Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Thursday, May 18, 2006

நிஜம் – உண்மையின் நேர்முகம்

அசுத்தப்பட்ட கோவில்கள், தலை முண்டமாக்கப்பட்ட கடவுள் சிலைகள், ஆபாச கிறுக்கல் வரிகள் தாங்கும் கோவில் சுவர்கள்; சிறுபான்மை இந்துக்களின் தகர்ப்பட்ட வீடுகள் மற்றும் காலனிகள்; இந்து புனித நூல்களின் எரிக்கப்பட்ட பக்கங்கள்; ஜீப்பில் கட்டப்பட்டு இழுக்கப்பட்டு கொலையுண்ட கணவன் மனைவி; ‘மதவாதி’ அல்லாத முஸ்லிம்களால் இந்துக்கள் எனப்படும் ‘புற்றுநோய்” அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்...

இவை ஆப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ அல்ல.....

இவை, வருத்தம் தரும் ஆனால் உண்மையான காஷ்மீர் புகைப்படங்கள், சமீபத்தில் ஒரு எக்சிபிஷனில் காட்டப்பட்டன.

'Sakshatkar—An encounter with truth' நிஜம் – உண்மையின் நேர்முகம் – என்று பெயரிடப்பட்ட இந்த எக்சிபிஷன் பனூன் காஷ்மீர் என்ற அமைப்பால் நடத்தப்பட்டது.

தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.

“ஹரி பர்வத் கோட்டையிலிருந்த இருபது சிலைகளில் சிறந்த மகாகாளியின் கருப்பு சிலை யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டது. விலை மதிப்பற்ற 9வது நூற்றாண்டு சிலை ஆனந்த நாக் லோக்பவனிலிருந்து காணாமல் போய்விட்டது. தேவன் கோவில் சிவலிங்கம் மர்ம்மான முறையில் காணாமல் போனது. இவை மறைந்த சில நாட்களிலேயே, குண்டு வெடிப்புகளும் ஆரம்பித்தன” என்றார் இந்த கண்காட்சிக்கு வந்த சல்மான் ருஷ்டி.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சனையை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இன்றும் அவர் கொலைமிரட்டலில் வாழ்கிறார்.

கண்காட்சியின் ஒரு புகைப்படம் இதயத்தை பிசைந்து வருத்தப்பட வைத்தது. புல்வமாவின் ஹெர்மானில் இருந்த ஒரு இந்து தம்பதிகள் ஜீப்பில் கட்டப்பட்டு உயிர் போகும்வரை இழுத்துச்செல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் – இந்துக்களாக இருந்ததுதான்.

ஸ்ரீநகர் பஸந்த்பா கோவிலின் நொருக்கப்பட்ட சிவலிங்கம், பாரமுல்லாவின் கோஜ்பாவின் தலை வெட்டிய ஆதிசங்கர்ர் சிலை; ஸ்ரீநகர் பதேஹ்கதலில் உள்ள ரகுநாத் கோவில் அசிங்கப்படுத்தப்பட்ட சிவலிங்கம்; தரைமட்டமாக்கப்பட்ட அழகிய மூன்றடுக்கு குப்த்கங்கா கோவில் பாரமுல்லாவில்; நவ்கதலில் உள்ள தர்பூணி கோவில் நூலகத்தின் எரிக்கப்பட்ட இந்து வேத நூல்கள்.... எல்லாம் பார்வையில் இருந்தன.

ஔரங்கசீப், ந்தீர்ஷா, தைமூர் இவர்களின் அடக்குமுறையை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்த இந்த கண்காட்சி கஷ்மீரின் ஆறு மாவட்டங்களில் மூன்று வருஷமாக ஆராய்ந்து வெளியிடப்பட்டவை.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த படங்கள் எல்லாமே, அநீதி இழைக்கப்பட்டவர்களோ அல்லது வெளி ஆட்களோ தானாகவே எடுத்த அமெச்சூர் புகைப்படங்கள். சில சரியான கேமரா கூட இல்லாமல் காமாசோமா என்று....

இந்துக்கள் காஷ்மீரில் ஜெனோசைட் (இன அழிப்பு) சந்தித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அரசாங்க தரப்பில் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள். இந்த சுய மறுப்புக்கு மாற்றமாக நாங்கள் எடுத்த முயற்சி இது என்கிறார் பனூன் காஷ்மீரின் தலைவர் டாக்டர் அஜய் சுர்ங்கூ.

ஸ்ரீநகர் ஜைனல்கதலில் உள்ள மீர் நியாஸ் அகமத் எழுதிய ஒரு கடிதம் அல்சபா என்ற பத்திரிகையில் வெளி வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அவர் எழுதுகிறார்.

"I claim to be a rational and non-communal Muslim but at the same time, I sincerely feel that we Kashmiri Muslims should try our best to thwart any attempt by Pundits to return to the Valley. Pundits have been a cancer and once this cancer is removed, it should not be allowed to re-appear",

“நான் ஒரு முற்போக்கு இன-சார்பற்ற ஒரு முஸ்லிம். அதே சமயம், காஷ்மீர் இந்துக்கள் திரும்பி வரும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் ஒரு புற்றுநோய். இந்த நோய் அகற்றப்பட்டுவிட்டால், மறுபடியும் வர அனுமதிக்கக்கூடாது”

உலகப்புகழ் வாய்ந்த பாமியன் புத்தர்களை நொறுக்கிய இயக்கத்தினரின் செயல்பாடுகளே இப்பொழுது காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது என்று தெளிவாகிறது.

சண்டையில் இருக்கும் அயோத்தியின் மசூதி இடிப்பு, பரோடாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா இடிப்பு என்று அரசியல் பண்ணும் மதச்சார்பற்றவர்கள் இதைப்பற்றி பேசாதது ஏன்?

தீவிரவாதம் சகிப்புத்தன்மை அற்ற ஒரு மனப்பான்மையை உருவாக்குகிறது. தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. இன அழிப்பு தீவிரவாத்த்தின் உச்ச கட்டம். காஷ்மீரில் அமைதி என்பது காஷ்மீர் இந்துக்கள் தன் மண்ணுக்கு திரும்பாதவரை ஒரு கனவாகவே இருக்கும்.

நன்றி

8 Comments:

At 9:48 am, Blogger கால்கரி சிவா said...

சார்,

5000 வருடங்களுக்கு முன் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதற்க்கான இரத்தப் பணம் இது.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் புஷ் என்ற அரக்கன் செய்யும் கொடுமைகளின் பலன் இது.

சல்மான் ருஸ்டி என்ற கயவனின் சூழ்ச்சி இது

இவைகளை பதில்களாக எதிர்பாருங்கள்.

எத்தனை முறை கத்துவது.

நம் ஓட்டு வாங்கி அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அறிவுசீவி பத்திரிக்கைகளும், தமிழ்நாட்டின் பகுத்தறிவுவாதிகளும் இவைகளை அவர்களின் சுயநலனக்காக மறக்கிறார்கள்.

நீங்களும் நானும் சங் பரிவாரங்கள் என தீவிரவாதி ஆகிவிடுவோம்

 
At 11:00 am, Blogger Unknown said...

படிச்சா வேதனையா இருக்குங்க.சொந்த நாட்டிலேயே அகதிகளா வாழவேண்டிய நிலைமை இவங்களுக்கு.இதுக்கும் நேரு கூட காஷ்மிர் பண்டிதர் தான்.அவர் வம்சாவளியை சேர்ந்த ராஜிவ் குடும்பத்தினர் ஆட்சியில் இருந்தும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால்,என்னத்தை சொல்ல?

தீவிரவாதத்தை வேரறுக்க மீண்டும் ஒரு சர்தார் வல்லபாய் படேலும்,பகத்சிங்கும் இந்தியாவுக்கு அவசியம் தேவை.

 
At 11:03 am, Blogger வஜ்ரா said...

நல்ல பதிவு,

இதை நான் Organizer ல் படித்தேன். K.Easwar Namboodari எழுதியிருந்தார். இதற்கான படங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் பதித்து விடுங்கள்.

ஆர்கனைசர் என்றால், ஆர்.எஸ். எஸ் சங் பரிவார் என்று திட்டுவார்கள் என்றெல்லாம் பயப்படவேண்டாம். துடுப்பு

இப்படி பயந்து பயந்து தான், இந்துக்கள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

 
At 6:18 pm, Blogger ஜயராமன் said...

நன்றி ஷங்கர் அவர்களே!

இது திரு. நம்பூதிரியின் ஆங்கில கட்டுரையின் சாராம்சத்தை தழுவியதுதான்.

அதை குறிக்க மறந்ததற்கு வருந்துகிறேன்.

எனக்கும் r.s.s க்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. (இதை பெருமையாக சொல்லவில்லை. விளக்கத்திற்காகவே சொன்னேன்.)

நன்றி

 
At 10:24 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

இது போன்ற வன்முறைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடத்த முடியவில்லை என்பதுதான் மதநல்லிணக்கவாதிகளின் (அப்படிக் கூறிக்கொள்கிறவர்களின்) உள்ளார்ந்த வருத்தமே. இது போன்ற செயல்களை செய்யவிடாமல் இருக்கச் செய்யப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அனைத்திற்கும் அவர்கள் கொடுத்துள்ள பெயர் ஹிந்துத்துவா.

இவை தவறில்லையா எனக் கேட்டால், தலித்துகளுக்கு நீங்கள் இதைவிட மோசமான கொடுமைகள் செய்தீர்கள் என்பர். எதில் இவர்கள் மறைக்கும் உண்மை என்னவென்றால் அவர்கள் தலித்துகளுக்கு இழைத்த, இழைத்து வரும் கொடுமைகளை மறைக்க மற்றவர்களின்மேல் பழி போடுவதுதான். அதிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியினர்மேல் மட்டுமே பழி சொல்லக் காரணம் இச்சாதியினரை அழிப்பதன் மூலம் ஹிந்து மதத்தை அழித்துவிடலாம் என்று (தவறாக) முடிவு செய்து கொண்ட மிஷனரிகள்தான்.

ஒரு குறையை மற்றொரு குறையை கூறி நியாயப்படுத்துவது அவ்விரு குறைகளும் நிலைத்து நிற்கத்தான் வகை செய்யும். இவை நிலைத்து நிற்பதால் பயன் பெறுபவர்கள் இவற்றை அழிக்க விடமாட்டார்கள். மதநல்லிணக்கவாதிகள், முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள், வைதீகர்கள், மதத்தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஸோஷியலிஸ்டுகள், காபிடலிஸ்ட்டுகள், பல்வேறு கொள்கைகளைக் கூறுகிற பல்வேறு அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் என்கிற வடிவங்களில் இக்கொடுமைகளைப் பாதுகாப்பதே இவர்கள் வேலையாகவிருக்கும். இதை பாதுகாக்க இவர்கள் பயன்படுத்துவது இக்கொடுமைகள் அழிய வேண்டும் என்கிற பிரச்சாரங்கள்தான் என்பது நடைமுறை முரண்.

யார் முதலில் ஆரம்பித்தார் என்பதில்தான் இவர்கள் கவனமும் கருத்தும் இருக்கும். ஏனென்றால் வரலாறு என்பது நடந்ததாக அறியப்படுகின்ற விஷயங்கள் பற்றிய கற்பனைகளும், நடைமுறை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்பார்ப்புகளுமே. அதனால் பிரச்சினைகள் முடிவடையப் போவதில்லை.

இதற்கு ஒரே மாற்று, ஒரே வழி இதை ஆரம்பித்தவர்கள் யார் என்பது பற்றிக் கவலைப்படாமல், இவற்றை முடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களை போஷிப்பதுதான். மீடியாக்களும் இது போன்ற மனநிலைமை கொண்டவர்களை ப்ரபல்யப்படுத்தவேண்டும். ஷபனா ஆஸ்மி போன்ற சமுதாய நடிகைகளை அல்ல.

>>> தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. <<<<

நான் சிறிது மாறுபடுகிறேன். தீவிரவாதத்தை அனைவரும் விட்டுவிடுவதுதான் தீவிரவாதம் போஷணையாக வளர விடாமல் தடுக்கும். இது போன்ற சூழல் இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அதனால் எந்தவிதத் தீவிரவாதமும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு தீவிரவாதம், ஹிம்ஸை அவஸ்யம். இத்தகைய தீவிரவாதம் சப்போர்ட் செய்யப்படவேண்டும். இந்த வகை தீவிரவாதம் எல்லா விதமான கருத்தியல்களிலிருந்தும், குழு மனப்பான்மையிலிருந்தும் விடுபட்டதாகவும், விலகியதாகவுமிருக்க வேண்டும். அதி முக்கியமாக இத்தீவிரவாதம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேறு எந்த வகை மாற்றங்களையும் அழிக்கும் ஒன்றாக மாறக்கூடாது. இங்கனம் நடைபெற இத்தீவிரவாதமானது ஒரே ஒரு குழுவோடு மட்டும் தங்கிவிடாமல் அனைவருக்குள்ளும் புகுந்து விடவேண்டும்.

பெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் அயுதங்கள் ஏந்துவதும், போர் புரிந்ததும் (புரிவதும்) இது போன்ற ஒரு வன்முறையை ஆதரிப்பதால்தான்.

 
At 10:35 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

என் இக்கருத்தை என்னுடைய வலையில் ஒரு தனிப்பதிவாகப் போட்டுள்ளேன்.

 
At 11:26 pm, Blogger ஜயராமன் said...

ம்யூஸ் அவர்களே,

மிகவும் அருமையாக சொன்னீர்கள்.

தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு It takes a lot of war to maintain Peace என்று. அதைத்தான் நீங்கள் வழிமொழிந்திருக்கிறீர்கள்.

மதமில்லாத நல்லிணக்கம் நமக்கு குறிக்கோள் இல்லை. அது முடியவும் முடியாது.

ஆனால், எல்லா மதங்களும் ஒருசேர தழைக்கும் ஒரு இணக்க சமுதாயம் மட்டுமே குறிக்கோளாக இருக்க முடியும்.

அதற்கு இரண்டு இடைஞ்சல்கள். ஒன்று, சில மதங்களின் அலர்ஜி பாலிசி. மற்ற மதங்களை அழிப்பதே முக்கியமான மதக்கொள்கையாக கொண்டவை. இம் மதங்களின் கொள்கைகளின் இவ்வாறான எண்ணம் (சரியோ, தப்போ) அறவே களையப்பட வேண்டும்.

இரண்டாவது, தனி மனித வாழ்க்கையோடு மதம் நின்று கொல்லவேண்டும். இன்றைய மனித இனம் ஏற்றுக்கொண்டுள்ள சில அடிப்படை வாதங்களிலிருந்து முறண்படும் மத கொள்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, பெண்ணின மதிப்பு. எல்லா மனிதகுலமும் ஓரினம் என்ற உணர்வு; மனித அடிப்படை உரிமை பற்றிய விஷயங்கள் முதலியன.

தங்கள் கருத்துகளுக்கு மீண்டும் நன்றி...

 
At 5:10 am, Blogger Muse (# 01429798200730556938) said...

>>>> சொந்த நாட்டிலேயே அகதிகளா வாழவேண்டிய நிலைமை இவங்களுக்கு.<<<<

காஷ்மீர் பண்டிட்களுக்கு அகதிகள் என்கிற ஸ்டேடஸை இந்திய அரசாங்கம் இன்னும் கொடுக்கவில்லை என்றுதான் கேள்விப்பட்டேன். அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்றோ, அல்லது வேறு ஏதோ ஒன்றுதான் கொடுத்திருக்கிறார்களாம். தெரிந்தவர்கள் தெரிவிக்க வேண்டும்.

>>>> இதுக்கும் நேரு கூட காஷ்மிர் பண்டிதர் தான்.<<<<<

அதுவும் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. அவரது குடும்பம் இஸ்லாமியக் குடும்பம் என்று கூறி அதற்கு ஆதாரங்களை அடுக்கும் தகவல்கள் உண்டு. ஷேக் அப்துல்லாவும் அவரது குடும்பமும் உறவினர்கள் என்பது இதுபோன்ற கருத்துக்களில் ஒன்று. மீள் உருவாக்கம் என்கிற கருத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. உண்மையை அல்லாவே அறிவார்.

 

Post a Comment

<< Home