாரமாக அவர்களின் எல்லா அமைப்புகளிலும் இந்துக்களை தவிர்த்து அவர்கள் கை கொள்ளும் தீண்டாமையை நிரூபிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட தகவல்கள் அந்த அமைப்புகளின் இணைய தளத்திலிருந்தே சரிபார்த்துக்கொள்ளலாம்.

1. மதுரை அமெரிக்கன் காலேஜ்; இளம் விரிவுரையாளர்களில் 95% (அதாவது 22ல் 21பேர்) கிருத்துவர்கள். எல்லா விரிவுரையாளர்களிலும் சேர்த்துப்பார்த்தால் 66% (அதாவது 122ல் 81 பேர்) கிருத்துவர்கள்.

2. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி; 60% கிருத்துவர்கள் (அதாவது 118ல் 71 பேர்)

3. ஆளுவா யூனியன் கிருத்துவ கல்லூரி; 83% கிருத்துவர்கள் (அதாவது 93ல் 77 பேர்)ந

4. மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி; 42% கிருத்துவர்கள் (அதாவது 132ல் 56 பேர்)

இந்தியாவில் கிருத்துவர்கள் 4% தான். (கேரளாவில் 19%. தமிழ்நாட்டில் 7%. மகாராட்டம் 5%. என்று சிறிது வேறுபடும்)

இவ்வாறு இருக்கும்போது, இதை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் தீண்டாமை இல்லாமல் வேறு என்ன?

மேலும் கிருத்துவர்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்கள் என்பது வெளிச்சம். இந்திய நேஷனல் சாம்பிள் சர்வே 1998ன் படியும் இது நிரூபணமாகிறது.

இந்து, முஸ்லிம் சமுதாயங்களை விட கிருத்துவர்களின் படிப்பு சதவீதம் அதிகமாவதற்கு காரணம் இதே. வெளிநாட்டு கிருத்துவ மத பரப்பு அமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு அமைப்புகள் சட்டத்துக்கு பின்பக்கமாக இந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்துக்களுக்கு எதிராக தீண்டாமையை பரப்புகிறார்கள்.

முஸ்லிம்களின் தீண்டாமை;

1947ல் இணைந்த இந்தியாவின் 25% நிலப்பரப்பு 24% மொத்த முஸ்லிம்களுக்கு துண்டு போடப்பட்டது. அதாவது, 25% நிரந்தர இட ஒதுக்கீடு இதன் மூலமாக அவர்களுக்கு கிட்டியது.

உடனே அவர்கள் தங்கள் பகுதிகளில் இந்துக்கள் இல்லாமல் செய்தார்கள். 1947 ல் பாகிஸ்தானில் 20% மற்றும் பங்களாதேசத்தில் 30% ஆக இருந்த இந்து, சிக் மக்கள் இன்று 2% மற்றும் 10% (பங்களாதேஷில்) ஆக குன்றிவிட்டார்கள். இது இந்து, சீக் மக்களை இந்தியாவுக்கு துரத்துவதின் மூலமாக ஏற்பட்டது.

இதை இப்பொழுது 1998 முதல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

தற்போதய இந்தியாவில் இஸ்லாமியர்களின் மனநிலை என்ன.

கீழ்கண்ட இந்த தகவல்களை பாருங்கள்;

1. ஜாமியா மிலீயா பல்கலைகழகம். புதுதில்லி; (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..) 88% முஸ்லிம் விரிவுரையாளர்கள் (அதாவது 329ல் 288 பேர்) (இவை ஹூமானிட்டீஸ் மற்றும் மொழி துறைகளை தவிர்த்து. அவற்றையும் சேர்த்தால் முஸ்லிம்கள் விழுக்காடு இன்னும் கூடும். )
2. அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..) 90% முஸ்லிம்கள் (அதாவது 671ல் 603 பேர்)
இதற்குமேல், இந்த பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்காக 50% ரிசர்வேஷன் வேறு இருக்கிறது.)

முஸ்லிம்கள் இந்தியாவில் 14% இருக்கும் போது, இந்த நிலைமை இருக்கிறது என்றால், இது இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது செலுத்தும் தீண்டாமை என்பது வெளிப்படை.

இந்து சமுதாயத்தில் படித்தவர்களுக்கு சற்றும் குறைவில்லை.

அவ்வாறு இருக்கும்போது இவர்கள் திட்டமிட்டு இந்துக்களை ஒதுக்குவது ஏன்?

கேரளாவில் பல முக்கிய துறைகளில் முஸ்லிம்கள் இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்திவருகிறார்கள். இதில் கல்வித்துறையை முக்கியமாக இவர்கள் எடுத்துகொள்கிறார்கள். கேரளாவில் 11% மட்டுமே இந்து அல்லது அரசாங்க கல்வி நிறுவனங்கள். மீதமுள்ளவை எல்லாம் முஸ்லிம், கிருத்துவ அமைப்புகள் கையில் உள்ளன.

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட கேரளாவில் கடந்த 25 வருடமாக கல்வித்துறையை கையில் கொண்டு முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சி இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்துகிறது, என்கிறார் பேராசியர் இசாக்.

http://www.saveindia.com/for_hindus_in_kerala_it.htm

பெரும்பான்மை கல்வி இடங்கள் இன்று சிறுபான்மையினரால் கட்டுபடுத்தப்பட்டு அவர்களால் இந்துக்களை தீண்டாமை படுத்தி வருகிறார்கள்.

இந்த சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளருக்கு அமைப்பு சுதந்திரம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

இந்துக்களின் சமய நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டு அந்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்றன. இந்து சமய பணங்கள், இந்துக்கள் அல்லாத விஷயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்து கோவில் பணத்தில் சில அரசாங்கங்கள் முஸ்லிம் ஹஜ் யாத்திரைக்கு பணம் வழங்குகின்றன.

மேலும் பல தகவல்கள் இந்த இடத்தில் படித்தேன்.

நன்றி

Thursday, May 18, 2006

நிஜம் – உண்மையின் நேர்முகம்

அசுத்தப்பட்ட கோவில்கள், தலை முண்டமாக்கப்பட்ட கடவுள் சிலைகள், ஆபாச கிறுக்கல் வரிகள் தாங்கும் கோவில் சுவர்கள்; சிறுபான்மை இந்துக்களின் தகர்ப்பட்ட வீடுகள் மற்றும் காலனிகள்; இந்து புனித நூல்களின் எரிக்கப்பட்ட பக்கங்கள்; ஜீப்பில் கட்டப்பட்டு இழுக்கப்பட்டு கொலையுண்ட கணவன் மனைவி; ‘மதவாதி’ அல்லாத முஸ்லிம்களால் இந்துக்கள் எனப்படும் ‘புற்றுநோய்” அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்...

இவை ஆப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ அல்ல.....

இவை, வருத்தம் தரும் ஆனால் உண்மையான காஷ்மீர் புகைப்படங்கள், சமீபத்தில் ஒரு எக்சிபிஷனில் காட்டப்பட்டன.

'Sakshatkar—An encounter with truth' நிஜம் – உண்மையின் நேர்முகம் – என்று பெயரிடப்பட்ட இந்த எக்சிபிஷன் பனூன் காஷ்மீர் என்ற அமைப்பால் நடத்தப்பட்டது.

தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.

“ஹரி பர்வத் கோட்டையிலிருந்த இருபது சிலைகளில் சிறந்த மகாகாளியின் கருப்பு சிலை யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டது. விலை மதிப்பற்ற 9வது நூற்றாண்டு சிலை ஆனந்த நாக் லோக்பவனிலிருந்து காணாமல் போய்விட்டது. தேவன் கோவில் சிவலிங்கம் மர்ம்மான முறையில் காணாமல் போனது. இவை மறைந்த சில நாட்களிலேயே, குண்டு வெடிப்புகளும் ஆரம்பித்தன” என்றார் இந்த கண்காட்சிக்கு வந்த சல்மான் ருஷ்டி.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சனையை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இன்றும் அவர் கொலைமிரட்டலில் வாழ்கிறார்.

கண்காட்சியின் ஒரு புகைப்படம் இதயத்தை பிசைந்து வருத்தப்பட வைத்தது. புல்வமாவின் ஹெர்மானில் இருந்த ஒரு இந்து தம்பதிகள் ஜீப்பில் கட்டப்பட்டு உயிர் போகும்வரை இழுத்துச்செல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் – இந்துக்களாக இருந்ததுதான்.

ஸ்ரீநகர் பஸந்த்பா கோவிலின் நொருக்கப்பட்ட சிவலிங்கம், பாரமுல்லாவின் கோஜ்பாவின் தலை வெட்டிய ஆதிசங்கர்ர் சிலை; ஸ்ரீநகர் பதேஹ்கதலில் உள்ள ரகுநாத் கோவில் அசிங்கப்படுத்தப்பட்ட சிவலிங்கம்; தரைமட்டமாக்கப்பட்ட அழகிய மூன்றடுக்கு குப்த்கங்கா கோவில் பாரமுல்லாவில்; நவ்கதலில் உள்ள தர்பூணி கோவில் நூலகத்தின் எரிக்கப்பட்ட இந்து வேத நூல்கள்.... எல்லாம் பார்வையில் இருந்தன.

ஔரங்கசீப், ந்தீர்ஷா, தைமூர் இவர்களின் அடக்குமுறையை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்த இந்த கண்காட்சி கஷ்மீரின் ஆறு மாவட்டங்களில் மூன்று வருஷமாக ஆராய்ந்து வெளியிடப்பட்டவை.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த படங்கள் எல்லாமே, அநீதி இழைக்கப்பட்டவர்களோ அல்லது வெளி ஆட்களோ தானாகவே எடுத்த அமெச்சூர் புகைப்படங்கள். சில சரியான கேமரா கூட இல்லாமல் காமாசோமா என்று....

இந்துக்கள் காஷ்மீரில் ஜெனோசைட் (இன அழிப்பு) சந்தித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அரசாங்க தரப்பில் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள். இந்த சுய மறுப்புக்கு மாற்றமாக நாங்கள் எடுத்த முயற்சி இது என்கிறார் பனூன் காஷ்மீரின் தலைவர் டாக்டர் அஜய் சுர்ங்கூ.

ஸ்ரீநகர் ஜைனல்கதலில் உள்ள மீர் நியாஸ் அகமத் எழுதிய ஒரு கடிதம் அல்சபா என்ற பத்திரிகையில் வெளி வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அவர் எழுதுகிறார்.

"I claim to be a rational and non-communal Muslim but at the same time, I sincerely feel that we Kashmiri Muslims should try our best to thwart any attempt by Pundits to return to the Valley. Pundits have been a cancer and once this cancer is removed, it should not be allowed to re-appear",

“நான் ஒரு முற்போக்கு இன-சார்பற்ற ஒரு முஸ்லிம். அதே சமயம், காஷ்மீர் இந்துக்கள் திரும்பி வரும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் ஒரு புற்றுநோய். இந்த நோய் அகற்றப்பட்டுவிட்டால், மறுபடியும் வர அனுமதிக்கக்கூடாது”

உலகப்புகழ் வாய்ந்த பாமியன் புத்தர்களை நொறுக்கிய இயக்கத்தினரின் செயல்பாடுகளே இப்பொழுது காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது என்று தெளிவாகிறது.

சண்டையில் இருக்கும் அயோத்தியின் மசூதி இடிப்பு, பரோடாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா இடிப்பு என்று அரசியல் பண்ணும் மதச்சார்பற்றவர்கள் இதைப்பற்றி பேசாதது ஏன்?

தீவிரவாதம் சகிப்புத்தன்மை அற்ற ஒரு மனப்பான்மையை உருவாக்குகிறது. தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. இன அழிப்பு தீவிரவாத்த்தின் உச்ச கட்டம். காஷ்மீரில் அமைதி என்பது காஷ்மீர் இந்துக்கள் தன் மண்ணுக்கு திரும்பாதவரை ஒரு கனவாகவே இருக்கும்.

நன்றி