விருந்து மேசையில் பழக்கம்
சாப்பாட்டு மேசையில் விருந்தின் போது கடைபிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள். (மேலைநாட்டு நாகரீகத்தை ஒட்டி)
1. விருந்து அளிக்கும் வீட்டுக்காரர் மட்டுமே மேசையின் தலைப்பகுதி இருக்கையில் அமரலாம்.
2. நாப்கின் விரிப்பை விரித்து மடியில் போட்டுக்கொள்ளுங்கள். விரிக்கும்போது உதறுவதோ, அசைத்து ஆட்டுவதோ கூடாது.
3. சாப்பிட்டு முடிக்கும்வரை நாப்கின் தங்கள் மடியில்தான் இருக்கும். எல்லோரும் முடித்தபிறகே, அது மேசைக்கு வரும்; தாங்கள் முடித்தபிறகு அல்ல. இடையில் எழுந்து போக வேண்டியிருந்தால், நாப்கினை இருக்கையில் விட்டு செல்லவும். டின்னர் முடித்தவுடன், நாப்கினை மடித்து தட்டின் இடப்புறம் வைக்கவும். தட்டின் மேல் வைக்க கூடாது.
4. கட்லரி (கத்தி, ஸ்பூன், போர்க்) வைத்த முறையை கவனியுங்கள். வெளிப்புறத்திலிருந்து உபயோகப்படுத்தவும். சூப், டெஸர்ட் (இறுதி இனிப்பு) ஸ்பூன்கள் ப்ளேட்டின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.
5. சூப் அருந்த வட்ட ஸ்பூன் உபயோகப்படுத்த வேண்டும். சூப்பை உறிஞ்சி சத்தமாக குடிக்ககூடாது. கோப்பைக்குள் சிறிய அளவு சூப் விட்டுவிடுங்கள்.
6. ஒவ்வொரு முறை உணவுக்கும் புதிய கட்லரியை உபயோகப்படுத்தவும்.
7. கத்தி, போர்க் முக்கியமான பாத்திரங்கள். அவை தாங்கள் உணவு முடித்துவிட்டீர்களா, இல்லை உணவுக்கு இடையில் ஓய்வாக இருக்கிறீர்களா என்று தெரிவிக்கும். சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால், X குறி போல் கத்தி போர்க் இரண்டையும் ப்ளேட்டில் வைக்கவும். டின்னர் முடிந்துவிட்டது என்றால், கத்தி மற்றும் போர்க்கை இணையாக அருகருகே ப்ளேட்டின் மேல் வைக்கவும்.
8. வெஜிடேயரின் ஆக இருந்தால், மெதுவாக வெயிட்டரிடம் உணவு வழங்கும்போது "என்ன உணவு" என்று விசாரிக்கவும். ஒருவேளை, அசைவ உணவு வழங்கப்பட்டுவிட்டால், சத்தம் போடாமல், வெயிட்டரை ப்ளேட்டை அகற்ற சொல்லவும்.
9. பானம் வழங்கும்போது, வேண்டாம் என்றால், மெதுவாக கோப்பையின் மீது கையால் மூடி சைகை காண்பிக்கவும்.
10. டின்னர் நடக்கும் இடையில் எழுந்து செல்லவேண்டி இருந்தால், அவசியம் "மன்னிப்பு" கேட்டு எழுந்திருக்கவும்.
11. இருக்கையில் இருந்தவாறே, மொபைல் போனில் பேசவேண்டாம். அவசியமானால், இருக்கையிலிருந்து எழுந்து (மன்னிப்பு கேட்டுதான்), டேபிளிலிருந்து நகர்ந்து செல்லவும்.
12. டேபிளின் எதிர்புற தூரத்திற்கு கத்தி கூவி பேசாதீர்கள். மேசையின் வேறு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் பேச்சில் குறுக்கே நுழைந்து பேச ஆரம்பிக்காதீர்கள்.
13. வாயில் உணவுடன் பேசாதீர்கள். வாயை (அகல) திறந்து உணவு சாப்பிடாதீர்கள்.
14. ப்ளேட்டில் உணவை குவிக்காதீர்கள். சின்ன போர்ஷனாக எடுத்துக்கொள்ளுங்கள்.
15. சாப்பிடும்போதோ, பேசும்போதோ கத்தி போர்க்கை எதிரே நீட்டாதீர்கள்.
16. சந்தோஷமாக சாப்பிடுங்கள். சந்தோஷமாக பேசுங்கள். ரிலாக்ஸாக இருங்கள். புன்னகை செய்யுங்கள். நல்ல அபிப்ராயம் வரும்படி தோற்றம் அளியுங்கள்.
---------- from Shantesh Jain in Indian Express dt 18 April 06
0 Comments:
Post a Comment
<< Home