Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Wednesday, September 13, 2006

மகிழ்ச்சி தரும் மக்கள் டிவி

போன வாரம் திடீரென்று ஒரு புதிய தமிழ் டிவி சென்னை கேபிளில் வந்தது.

ஒரு பெரிய கொட்டாவியுடன் என்ன என்று பார்த்தேன்.


என் கொட்டாவிக்கு காரணம் இருக்கிறது.. ஒவ்வொரு ஆடி, தைக்கு தவறாமல் ஒரு சேனல் ஆரம்பித்து பின்பு அட்ரஸ் இல்லாமல் போகிவிடுகின்றன. இப்போதைக்கு, தமிழன், வின் ரெண்டு சேனல்கள் அரைகுறை தெம்பில் ஓடிக்கொண்டிருக்கின்றன. (அதற்கு துபாய் பைசைவே காரணம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்). மா டிவி போல பல தமிழ் டிவிக்களை ‘சூரிய’ குழுமம் எரித்துவிட்டதால் சென்னையில் சிக்னல் வருவதில்லை. காஞ்சி சங்கராச்சாரியார் ஆரம்பித்த ‘இந்து டிவி’ மலேசியாவோடு நின்றுவிட்டது. சென்னையில் அதுக்கு எழுதப்படாத தடா!! இப்படி பல சேனல்கள் குறைப்பிரசவங்களாகி போயிருக்கின்றன.

இது ப.ம.க ராமதாஸ் ஐயாவின் டிவி என்று பின்பு தெரிந்துகொண்டேன்.


நான் முதலில் இந்த சேனலை பார்த்தபோது, மக்கள் டிவி ஆரம்ப விழாவை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரே மஞ்சள் துண்டு மயமாக தெரிந்தது. “சரிசரி! மங்களமாய்தான் ஆரம்பித்திருக்கிறார்கள், ‘குரு’ பார்வை இருக்கிறது. கொஞ்சம் வளர சான்ஸ் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டேன்.




டாக்டர் (ஜூனியர்) அன்புமணி வேட்டிக்கட்டிக்கொண்டு இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டு சங்கடமாக உட்கார்ந்திருந்தார்.

மணி, சீனியர் மருத்துவர் ஐயா என்று பலரும் மேடையில். பேராண்டியும் பிரசென்ட். மேடையில் பேண்ட் போட்டிருந்த ஒரே பிரகஸ்பதி அவர்தான்.

ஆகா, கலக்கல்தான் என்று சந்தோஷமாய் இருந்தது!

என் கவனத்தை மேலும் இழுத்தது மருத்தவர் ராமதாஸ் ஐயா அவர்களின் பேச்சுதான்! ராமதாஸ் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

ராமதாஸை பற்றிய பிரபலமான பல அபிப்ராயங்கள் எனக்கும் உண்டு. அவர் சாதிப்பிரியர் என்பது தெரியும். அது ஒரு குறைதான்.

ஆனால், அவரால் பல நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன என்பதால் அவரிடத்தில் எனக்கு மரியாதை.

ஆரம்பத்தில், முடங்கிக்கிடந்த கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிக்கிடந்த பாதைகளை அகலப்படுத்தும் வழியாக அவர் குறுக்கே வளர்ந்திருந்த பல பச்சை மரங்களை அப்புறப்படுத்தினார். அதற்கப்புறம்தான் தமிழகம் பொருளாதார ஹைவேயில் முன்னேற ஆரம்பித்தது.

நடுவில், தமிழக பண்பாட்டை கூறுபோட்டு விற்று காசு பார்க்க முயன்ற பல அதிராவிட (திராவிடமல்லாத) கூத்தாடி கூட்டங்களை சுளுக்கு எடுத்து, அவர்கள் எல்லாம் ரொம்பவும் அனாகரீகமாக நடிக்க பயப்படும்படி செய்ததில் அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

சமீபத்தில், மார்க்கெட்டுக்கு ஏத்தாற்போல் பார்ட்னரை மாற்றும் சீரழிந்த சிங்காரிகளின் "புரட்சி பெண்ணிய" கொள்கைக்கு விளக்குமாற்றை பரிசாக கொடுத்து அவர்களை சிங்கப்பூருக்கு ஓட வைத்ததில் அவரிடம் எனக்கு அலாதி மரியாதை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் இந்த அம்மையாரின் ஆட்சியை மூட்டை கட்ட சப்போர்ட் கொடுத்தவர் என்று அவரிடத்தில் ஒரு பிரியம்.

அவர் தமிழ் பண்பாட்டு மற்றும் மொழி பிரியர். அதை அரசியலுக்காக மட்டும் கையில் எடுக்காமல், உணர்வு பூர்வமாக ஆதரிப்பவர் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாகவே, எது பண்ணிணாலும் அதை உணர்வுபூர்வமாக அவர் பார்த்து செய்வார். அன்றும் அப்படியே!!

அன்று அவரின் பேச்சும் அப்படியே இருந்தது. ரொம்பவும் வினயமாகவும் பேசினார். கலைஞரை இந்த சேனலை ஆதரிக்க கெஞ்சினார்.

“இந்த சானலில் தமிழ்பண்பாட்டுக்கு இணக்கமான நிகழ்ச்சிகளே வைப்பாம். எங்கள் கட்சி கொள்கைகளை வைக்கமாட்டோம்’ என்றார். நம் டோண்டு ஐயாவின் தர்க்க சாத்திரப்படி பார்த்தால், அவரது கட்சிகொள்கைகள் தமிழ்பண்பாட்டை விட்டு விலகியவை என்று ஆகிறது. புன்னகை வந்தது!

ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் டிவி ரொம்பவும் தன்மையாக, மனதை வருடும் இளம் தென்றலாக போய்க்கொண்டிருக்கிறது.


எப்போதும் மனநிறைவை தரும் ப்ரொக்ராம்களாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

காலையில் வில்லுப்பாட்டு, வள்ளுவம். பின் கவிதை. பின் புதுமைப்பித்தன் கதைகள் மற்றும் இலக்கியம். மாலையில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை வரலாற்றை தொடராக. பின் செய்திகள். பின் லோகல் பிரச்சனைகளை தீர்க்க விவாதம். இப்படி போகிறது, தற்போதய தினசரி நிகழ்ச்சிகள்.

இதுவரை சன் கேபிள் காரர்கள் மக்கள் டிவி சிக்னலை நன்றாக விட்டுவைத்திருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் fringe band ல் வந்தது இப்போது மெயின் frequency ல் விட்டுள்ளார்கள். தெளிவாக இருக்கிறது.

நான் டிவி பார்ப்பது ரொம்பவும் குறைச்சல். எல்லா ‘அரைகிழ’ங்களை போலவே நானும் தினசரி வாழ்க்கையை தள்ளுவதிலேயே எனர்ஜி போய்விடுகிறது. இரவு குழந்தைகளோடு போய்விடுவதால் டிவியில் ஆசை போய்விட்டது. பொதிகை பார்க்கலாம் என்றால், மூத்த-பேராண்டியின் புண்ணியத்தில் சிக்னல் சரியாக வராமல் என்னமோ ரூபவாஹிணி பார்ப்பது போல் இருக்கிறது.

இரவில் சில சமயம் வேலை செய்ய வேண்டி லாப்டாப்பும் கையுமாக உட்கார்ந்தால் நான் பார்ப்பது சில காமெடி காட்சிகள். 10 மணிவாக்கில் காமெடி காட்சிகள் போடுவது சரியான டைமிங் சென்ஸ். அப்படி காமெடி போரடித்தால் விண், தமிழன் டிவிகள் பார்ப்பேன். அதில் ‘இஸ்லாத்தின் பெருமை’ என்று காமெடி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

என் டிவி தேவை அவ்வளவே!!

இதற்கு மாறாக, மக்கள் டிவியில் எல்லா காட்சிகளுமே இதமாக இருக்கிறது. என்க்கு பிடித்த வில்லுப்பாட்டு காலையில் பார்க்கிறேன். மாலையில், நாதஸ்வர வித்வான்
ராஜரத்தினம் வாழ்க்கையை சீரியலாக அழகாக காட்டுகிறார்கள்.

இரவில், சேவை-தேவை என்று லோகல் பிரச்சனைகளை காட்டுகிறார்கள்.

உதாரணத்துக்கு மடிப்பாக்கத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வந்து படுத்துவதாக ஒரு அம்மணி ரொம்ப நேரம் பேசினாள். (இந்த பிரச்சனைக்கு நம் தமிழ்மண மன்றத்தின் மடிப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ இலக்கிக்கு (லக்கியை தமிழ்படுத்தியிருக்கிறேன். கண்டுகொள்ளாதீர்கள்...) ஏதாவது தொடர்பா தெரியவில்லை!!)

ஐயப்பன்தாங்கலில் பஸ் வசதி, சைதாப்பேட்டையின் ரேஷன் கடை என்று பல லோகல் விஷயம். என்னடா இது, சர்வதேச டிவியில் அடையாறு-டைம்ஸ் ரேஞ்சுக்கு லோகல் விஷயமா என்று எனக்கு இடறினாலும் நன்றாக இருந்தது. உருப்படியாக பண்ணுகிறார்கள்.

எனக்கு பிடித்த right of information act தொடர்பு பண்ணி பல பிரச்சனைகளை அலசி மதியம் ஒரு காட்சி வருகிறது. பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை.

எல்லாவற்றையும் விட, செய்திகளை நடுநிலையில் தருகிறார்கள். மஞ்சள் கலரை போலவே பச்சை கலரும், கருப்பு கலரும் தென்படுகிறது. (எலட்சன் சமயத்தில் எப்படியோ, பார்க்கவேண்டும்!!) செய்தி வாசிப்பவர்கள் சுத்தமாக தமிழ் படிக்கிறார்கள். அதைவிட, காரேபூரே என்று டிரஸ் பண்ணிக்கொள்ளாமல் பாந்தமாக அடக்கமாக ஆனால் அழகாக இருக்கிறார்கள்.

மற்ற ‘பணக்கார’ சேனலில், செய்தி படிக்கும் ஆண்கள் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சோளக்கொள்ளை பொம்மையாட்டம் இருப்பதும், பெண்கள் என்னவோ மணமேடை ஜோதிகா மாதிரி பட்டும் ஜொட்டுமாக வருவதும் செயற்கையாக இருக்கிறது.

இங்கு அப்படியெல்லாம் இல்லை. தலையில் மல்லிகைப்பூ, அழகான பொட்டு என்று சிம்பிள் டிரஸ். அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.

காட்சிகளில் பணக்காரத்தனம் இல்லை. ஏழைக்கேத்த எள்ளுருண்டை. பட்ஜெட் இடிக்கிறதோ என்னமோ! இது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

மாறாக, தமிழகத்தின் நம்.1 டிவி சேனலில் காட்சிகள் எப்போதுமே கிறுக்குத்தனமாக இருக்கும். காமெடி காட்சி தொகுத்து வழங்குகிறேன் என்று சொல்லி ஒரு இளம்பெண் இறுக்கமான சட்டை போட்டுக்கொண்டு மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்திருந்து கொண்டு, கெக்கப்புக்கே என்று கொஞ்சி பேசுவாள்.

சினிமாபாட்டு டாப்-10 என்று சொல்லி கிராமத்தான் வேஷம் போட்டு ஒருத்தர் உடம்பெல்லாம் சந்தனம் பூசி அசடு வழிவார். மீண்டும் மீண்டும் சிரிப்பு டிராமா என்று சொல்லி ஒரு எழுபது வயது கிழவர் இரட்டை அர்த்தத்தில் புர்ரர்ரர்ர் என்று சவுண்ட் விடுவார்... இன்னும் எத்தனையோ!!

ஆனால், மக்கள் டிவியில் காட்சிகளை கண்ணாபிண்ணாவென்று அமைக்காமல் ஒரு மதிப்பாக அமைக்கிறார்கள். தமிழ் நன்றாக பேசுகிறார்கள்.

சமீபத்தில் எல்லோருக்கும் பிடித்த "தமிழ்" சிக்குன்-குனியா ஜூரம் மக்கள் டிவியையும் பிடித்துவிட்டது. அதாவது 'ஜில்லென்று' என்பதை விட 'சில்லென்று' என்று சொன்னால் தமிழ் என்ற அபிப்ராயம். அதனால், பங்கேற்கும் சிலர் பேரை ‘தமிழ்படுத்தி’ போடுகிறார்கள் (ஜெயலக்ஷ்மியை ‘செயலட்சுமி’ போல). இது எப்போதும் இல்லை. மற்ற சமயங்களில் மறந்துபோய் ஜ, ஸ சேர்த்து போடுகிறார்கள். (ஒருவேளை ஜ, ஸ மாறாமல் போடுபவர்கள் இன்னும் திராவிட சர்டிபிகேட் வாங்கவில்லையோ என்னவோ).

மற்றபடி வேறு குறை சொல்ல முடியாது!!

ஆரம்பத்தில், ராமதாஸ் பேசும்போது ‘திரைப்பட காட்சிகள் ‘அவ்வளவாக’ வராது. கூடுமானவரை!!’ என்றார். நான் இந்த டிவியில் இதுவரை ஒரு சினிமா ப்ரொக்ராம் கூட பார்க்கவில்லை. அதற்கு அவருக்கு ஒரு சபாஷ்!!

இப்படி சுக்குத்தண்ணீராக இருந்தால் இதை யார் பார்ப்பார்கள், இந்த சேனல் தாக்குப்பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இது நன்றாக ஓடவேண்டும் என்பது என் ஆசை. (நான் ‘அன்பேசிவம்’ கூடத்தான் நன்றாக ஓடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..!!)

ஆனால், இப்போது சமுதாயம் இளவட்டங்களின் கையில் அல்லவா இருக்கிறது. அவர்களை எப்படி குத்துப்பாட்டு சேனலிருந்து நகர்த்துவது???? பதில் தெரியவில்லை.

37 Comments:

At 12:24 am, Blogger இளவெண்ணிலா said...

நல்லா காமெடி கலந்து எழுதியிருக்கீங்க..ரசிச்சு படிச்சேன்..:):)

 
At 12:37 am, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

மற்ற சமயங்களில் மறந்துபோய் ஜ, ஸ சேர்த்து போடுகிறார்கள்.

சரி. சரி. எனக்கு கம்பனி கொடுக்க இந்த உலகில் ஒருவர் இருக்கிறார்.

இப்படி சுக்குத்தண்ணீராக இருந்தால் இதை யார் பார்ப்பார்கள், இந்த சேனல் தாக்குப்பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இது நன்றாக ஓடவேண்டும் என்பது என் ஆசை.

நீங்கள் புகழோ, புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருப்பதை பார்த்தால் எனக்கும் இந்த சேனலை பார்க்க ஆஸையாக இருக்கிறது.

எங்கள் வீட்டில் நான் பார்ப்பது ஹிஸ்டரி சேனல், நேஷனல் ஜியோகரஃபிக், அனிமல் ப்ளானட், ஹால்மார்க், தூர்தர்ஷன், மற்ற ஆங்கில சேனல்களில் குங்ஃபூ படங்கள், மற்றும் அனைத்து கார்ட்டூன் சேனல்களும். வேறு எதுவும் பார்ப்பதில்லை. இந்த முறை கேபிள்காரர் பைஸாவை கூட்டியவுடன் "இந்த சேனல்களைத் தவிர மற்ற சேனல்கள் எதுவும் வேண்டாம். முக்கியமாக சன், ஜெயா சேனல்கள் வேண்டாம்" என்றேன். "அப்படியெல்லாம் பண்ணமுடியாது ஸார். எங்களுக்கு என்ன வருதோ அதை தாறோம்" என்று சொல்லிவிட்டார்.

செல்வி பார்த்துக்கொண்டிருந்த அம்மா அன்றிரவு எனக்கு சாதம் போட மாட்டேன் என்றுவிட்டார்கள். வெளியே போய் சாப்பிடவேண்டிய நிலைமை.

மக்கள் டிவி நிஜமாகவே மக்களுக்கான டிவிதான் போலிருக்கிறது. எங்கள் வீட்டில் நான் மட்டும் பார்ப்பேன், கிடைத்தால்.

 
At 12:37 am, Blogger Muse (# 01429798200730556938) said...

மற்றபடி புலிப்பாண்டி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் !!

 
At 1:26 am, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா விமர்சிச்சு எழுதி இருக்கீங்க. நகைச்சுவை கலந்து நல்லா இருக்கு.

///
(நான் ‘அன்பேசிவம்’ கூடத்தான் நன்றாக ஓடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..!!)
///

நான் பார்த்த பல பேர் ஆசைப் பட்டிருகாங்க ஆனா படம் தான் ஓடலை. நான் என் பங்குக்கு ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன்.

 
At 2:02 am, Blogger வடுவூர் குமார் said...

இங்க உட்கார்ந்துகொண்டு நான் எப்படி விமர்சிப்பது??
ஏதோ நல்லது நடப்பது போல் தெரிகிறது.
மென்மேலும் வளர-வாழ்த்துக்கள்.

 
At 2:21 am, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜெயராமன் அண்ணா!
நகைச்சுவையும்,உள்க்குத்தும் உள்ளதால்;ஆவலாகப் படித்தேன். இங்கிருந்து இதெல்லாம் பார்க்க முடியாது. அதுவும் இந்த "சுக்குத்தண்ணி" இங்கு வர சந்தர்ப்பமே! இல்லை. எனினும் முயர்ச்சியைப் பாராட்டுவோம்.
யோகன் பாரிஸ்

 
At 2:32 am, Blogger வெங்கட்ராமன் said...

// காமெடி போரடித்தால் விண், தமிழன்
// டிவிகள் பார்ப்பேன்.
// அதில் ‘இஸ்லாத்தின் பெருமை’ என்று காமெடி
//பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

தயவு செய்து இந்த வரியை நீக்கி விடவும், சிலரது மத நம்பிக்கைகளை கேலி செய்வது சரியல்ல, இந்த வரிகளை பார்த்த போது வந்த கோபததை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. . . . . . . .

இந்திய இறையான்மையை காக்கவும் . . . . .

 
At 2:39 am, Blogger ஜயராமன் said...

வெங்கட்ராமன்,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

தங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். நீங்கள் கோப்ப்படும் அளவுக்கு என் எழுத்து இருந்தது குறித்து வருந்துகிறேன்.

என் பழைய பதிவுகளை பார்த்தால் நான் இந்த இஸ்லாமிய பரப்பும் ப்ரொக்ராம்களை பற்றி எழுதியது தெரியும். அதை ஒட்டி என் வரிகளை பார்த்தால் அதன் தாத்பர்யம் தெரியவரும்.

இந்துமதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கசொல்லும் மதம். இந்துமதம் சாதியை தூண்டும் மதம். இந்துமதம் வந்தேறிகளின் மதம். இந்துமத கடவுள்கள் அசிங்கமானவர்கள். அவர்களுக்கு நாலு கை, நாலு தலை. காளி என்பவள் காட்டுமிராண்டி கடவுள்.

இவை எல்லாம் கூட தமிழ்மணத்தில் எழுதிவருகிறார்களே. (வேண்டுமானால் லிங்க் கொடுக்கட்டுமா?)

அங்கு தங்கள் மறுப்பை நான் பார்த்ததாக ஞாபகம் இல்லையே!!

ஒருவேளை நீங்கள் செகுலர் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறீர்களோ!!

நன்றி

 
At 2:48 am, Anonymous Anonymous said...

////////////////////////////////
என் பழைய பதிவுகளை பார்த்தால் நான் இந்த இஸ்லாமிய பரப்பும் ப்ரொக்ராம்களை பற்றி எழுதியது தெரியும்.
////////////////////////////////

......... பரப்பும் ப்ரொக்ராம்கள் மட்டுமல்ல மற்ற . . . . .பரப்பும் ப்ரொக்ராம்களு வருகின்றன, அவைதான் மிக ஆபத்தானவை . . . . .
அவற்றைப் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.

 
At 2:49 am, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

காஞ்சி சங்கராச்சாரியார் ஆரம்பித்த ‘இந்து டிவி’ மலேசியாவோடு நின்றுவிட்டது.

இப்படி ஒரு சேனல் வந்ததே எனக்கு இப்போது நீங்கள் எழுதித்தான் தெரியும். இன்னும் இருக்கிறதா?

அவரவர்கள் ஒரு குறிப்பிட்ட சேனலின் அலைவரிஸை என்ன என்று தெரிந்துகொள்ளுமளவுக்கு இருக்கிறார்கள். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.

சும்மாவா சொன்னார்கள் "நாலெட்ஜ் இஸ் பவர்" என்று. அதனால்தான் பவரில்லாதவர்களாக ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

 
At 2:52 am, Blogger வெங்கட்ராமன் said...

-----------------------------------
இந்துமதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கசொல்லும் மதம். இந்துமதம் சாதியை தூண்டும் மதம். இந்துமதம் வந்தேறிகளின் மதம். இந்துமத கடவுள்கள் அசிங்கமானவர்கள். அவர்களுக்கு நாலு கை, நாலு தலை. காளி என்பவள் காட்டுமிராண்டி கடவுள்.

இவை எல்லாம் கூட தமிழ்மணத்தில் எழுதிவருகிறார்களே. (வேண்டுமானால் லிங்க் கொடுக்கட்டுமா?)
-----------------------------------

எனக்கு அந்த விபரங்கள் தெரியாது,
வலைப்பதிவில் புதிதாக் இனைந்துள்ளேன்.

 
At 2:53 am, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஜயராமன்,

சில விஷயங்களை எல்லாம் பத்தி பேசறதில்லைன்னு முடிவெடுத்திருக்கிறேன். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லீட்றேன்.

மத்தவங்க தப்பு செய்யறாங்கன்னு நானும் செய்யறேன்னு சொல்றது சரியல்ல.

மத்தவங்க தப்பை இன்னொரு தப்பு மூலமா திருத்தலாம் என்பது முடியாது.

எனக்கு இஸ்லாம் பிடிக்காது, முஸ்லீம்களை வெறுக்கிறேன் என்று சொன்னால் கூட தவறில்லை அவர் அப்படி பண்ணறார் அப்படீங்கறதுனால் பண்ணறது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. அதுக்கு மேல உங்க இஷ்டம்.

இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை.

///
இவை எல்லாம் கூட தமிழ்மணத்தில் எழுதிவருகிறார்களே. (வேண்டுமானால் லிங்க் கொடுக்கட்டுமா?)

அங்கு தங்கள் மறுப்பை நான் பார்த்ததாக ஞாபகம் இல்லையே!!

ஒருவேளை நீங்கள் செகுலர் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறீர்களோ!!
///

 
At 2:58 am, Blogger ரவி said...

/////ஆரம்பத்தில், முடங்கிக்கிடந்த கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிக்கிடந்த பாதைகளை அகலப்படுத்தும் வழியாக அவர் குறுக்கே வளர்ந்திருந்த பல பச்சை மரங்களை அப்புறப்படுத்தினார். அதற்கப்புறம்தான் தமிழகம் பொருளாதார ஹைவேயில் முன்னேற ஆரம்பித்தது.//////

உங்கள் இந்த பதிவை படித்து எல்லாரும் என்ன சொல்லுவாங்களோ என்பது எனக்கு தெரியாது..

ஆனால் இந்த வரிகளை படித்து 'கொல்' என சிரித்துவிட்டேன்...

குழலூதும் கண்ணன் அனுக்கிரகம் கிடைக்கட்டம்..

 
At 3:10 am, Blogger ஜடாயு said...

ஜயராமன்,

நகைச்சுவைக்கு நடுவில் நடமாடிய நையாண்டி நன்றாயிருந்தது.

வெங்கட்ராமனுக்குக் கொடுத்த நெத்தியடியும் தான்.


ஒரு காமெடி பீசுக்கு நடுவில் வரும்இஸ்லாம் பற்றிய சிறு எள்ளலுக்கும் கச்சை கட்டிகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போலி செக்யூலர் ஆசாமிகள் இந்து மதத்தை ரவுண்டு கட்டி எதிர்க்கும் சமாசாராங்களைக் கூடக் கண்டுகொள்ள மாட்டர்கள்.

அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
அஞாத பொருளில்லை அவனியிலே
என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

 
At 4:03 am, Blogger Muse (# 01429798200730556938) said...

வெங்கட்ராமன்,

எனக்கு அந்த விபரங்கள் தெரியாது,
வலைப்பதிவில் புதிதாக் இனைந்துள்ளேன்.


க்ளிக் செய்ய: http://copymannan.blogspot.com/

இது ஒரு மென்மையான ஸாம்பிள்தான்.

 
At 4:21 am, Blogger நன்மனம் said...

வாசு பதிவுக்கு அப்புறம் காமெடி கலந்த கருத்துள்ள பதிவு.

மக்கள் தொலைக்காட்சி வளர, மக்கள் விரும்பினால் மட்டுமே முடியும்.

 
At 4:29 am, Blogger ஜயராமன் said...

குமரன் எண்ணம் சார்,

////மத்தவங்க தப்பு செய்யறாங்கன்னு நானும் செய்யறேன்னு சொல்றது சரியல்ல.

மத்தவங்க தப்பை இன்னொரு தப்பு மூலமா திருத்தலாம் என்பது முடியாது.////

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் பண்ணினது தப்புதான். ஆனால், பிற மதத்தை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், மத மாற்றம் ஒழிய வேண்டும். பிற மதத்தை குற்றம் சொல்லாமல் மதமாற்றம் எப்படி நடக்கும்? மதமாற்றமும் தேவை, ஆனால், மதங்களை குற்றம் சொல்லக்கூடாது என்று பசப்பினால் அது இந்துக்களை அழிக்கும் முயற்சிதான். ஏனென்றால், எல்லா இளிச்சவாயன்களுக்கும் இருப்பிடம் இந்துமதம்தான். இந்த பதிவில் இதை மேலும் சொல்ல நான் விரும்பவில்லை. நீங்கள் என்னை தவறாக நினைக்கவேண்டாம்

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

 
At 4:33 am, Blogger Muse (# 01429798200730556938) said...

பிற மதத்தை குற்றம் சொல்லாமல் மதமாற்றம் எப்படி நடக்கும்?

நெத்தியடி.

 
At 5:21 am, Blogger ஜயராமன் said...

இதுவரை நான் பார்த்த சின்ன பொழுதில் எல்லாம், அரசாங்க விளம்பரம் ஒன்னிரண்டை பார்த்தேன். நூத்துக்கு நூறு என்று திமுகவின் ஆட்சி சாதனைகளை சொல்லும் விளம்பரமும் பார்த்தேன். ஆனால், அது கட்சி விளம்பரமா, அரசாங்கமா என்று தெரியவில்லை.

அவ்வளவுதான் வருகிறது.

நன்றி

 
At 7:48 am, Blogger ஜயராமன் said...

பின்னூட்டம் இட்ட எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...

ம்யூஸ் சார்,

////எங்கள் வீட்டில் நான் பார்ப்பது ஹிஸ்டரி சேனல், நேஷனல் ஜியோகரஃபிக், அனிமல் ப்ளானட், ஹால்மார்க், தூர்தர்ஷன், மற்ற ஆங்கில சேனல்களில் குங்ஃபூ படங்கள், மற்றும் அனைத்து கார்ட்டூன் சேனல்களும். /////

நீங்கள் சொன்ன ஒரு சானலும் சென்னையில் தெரியாது. ஏன் என்றால் இவை பே சானல்கள். செட்டாப் பாக்ஸ் வேண்டும். நாலாயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் சர்வீஸ் சார்ஜ். அதனால், எங்களைப்போன்ற பாவப்பட்ட ஜனங்களுக்கு தமிழ்சானலும், அழுகை சீரியலும்தான் கிட்டியது. ஹூம்!!! எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்!!!

 
At 7:53 am, Blogger Unknown said...

//‘இஸ்லாத்தின் பெருமை’ என்று காமெடி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.//
//வில்லுப்பாட்டு காலையில் பார்க்கிறேன். மாலையில், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் வாழ்க்கையை சீரியலாக அழகாக காட்டுகிறார்கள்.//

ஆகா. நல்ல காமெடி!!!

//தமிழன், வின் ரெண்டு சேனல்கள் அரைகுறை தெம்பில் ஓடிக்கொண்டிருக்கின்றன. (அதற்கு துபாய் பைசைவே காரணம்//

விண் டி.வி. இப்போது அம்மா கையிலே. உலகறிந்த ரகசியம் உங்களுக்குத் தெரியாதா?

 
At 7:58 am, Blogger ஜயராமன் said...

சுல்தான் ஐயா,

வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

வின் டிவியை பற்றிய தகவலுக்கு நன்றி. அம்மா கையில் போனதென்றால் கவலையான விஷயம்தான்! ஜைனுல் அம்மாவுக்கு ஆதரவாக பிரிந்தது தெரியும்.. ஆனால்.. டிவியுமா!! என்னவோ போங்க. சான் ஏறினால் முழம் சறுக்குகிறதே!

நன்றி

 
At 9:04 am, Blogger Sundar Padmanaban said...

நான் ம்யூஸ் அவர்கள் 'ச'வுக்கு பதில் 'ஸ' போட்டு எழுதுவதை நகைச்சுவையாகச் சிரித்துக்கொண்டே படிக்க்கிறேன். அவர் ஸ்டைலில் ஒரு பின்னூட்டம்.

ஸரியான சானலாக இருக்கும் போலிருக்கே. மக்கள் டிவின்னு ஸொல்றாங்களா இல்ல மக்கள் தொலைக்காட்சின்னு ஸொல்றாங்களான்னு ஸொல்லவும்.

 
At 10:08 pm, Blogger ஜயராமன் said...

ம்யூஸ் சார்,

////இப்படி ஒரு சேனல் வந்ததே எனக்கு இப்போது நீங்கள் எழுதித்தான் தெரியும். இன்னும் இருக்கிறதா?////

இது எனக்கு வியப்பை தரவில்லை. தற்போதெல்லாம் காஞ்சி மடத்தின் பல நிகழ்ச்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. நம் மீடியா எத்தனை பாரபட்சமானது, பயந்தாங்கொள்ளித்தனமானது, வியாபார நோக்கம் கொண்டது என்பது இதிலிருந்து எனக்கு வெளிப்படையானது. கொஞ்சம் பவரில் இருந்தால் ஆஹா, ஓகோ என்று குதிப்பதும் பின்னால் பிரச்சனை மாதிரி தெரிந்தால் கழட்டி விடுவதும் மிகவும் ஓபனாக நடக்கிறது. உதாரணத்திற்கு, ஜயேந்திரரின் 70ஆவது விழா பொதிகையில் நேரடியாக ஒளிபரப்பானது. நேரடியாக ஒளிபரப்பாகும் அளவுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. இந்தியாவின் அத்தனை பிரமுகர்களும் அங்கே ஜால்ராவுடன் ஆஜர். போன வாரம் அவரின் 72 வது பிறந்தநாள் நடந்தது. பத்திரிக்கைகளில் ஒரு பத்தி கூட காணோம்.

இது ஜயேந்திர்ருக்கு மட்டும் அல்ல. எல்லோருக்கும்தான். இப்போது நீங்கள் மெட்றாஸ் வந்தீர்கள் என்றால், மூலைக்கு மூலை கலைஞரே, தமிழே, ஒளியே என்று கருணாநிதி புகழ் பாடும் தட்டிகள் சாலைகளில் ராட்சஸன் போல நிற்கின்றன. இவையெல்லாம் 6 மாதம் முன்பு எங்கிருந்தன தெரியவில்லை. பச்சை கலர் தட்டிகளை இப்போதெல்லாம் காணோம்!!

எல்லாம் சீசனுக்கு வரும் பட்சிகள் போல ஆகி விட்டன.

இந்த டிவி விஷயத்தில் பலர் கையை கடித்துக்கொண்டுள்ளார்கள். பாரதிராஜாவின் தமிழ்திரை சானல் மிக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்து ஆறு மாதங்களில் முடங்கி போனது. எல்லா சேனல்களும் "சூரியனுக்கு" அருகேயும் போக முடியாமல், விலகியும் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நன்றி

 
At 10:37 pm, Blogger கோவி.கண்ணன் [GK] said...

ஜெயராமன் சார்...!

போட்டோவில் பார்த்திங்களா !
பச்சை வண்ணம் ...!

என்னமோ நடக்குது ஒலகத்திலே...!

அப்பறம் பதிவுக்கு கருத்துக்கு வருகிறேன் :

சில இடத்தில் தலையில் கொட்டியும், சில இடங்களில் முதுகில் தட்டிக்கொடுத்தும் நகைச்சுவையாக உங்கள் பாணியில் எழுதியிருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் !

வாழைப்பழ ஊசி...!

 
At 10:53 pm, Blogger கோவி.கண்ணன் [GK] said...

மஞ்சள் பேட்ஜ்களையும், மக்கள் என்று மஞ்சள் கலரில் எழுதியிருப்பதையும், கலைஞர் மீது உள்ள அபிமானத்தில் சொல்லாமல் விட்டுவிட்டேன் !

:)

 
At 10:56 pm, Blogger ஜயராமன் said...

கண்ணன் சார்,

என்ன சார் பத்திரிக்கை காரங்க மாதிரி என்னத்தய்யோ கிளப்பறீங்க, பச்சை கலருக்கு இத்தன மதிப்பா.

நீங்க சொன்னப்பறம்தான் பார்த்தேன். மக்கள் டிவி எம்ப்ளத்திலேயே மஞ்சள் பச்சை ரெண்டையும் சேர்த்துதான் போடறாங்க.

நம்ப ஐயா நல்லா உஷாராதான் இருக்காறு!!! ஆமாமா. ஒரே கொட்டகையை நம்பி குதிரை ஓட்ட முடியுமா!!!

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

 
At 11:19 pm, Anonymous Anonymous said...

ஜயராமன்..

தயவு செய்து, கிழே உள்ள பின்னுட்டதை பதிப்பிக்கவும்....

"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."

அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.

அ மு க
செந்தழலார் பாசறை
அல்சுர், பெங்களூர்

 
At 10:34 pm, Blogger ரவி said...

தலை, உங்க கேள்விக்கு பதில் தந்துவிட்டேன்...

வாருங்கள் என் பதிவுக்கு

 
At 9:40 am, Blogger enRenRum-anbudan.BALA said...

ஜயராமன்,

I am surprised that you possess such profound sense of Humour.

Good posting, Enjoyed reading it !

 
At 12:04 pm, Blogger சரவணகுமார் said...

நல்ல பதிவு...

""டாக்டர் (ஜூனியர்) அன்புமணி வேட்டிக்கட்டிக்கொண்டு இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டு சங்கடமாக உட்கார்ந்திருந்தார்."""

காமாலைக் கண் ?:)

""ஆரம்பத்தில், முடங்கிக்கிடந்த கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிக்கிடந்த பாதைகளை அகலப்படுத்தும் வழியாக அவர் குறுக்கே வளர்ந்திருந்த பல பச்சை மரங்களை அப்புறப்படுத்தினார். அதற்கப்புறம்தான் தமிழகம் பொருளாதார ஹைவேயில் முன்னேற ஆரம்பித்தது.

நடுவில், தமிழக பண்பாட்டை கூறுபோட்டு விற்று காசு பார்க்க முயன்ற பல அதிராவிட (திராவிடமல்லாத) கூத்தாடி கூட்டங்களை சுளுக்கு எடுத்து, அவர்கள் எல்லாம் ரொம்பவும் அனாகரீகமாக நடிக்க பயப்படும்படி செய்ததில் அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

சமீபத்தில், மார்க்கெட்டுக்கு ஏத்தாற்போல் பார்ட்னரை மாற்றும் சீரழிந்த சிங்காரிகளின் "புரட்சி பெண்ணிய" கொள்கைக்கு விளக்குமாற்றை பரிசாக கொடுத்து அவர்களை சிங்கப்பூருக்கு ஓட வைத்ததில் அவரிடம் எனக்கு அலாதி மரியாதை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் இந்த அம்மையாரின் ஆட்சியை மூட்டை கட்ட சப்போர்ட் கொடுத்தவர் என்று அவரிடத்தில் ஒரு பிரியம்."""""


:))))

 
At 7:42 pm, Blogger ஜயராமன் said...

சரவணன் அவர்களே,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

///காமாலைக் கண் ?:) ////

அப்படித்தோன்றவில்லை. காமாலைக்கண்ணாக இருந்தால் வேட்டியையா இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டு சங்கடமாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். :-)

நன்றி

 
At 11:59 pm, Blogger சரவணகுமார் said...

நக்கலா :) காமாலைக்கண் உங்களுக்கா அப்படீன்னு கேட்டேன்...அவரு இழுத்து விட்டுக்குறதை மட்டும் ஸ்பெசல்லா சொன்னீங்களே அதுக்காக...
அப்புறம் சரவணக்குமாரை சரவணனா ஆக்கிட்டீங்களே :) அப்படியே "என்ன கொடுமை இது சரவணன் " னு சொல்லி நயன்தாராவை எனக்கு ஜோடியாக்கிறாதீங்க...சரவண குமார்ன்னு முழு பேரையும் எழுதுங்க :)

 
At 2:19 am, Blogger ஜயராமன் said...

அடி ஆத்தி,

என்னிடம் அப்போதைக்கு இருந்த ஒரே போட்டோ இதுதான். பாஸ்போர்ட்டுக்காக எடுத்தது.

நன்றி

--------

சரவணகுமார் அவர்களே,

சரவணன் என்றாலும் குமார் என்றாலும் பொருள் - என் அப்பன் முருகன் தானே. அப்புறம் என்ன? :-)

தங்கள் பெயரை தவறாக (அரைகுறையாக) எழுதியதற்கு மன்னிக்கவும்

நன்றி

 
At 5:59 am, Blogger bala said...

ஜயராமன் அவர்களே,

மிகவும் ரசித்துப் படித்தேன்.

வாழ்த்துக்கள்.

சொல்வதைப் பார்த்தால் சன்,ஜெயா போன்றவற்றை விட தரமான சானல் என்று தோன்றுகிறது.

பாலா

 
At 9:59 am, Blogger ஜயராமன் said...

நன்றி பாலா அவர்களே.

உங்கள் profile ல் ஏதாவது ஒரு படத்தை சேர்த்துவிடுங்கள். பின் நீங்கள்தான் பின்னூட்டம் இடுகிறீர்களா, அல்லது உங்கள் பெயரில் யாராவதா என்று நாங்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி

 
At 10:55 am, Blogger கதிர் said...

சமத்காரத்துடன் எழுதி இருக்கிறீர்கள்.

மிகவும் ரசித்து படித்தேன்.

//மற்ற ‘பணக்கார’ சேனலில், செய்தி படிக்கும் ஆண்கள் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சோளக்கொள்ளை பொம்மையாட்டம் இருப்பதும், பெண்கள் என்னவோ மணமேடை ஜோதிகா மாதிரி பட்டும் ஜொட்டுமாக வருவதும் செயற்கையாக இருக்கிறது.//

:))

நல்ல காமெடி.. :))

 

Post a Comment

<< Home