Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Thursday, August 24, 2006

வந்தே மாதரம்!

இது பாடலா?

ஒருமை இந்தியாவின் பேரிகை முழக்கமா?

இந்த வரிகள் நம் இந்திய பெருமையை சீர்தூக்குகிறதா?

ஆமாம்!!

இது ஒரு அற்புதமான பாடல். பக்கிம் அவர்களின் மிக Inspired பாடல் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது ரபீந்திரநாத் தாகூர் அவர்களால் இசை அமைக்கப்பட்டு முதலில் பாடப்பட்டது. இதன் கருத்தாழத்தை மேலும் வெளிக்கொணர்ந்தவர் அரபிந்தோ தான்.


ஆனால், இதன் கவிநயத்துக்காக இதை பாட வேண்டாம்.


இந்த பாடல் முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டு பின்னர் முதல் இரண்டு பாடல்களே இதில் தேசிய பாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய பாடலை ஒரு தேசபக்தன் பாடி பெருமை கொள்ள முடியாத சிறுமனமாகி விட்டோம் நாம்?

அந்த பாடல் எதற்காக, யாரால் எழதப்பட்டது என்பதா முக்கியம்?

இவ்வாறு கேட்பதே நம் தேசபக்திக்கு இழுக்குதான்.

ஜனகனமண பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. நாம் விரும்பும் "ஸாரே ஜஹாங் ஸே அச்சா" பாட்டுக்கும் ஒரு இயற்பாளர் உண்டு. ஆனால், இந்த பாடல்கள் எல்லாமே, அதன் வரலாற்றை, ஆசிரியரின் குறைநிறைகளை ஏந்தி வருவதில்லை.

வந்தே மாதரம் என்ற கூக்குரலில் பல லட்சக்கணக்கான தேசபக்தர்களின் குருதியை பார்க்க முடியவில்லையா! இந்த கூவல் செய்துகொண்டுதானே அவர்கள் மடிந்தார்கள், போராடினார்கள். அதற்காக நான் இந்த பாட்டை மதிக்கிறேன். அதன் பூர்வீகமும், அதன் மதமும் எனக்கு ஒரு இலக்கில்லை.



பாகிஸ்தானுக்கு வித்திட்டவரின் ஸாரே ஜஹாங் ஸே அச்சா என்பது அவன் சொன்ன என் மண்ணைத்தானே. அரபி மொழியில் ஹிந்திஸ்தான் என்றால் இந்தியாதானே! அதற்காக மொழியை மாற்றவா முடியும்! அரேபியர்களே நீங்கள் இந்தியா என்று சொன்னால்தான் சரி என்றால் அவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்களே!

மனமும், உறவும் விகாரமான சூழலில் நாட்டு பற்று என்பது மக்களுக்கு ஒரு பேரம் பேசும் பொருளானது மிகவும் துரதிர்ஷட்மானது.

இன்று காலை ஹைதராபாத் முல்லாவினால் ஒரு பட்வா பிறப்பித்து இப்பாடல் பாடப்படும் பள்ளிகளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் படிக்க கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம், நல்ல இஸ்லாமிய மக்களை மதமா, தேசபற்றா என்று தேர்ந்தெடுக்க சொல்கிறது. இது மிகவும் துயரமான நிலை.

இந்த பாடலின் முதல் இரண்டு செய்யுளில் அற்புதமாக தேசத்தை தாயாக உருவக படுத்தியுள்ளது. தாயே வணக்கம் என்று சொல்வதில் மதக்கோட்பாடுகள் குறிக்குடும் என்று எண்ணுவதே சரியான மத விளக்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது இஸ்லாமிய கொள்கை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

தவறு என்று சாதித்தால் எல்லாமே தவறுதான். "ஸாரே ஜஹாங் ஸே அச்சா" என்பதே இஸ்லாத்துக்கு எதிரானதுதானே! (இந்தியாதான் எல்லா இடங்களையும் விட சிறந்தது என்பது மெக்கா, மெதினாவே தரம் குறைக்கவில்லையா!) அது ஏன் பாடும்போது மனம் இடறவில்லை சிலருக்கு! இது விதண்டாவாதம் இல்லை. பலர் பல சமயங்களில் சொன்னதுதான்.

சினிமாக்களில் குத்தாட்டம் போடும் இஸ்லாமிய சகோதரிகளும், டாஸ்மாக்கில் ஊழியம் செய்யும் இஸ்லாம் சகோதரர்களும் இஸ்லாமிய கோட்பாடுகளை மீறியவர்கள்தான்.

ஆனால், இது காலத்தின் கோலம். வயிற்றுப்பாட்டின் கட்டாயம்.

அவரவர்களுக்கு அவரவர் அளவுகோலே மதத்தில் நியாயம்.

அதிலெல்லாம் வராத இஸ்லாமிய அடைகாப்போர், இதில் குரல் கொடுப்பதை முதில் கண்டிக்க வேண்டியது இஸ்லாமிய சகோதர்ர்களே!

வந்தே மாதரம்

நன்றி

25 Comments:

At 6:29 am, Blogger Muse (# 01429798200730556938) said...

இனிய நீர்ப் பெருக்கினை ! இன்கனி வளத்தினை !

தனி நறு மலயத் தண்காற் சிறப்பினை !

பைநிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே ...)



வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை !

மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை !

குறுநகையின் சொலார் குலவிய மாண்பினை !

நல்குவை இன்பம் வரம்பல நல்குவை! (வந்தே....)



முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்

அறுபது கோடிதோ ளுயர்த்துனக் காற்றவும்

திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன் ?

அருந்திறலுடையாய் ! அருளினை போற்றி !

பொருந்தலர் படபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே....)



நீயே வித்தை, நீயே தருமம்!

நீயே இதயம், நீயே மருமம்!

உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே ....)



தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே

சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!

ஆலயன் தோறும் அணிபெற விளங்கும்

தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே.....)



ஒருபது படைகோளும் உமையவள் நீயே

கமலமெல் லிழைகளிற் களித்திடுங் கமலைநீ!

வித்தைநன் கருளும் வெண்மலர் தேவிநீ ! (வந்தே....)



போற்றி வான் செல்வி ! புரையிலை, நிகரிலை !

இனியநீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!

சாமள நிறத்தினை, சரளமான தகையினை!

இனியபுன் முறுவலாய்! இயக்குனல் லணியினை !

தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே...)

 
At 6:48 am, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜெயராமன் அண்ணா!
படித்ததும் வேதனையாக இருந்தது. ஏன்? இப்படி நடக்கிறார்கள். இதனால் சாதிக்கப் போவதென்ன,?
யோகன் பாரிஸ்

 
At 6:57 am, Blogger ஜயராமன் said...

ம்யூஸ் சார்,

அருமையான மொழிபெயர்ப்பை வழங்கியதற்கு நன்றி

மிக அருமையாக இருக்கிறது.

இதையும் மனனம் செய்ய முயலுவேன்.

இதன் ஆசிரியர் ஒருவேளே.... தாங்களோ.... சொன்னால் சந்தோஷப்படுவேன்

===============

நக்கீரன் ஐயா,

என்ன இப்படி சொல்லிபிட்டீங்க. எனக்கு முத்திரை குத்திட்டீங்களா! நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நீங்கள் என்னை முத்திரை குத்தலாமே! என் பதிவு நியாயமானது என்று சொன்னதற்கு மனமார்ந்த நன்றி!

=========

யோஹான் பாரீஸ் சார்,

மிக்க நன்றி

இது ஒரு எதிர் விளைவு. என் பார்வையில் இஸ்லாம் சமுதாயம் இப்போது கலங்கிப்போய் இருக்கிறது. எத்தை கண்டாலும் பயந்து தன் சமுதாயத்தை காப்பாற்ற இப்படி இன்னும் நிலையை மோசமாக்கிக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சமீபத்தில், லாலு மந்திரி அவர்கள், பாம்பேயில் லோக்கல் ரயிலில் பஜனை
பாடுவது தடை செய்தார் (பஜனை பாட்டு அங்கே பல மணி நேர ரயில் பிரயாணத்தில் ரொம்ப சகஜம். பல பேர் சேர்ந்து செய்வார்கள். பில கோஷ்டிகள் சினிமா பாட்டும் பாடுவது உண்டு) காரணம் நாய்ஸ் பொல்யூஷன் என்று சொன்னார். உடனே மசூதியில் கத்துவதை நிறுத்து என்று சிவசேனா ஆரம்பித்தது. இதெல்லாம் தேவையா!

தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி

 
At 7:00 am, Blogger வடுவூர் குமார் said...

திரு.ஜயராமன்
எனக்கென்னவோ இந்த (எல்லாம்) மத குருமார்களாள் ஒருவித நன்மையும் இல்லையோ என்று தோனுகிறது.
காலை எழுந்ததிலிருந்து ராத்திரி படுக்கபோகும் வரை மதம் என்னை துரத்தினால் அது நன்மைக்காவா?
புத்தி மழுங்கிப்போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. எனக்கல்ல!!

 
At 7:05 am, Blogger ஜயராமன் said...

குமார் சார்,

/// மத குருமார்களாள் ஒருவித நன்மையும் இல்லையோ என்று தோனுகிறது. ///

சரியாக சொன்னீர்கள்.

எனக்கு மற்ற மத்த்தை பற்றி அதிகமாக பரிச்சயம் இல்லை.

ஆனால், என் இந்து மதத்தில் மத குருமார் என்பதே கிடையாது. உன் குருவை நீயே தேர்ந்தெடுத்துக்கொள். மேலும், பல குருமார்கள் உன் ஆன்மீக விளக்கை ஏற்றினால் நீ அதை ஏற்றுக்கொள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அது ஒரு சிறந்த தத்துவம் என்று நினைக்கிறேன்.

மேலும், மத குருமார்கள் ஆன்மீக விளக்கை நம் மனங்களில் ஏற்ற முயற்சிப்பதோடு எல்லையில் நின்று விட வேண்டும். அவர்கள் வாழ்க்கையையும், சமுதாயத்தையும், அரசியல் சக்திகளையும் வழிமொழிவது தவறு என்று நினைக்கிறேன்.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

 
At 7:11 am, Blogger Muse (# 01429798200730556938) said...

இதன் ஆசிரியர் ஒருவேளே.... தாங்களோ.... சொன்னால் சந்தோஷப்படுவேன்

இல்லை. நானில்லை. மூலத்திலிருந்ததை யுனிக்கோடில் தட்டி, தகடை நேர் செய்தது மட்டுமே என் பணி. மூலம் இங்கே:

http://www.freeindia.org/vmataram/vmataram_tamil.shtml

 
At 7:12 am, Blogger Muse (# 01429798200730556938) said...

Wanted to share the following quote with you. (My apologies if it is not exactly suitable in this place.)

If you want to be religious, enter not the gate of any organised religions. They do a hundred times more evil than good, because they stop the growth of each one's individual development.

Study everything, but keep your own seat firm. If you take my advice, do not put your neck into the trap. The moment they try to put their noose on you, get your neck out and go somewhere else. As the bee culling honey from many flowers remains free, not bound by any flower, be not bound. ...Enter not the door of any organised religion.

Religion is only between you and your God, and no third person must come between you. Think what these organised religions have done! What Napoleon was more terrible than these religious persecutions? ...If you and I organise, we begin to hate every person. It is better not to love, if loving only means hating others. That is no love. That is hell!

If loving your own people means hating everybody else, it is the quintessence of selfishness and brutality, and the effect is that it will make you brutes. Therefore, better die working out your own natural religion (path) than following another's natural religion, however great it may appear to you.

- Vivekananda [The Complete Works Volume 1 (Page:474)]

 
At 7:33 am, Blogger dondu(#11168674346665545885) said...

வந்தே மாதரம் பாடலுக்கு இசை அமைத்தவர் மிக பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் ரபீந்திரநாத் தாகூர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 7:35 am, Blogger Muse (# 01429798200730556938) said...

தாயே வணக்கம் என்று சொல்வதில் மதக்கோட்பாடுகள் குறிக்குடும் என்று எண்ணுவதே சரியான மத விளக்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது இஸ்லாமிய கொள்கை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

தாயே என்று சொல்லுவதை இஸ்லாம் மதத்திற்கு எதிரான தவறு என்று சொல்ல வாய்ப்பு குறைவு என்றுதான் தோன்றுகிறது. காரணம் கீழே:

My Bengal of gold, I love you
Forever your skies, your air set my heart in tune as if it were a flute,
In Spring, Oh mother mine, the fragrance from your mango-groves makes me wild with joy-
Ah, what a thrill!
In Autumn, Oh mother mine,
in the full-blossomed paddy fields,
I have seen spread all over - sweet smiles!
Ah, what a beauty, what shades, what an affection
and what a tenderness!
What a quilt have you spread at the feet of banyan trees and along the banks of rivers!
Oh mother mine, words from your lips are like Nectar to my ears!
Ah, what a thrill!
If sadness, Oh mother mine, casts a gloom on your face,
my eyes are filled with tears!


இது பங்களாதேஷின் தேசிய கீதம்.

 
At 8:20 am, Blogger ஜயராமன் said...

டோண்டு சார்,

தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. தாகூர் மெட்டு போட்டதை நான் என் பதிவில் குறித்துள்ளேன். அதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

ம்யூஸ் சார்,

பின்னூட்டத்திற்கு நன்றி. விவேகானந்தர் நிறுவியதே இப்போது ஒரு பெரிய ஸ்தாபனமாகி organized gate of religion ஆகிவிட்டதோ என்னவோ?

நன்றி

 
At 6:19 pm, Blogger வடுவூர் குமார் said...

சரியாக சொன்னீங்க திரு.ஜயராமன்,
அந்த எல்லை தான் பலருக்கும் புரிவதில்லை,10 பேர் காலில் விழுத்தவுடன் அவர்கள் தலைக்கு ஒளி வட்டம் வந்துவிடுகிறது என்று நினைக்கிறார்களோ?
நம் மூளையை அடகு வைக்காதாவரை பிழைத்தோம்,பிழைபோம்!!

 
At 9:24 pm, Blogger Krishna (#24094743) said...

'வந்தே மாதரம்' - இந்த வரிக்கு உள்ள சக்தி எல்லையற்றது. மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது. எல்லையற்ற தியாகங்கள் செய்த ஒரு பெரும் இந்திய சமுதாயத்தை, மத வேற்றுமையின்றி பிணையச்செய்த மந்திரச் சொல். ஒவ்வொரு ஆங்கிலேயனையும் உறங்கவிடாமல் செய்த ஆட்டி வைத்த உன்னதமான பாடல். திருப்பூர் குமரன், வீரவாஞ்சிநாதன், பகத் சிங் முதலிய ஒப்பற்ற தேசபக்தர்கள் கடைசியாக உதிர்த்த சொற்கள். அவர்கள் சாதாரண பிறவிகளைப் போல 'ஐயோ, அம்மா' என அரற்றவில்லை. இதன் பெருமை உண்மையான இந்தியன் ஒவ்வொருவரும் போற்றி புகழத்தக்கது. இதை தடை செய்பவன் மனம் பிறழ்த காட்டுமிராண்டியாக மட்டுமே இருக்க முடியும். இத்தகைய கயவர்களையும் மன்னிக்கும் மகத்தான சமுதாயமே நம்முடைய ஹிந்து சமுதாயம். இதுவே சமத்துவம் - எல்லாம் வல்ல அல்லா இத்தகையோரையும் காத்து அருளட்டும்.

 
At 9:30 pm, Blogger ஜயராமன் said...

கிருஷ்ணா சார்,

///
இதன் பெருமை உண்மையான இந்தியன் ஒவ்வொருவரும் போற்றி புகழத்தக்கது.

//

தங்கள் பின்னூட்டம் மிக உண்மை. கவிதை நயம் போல உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி

 
At 9:45 pm, Blogger மணியன் said...

உங்கள் பதிவும் ம்யூஸ் அவர்களின் பின்னூட்டங்களும் நிறைய செய்திகளைத் தருகின்றன.

இருபிரிவினரையும் ஒன்றுபடுத்த முயன்ற காந்தியடிகளின் காங்கிரஸ் இன்று இருவரையும் பிளவுபடுத்த துணை போவது வேதனையான விதயம்.

 
At 11:53 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

பின்னூட்டத்திற்கு நன்றி. விவேகானந்தர் நிறுவியதே இப்போது ஒரு பெரிய ஸ்தாபனமாகி organized gate of religion ஆகிவிட்டதோ என்னவோ?

ஜயராமன் ஸார்,

தங்களது கேள்வி அருமையானது. சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

ஆர்கனைஸேஷன் என்பது நடைமுறையில் தவிர்க்க முடியாது. ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். மனம் இயங்கும் முறை அது. ஒழுங்கில்லாத கல்வி குழப்பத்தையே ஏற்படுத்தும். உயர்கருத்துக்களை நோக்கி மக்களை திருப்ப, திரும்பிய மக்கள் அந்த கருத்துக்களை கற்று, புரிந்து கொள்ள ஒரு வடிவு, ஒரு ஒழுங்கு தேவை.

அந்த வகையில்தான் ஷங்கரரும் ஷண்மதங்களை ஸ்தாபித்தார். விவேகானந்தர் தன் குருவின் விருப்பப்படி ராமக்ருஷ்ண மிஷனை ஸ்தாபித்தார்.

பரத கண்டத்தில் இக்கருத்துக்களின்மேல் ஏற்படும் வன்முறையை தடுத்துப்போராட ஷத்திரியர்கள் அரசர்களாகவிருந்தனர். இந்த அரசர்கள் எல்லாம் அழிந்தபின் ஹிந்து மதங்களை பாதுகாக்க யாரும் இல்லை. அந்த வேலையையும் இதுபோன்ற அமைப்புக்கள் ஏற்று நடத்திவர ஆரம்பித்தன.

ஆனாலும், முக்கியமான வேறுபாடு உண்டு. இந்த மத அமைப்புக்கள் எல்லாம் தான்மட்டுமே ஹிந்து மதம் என்று சொல்லுவதில்லை. சொல்லவும் முடியாது. பரந்துவிரிந்த ஹிந்துமத தாத்பர்யங்களில் ஒருபகுதியைச் சேர்ந்தவர்கள் என்றுதான் இவர்கள் கூரிக்கொள்கிறார்கள். மற்ற ஆபிரகாமிய மதங்களைப்போன்ற இறுகிய அமைப்புக்கள் இல்லை.

தாங்கள் சரியாக சொன்னபடி இவை அனைத்தும் ஹிந்து மத கருத்துக்களுக்குள் எளிதாக புக வடிவமைக்கப்பட்ட "கதவுகள்" மட்டுமே. ஆனால் இவை மட்டுமே கதவுகள் இல்லை என்பதையும் ஹிந்து மதங்கள் கூறுகின்றன. இந்த கதவுகளுக்கும், மற்றவைகளுக்கும் உள்ள வித்யாஸம் இந்த கதவுகளின் மூலம் உள்ளே புகுந்தவர்கள் கருத்துக்களை புரிந்துகொண்டு, அவற்றை தாண்டி அனுபவமடைய முடியும். திறந்தே கிடக்கும் கதவுகள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் வெளியேயும் வரலாம்.

மற்றவையெல்லாம் ஒன் வே தான். வெளியே போக முயற்சி செய்தால் சங்குதான்.

இந்த கதவுகளும் பலவீனமான கதவுகள்தான். அதனால்தான் தெருச்சாக்கடையில் புரண்டுகொண்டிருக்கின்ற பன்றிகளும், நாய்களும் இந்த கதவுகளில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றுகொன்டிருக்கின்றன.

நமக்கும் அந்த சிறுநீர் வாசனை பிடித்துப்போய்விட்டதால், இந்த செயல்களை தடுப்பது தவறு என்றும், ஹிந்துத்துவவாதம் என்றும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

 
At 4:04 am, Blogger ஜயராமன் said...

கீரன் ஐயா,

தங்கள் வருகைக்கும் பின்னூட்ட கருத்துக்கும் மிக்க நன்றி.

1. /// ஆனால் தேசிய கீதத்தை விட முக்கியமானதாக பிஜேபி மற்றும் இந்துத்தவ ... ///

யார் எதற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை பொருத்து இஸ்லாமியர்கள் தங்கள் தேசபக்தி சின்னங்களை எடை போடுவது விசித்திரம். விடுதலைப்போரில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று முக்கியம் தான். எனக்கு சுபாஷ்ஜீ, சிலருக்கு காந்தி, சிலருக்கு வாஞ்சிநாதன், சிலருக்கு வ.உ.சி. சிலருக்கு பகத் சிங். அதனால் என்ன. அது எப்படி இதற்கு எடை கல்லாகும்? விசித்திரம்தான்.

2. /// குறிப்பாக இந்துத்வா எண்ணம்கொண்டவர்கள் தவிர வேறு யாரும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதற்காக அவர்களுக்ககெல்லாம் தேசபக்தி இல்லை என்றாகிவிடுமா? ////

இது சரியில்லை. நான் வந்தே மாதரத்தை மதிக்கிறேன். அதன் வரலாறோ, அதன் பொருளோ கூட எனக்கு முக்கியமில்லை. நான் ஒரு இந்துத்துவா வாதி என்று நான் நினைக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை பலரின் நிலை இதுதான். முஸ்லிம்கள் மட்டுமே, அதிலும் ஒரு சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமே, இதை ஒரு மத கண்ணோட்டத்தில் எதிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது.

இந்த விஷயத்தை இந்த தடவை கிளப்பியது பி.ஜே.பி அல்ல. அவர்களுக்கு வாகாக ஒரு பட்வா போட்டு கொடுத்தது இமாம் அவர்கள்தான். என் பார்வையில், இம்மாதிரி இஸ்லாமிய நடவடிக்கைகள் இந்துத்துவாக்கு தீனி போட்டு, இந்துத்துவா நடவடிக்கைகள் இவர்களுக்கு தீனி போடுகின்றன.

3. /// இதை எல்லா மதத்தவரும் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது சரியா ///

சரிதான். இந்த வரிகள் முதல் இரண்டு பாடலில் இல்லை. அதனால் இதை பொதுவாக பாடுவது இல்லை. (இப்பாடல் நீண்ட பாடல். இனிமையாக இழுத்து பாடினால் வெகு நேரமாகும்....) முதல் இரண்டு பாடல்களே தேசிய பாட்டாக பாடப்படுகிறது. அதனால், இந்த வரிகள் ஒரு தடையாகாது.

மனமே எல்லாவற்றிருக்கும் தாள். மனமே எல்லாவற்றிருக்கும் திறவுகோல்.

நன்றி

 
At 4:26 am, Blogger Muse (# 01429798200730556938) said...

கீரன்,

வந்தே மாதரம் பாடல் முழுக்க முழுக்க (முதல் இரு பாராக்களைத் தவிர்த்து) ஹிந்து தத்துவங்கள் நிறைந்த ஒரு பாடல். என் உடலுக்குள் இருக்கும் உயிர் நீயே, எல்லா கோயில்களிலும் இருப்பவள் நீயே என்பது போன்ற வரிகள்.

இதை ஆரம்பத்திலேயே இஸ்லாமியர் எதிர்த்ததால் பிரச்சினைகள் எதுவுமில்லாத முதல் இரு பாராக்களை மட்டும் பாடுவது என்று முடிவு செய்தார்கள். எல்லா இடங்களிலும் பொதுப்படையான வாழ்த்தான அந்த முதல் இரண்டு பாராக்கள்தான் பாடப்படுகின்றன. தமிழ்தாய் வாழ்த்துபோல, அது ஒரு நாடுபற்றி உயர்வாய் பாடுகின்ற பாடல். ஜன கன மன தேஸிய கீதம். பாடப்படும் நேரங்கள் வேறு.

இப்போது இமாம் முதலானவர்கள் ஃபத்வா விதித்திருப்பது அந்த இரண்டு பாராக்கள்கூட பாடப்படக்கூடாது என்பதற்குத்தான். அதாவது பாடப்படுகின்ற பொதுப்படையான கருத்துக்களைக்கொண்ட வரிகளைக்கூட பாடக்கூடாது என்பதுதான் அந்த ஃபத்வா.

 
At 4:26 am, Blogger Muse (# 01429798200730556938) said...

சங்கபரிவாரங்கள் ஆதரிப்பதையெல்லாம் எதிர்க்கவேண்டும் என்பதுதான் தற்காலத்தில் பிழைக்கவழி. இது நிலையாகிவிட்ட காலகட்டத்தில், இந்திய கொடியை வணங்குவதும் ஒருவகையான உருவ வழிபாடுதான் என்று சொல்லி ஃபத்வா போடுவார்கள். பாஜாகாவினர் வேறு இந்த கொடியை தூக்கிப்பிடிப்பவர்கள். இந்த காரணத்திற்காகவே நாம் இதை எதிர்த்துவிடலாம். கொடியில் காவி நிறம்வேறு இருக்கிறது. ஹிந்துத்துவா கெட்ட வார்த்தை என்றால். காவி கெட்ட கலர். இந்த கலர் இருக்கிற கொடியை வருடா வருடம் ஏற்றி அதற்கு ஒரு இஸ்லாமியர் ஸல்யூட் அடிப்பது தப்பு. இஸ்லாத்திற்கு எதிரானது. அதனால் இந்த காரணத்திற்காக போடப்படவிருக்கிற ஃபத்வாவை நாம் இப்போதே ஆதரித்துவிடுவோம்.

ஆந்திராவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை தொழுகைக்காக உபயோகப்படுத்தி பின்னர் தொழுகை நடந்ததாலேயே அங்கே தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே சொல்ல ஆரம்பித்தாயிற்று.

அப்படியெல்லாம் சொல்வதால்தான் ஹஜ் யாத்திரைக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து பணம் கிடைக்கிறது. ஹிந்துக்கள் அமர்நாத்திற்கு போகக்கூட சரியான வழியின்றி, போனால் புனிதப்படையினரின் குண்டடியில்லாமல் திரும்பிவருவோம் என்கிற உத்தரவாதமின்றி இருக்கிறார்கள். காசிக்குப் போகிறவர்களுக்கு கழிப்பறை வசதிகள்கூட கிடையாது. காசியும், கங்கையும் நாறுகிறது. நாத்தம்பிடித்த நதியை புனித நதி என்று இந்த பாஜாகாவும், மற்ற ஸங்கபரிவாரங்களும் ஒத்துக்கொள்வதால் அதையும் எதிர்த்துவிடலாம்.

ஸங்கபரிவாரங்கள் வருடா வருடம் சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடுகிறார்கள். மதச்சார்பற்ற, த்ராவிடர்களின் ஒட்டுமொத்த ப்ரதிநிதியாகவுள்ள திமுக சுதந்திர தினத்திற்கு இதுவரை கொடியேற்றியதில்லை. எனவே அவர்கள் நடுநிலையானவர்கள்.

நாமும் நடுநிலையானவர்களாகவே இருப்போம். நம் பிள்ளைகள்தான் பிடித்த தெய்வத்தை வணங்கவும், எந்த தெய்வத்தையும் வணங்காதிருக்கவும் இருக்கும் உரிமையற்ற ஒரு மதத்திற்கு மாறப்போகிறார்கள். அப்படி ஒன்றும் பெரிய ஆபத்து எதுவும் நமக்கு வந்துவிடவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றால் நாமும் நல்லவர்கள்தான்.

 
At 4:33 am, Blogger குமரன் (Kumaran) said...

ஜயராமன் ஐயா,

வந்தே மாதரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (இங்கே பின்னூட்டத்தில் Muse அவர்கள் இட்டிருப்பது) மகாகவி சுப்ரமணிய பாரதியார் செய்தது. இருவிதமாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் இது ஒன்று. இரண்டையும் பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் பார்க்கலாம்.

 
At 4:53 am, Blogger Muse (# 01429798200730556938) said...

தற்போது பாடப்படும் தேசிய கீதம் உண்மையில் நம்மை ஆண்ட இங்கிலாந்து அரசை போற்றிப்பாடியது. வந்தே மாதரம் பாட எதிர்ப்பு இருப்பதால் நம்மை அடிமையாய் வைத்திருந்தவர்களைப் போற்றி ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த சமரசமும் சமரசம் என்கிற வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்படி ஒவ்வொன்றாக ஃபத்வா விதித்துவந்தால், சமரசம் செய்துவந்தால் கடைசியில் என்னாகும்?

இப்படி பார்ப்போமே. இவர்கள் ஏன் ஃபத்வா விதிக்கிறார்கள்? ஃபத்வா விதிக்காதபோதும் பல விஷயங்களை எதிர்க்கிறார்கள் (ஜீவனாம்ஸ பிரச்சினை உட்பட). ஏன் ? ஏனெனில் ஒரு செயல், ஒரு பொருள் இஸ்லாத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக. அதாவது இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்கள் எதுவும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது. இது ஒரு முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடாகவிருந்தால் நடைமுறையில் இவர்கள் சொல்லுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் மற்ற மதத்தினரும் வாழ்ந்து தொலைக்கும் நாடாக இது இருந்துதொலைப்பதால், ஒன்று இவர்களுக்காக மற்றவர்களும் இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்களை தவிர்க்கவேண்டும், அல்லது இவர்கள் மட்டும் ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு தனி உலகம் பெற்று வாழ ஆரம்பிப்பார்கள் - அதாவது நாட்டிற்குள்ளேயே இன்னொரு நாடு.

இப்படி இருந்தால் மட்டுமே மற்றவர்கள் பிழைக்க முடியும் என்கிற நிலமை இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தருமி அவர்களே, தாங்கள் எழுதுவதை பார்த்தால் மற்றவர்கள் போலில்லாமல் சற்று தெளிவாக யோசிப்பவர் என்பது தெரிகிறது. இப்படி ஒரு அபாயம் நம்மை சூழ்ந்திருப்பது பற்றி தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

 
At 1:54 am, Blogger Muse (# 01429798200730556938) said...

இந்துத்வா இயக்கங்களால் தான் சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வு தோன்றியது

கீரன்,

ஹிந்துத்துவா என்று தாங்கள் குறிப்பிடுகிற சங்க பரிவாரங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்த ஆபிரகாமிய மதங்களை பரதகண்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசர்கள் போராடி தோற்றபின் அமைப்புக்கள் அதை எடுத்துச்செய்கின்றன.

நீங்கள் பாதுகாப்பு உணர்வு என்று எதை சொல்லுகிறீர்கள் என்பதை விளக்கினால் போதுமானது.

நீங்கள் ஸப்போர்ட் செய்கின்ற சிறுபான்மை மதங்கள் இந்தியாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் இதே பாதுகாப்பு உணர்வு அற்று இருக்க காரணம் என்ன? எல்லா நாடுகளிலும் ஹிந்துத்துவா பரவிட்டதா?

எந்த ஒரு குழு தன்னுடைய கருத்து மட்டும்தான் சரியானது. மற்றவர்கள் தன்னுடைய கருத்தை ஏற்று, தன்னுடைய குழுவில் இணைய வேண்டும் என்று இருக்கிறதோ. அந்த குழுவிற்கு என்றுமே பாதுகாப்பு உணர்வு இருக்காது.

ஹிந்து மதங்கள் சொல்லுவதோ அப்படியே எதிரானது. பல்வேறு மனிதர்கள். பல்வேறு குணங்கள். பல்வேறு வழிகள். ஹிந்து மதத்தில் மதம் மாறுவது என்கிற கான்ஸெப்ட்டே கிடையாது. அதுவும் தாங்கள் தாங்கிப்பிடிக்கின்ற சிறுபான்மையினரின் மத மாற்றம் போன்ற கான்ஸெப்டே கிடையாது.

படிப்பில் அக்கறை இல்லாத மாணவர்கள் படிக்கிறவர்களின்மேல் பாதுகாப்பு உணர்வு அற்று இருப்பதுபோன்ற விஷயம் இது.

இவர்களுடைய அச்சம் அவர்களுடைய சொந்த மத நம்பிக்கைகளால் எழுவது. ஹிந்துக்கள் என்ன செய்தாலும் இது குணமாகாது.

இந்த சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளை, ஆக்கிரமிப்புக்களை சுட்டுவதை நிறுத்தி வாழ்வதே சிறந்தது என்று விஷயம் தெரியாத (அல்லது தெரிந்தும் நல்ல பெயருக்காக) அமைதியாக வாழ்வது என்பது பசியை காரணம் காட்டி மலத்தை உண்பதற்கு சமானம்.

 
At 5:08 am, Blogger வஜ்ரா said...

//
வந்தே மாதரம் பாடலுக்கு இசை அமைத்தவர் மிக பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் ரபீந்திரநாத் தாகூர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//


டோண்டு சார்,

தேச ராகத்தில் அமைந்த வந்தே மாதரத்தைச் சொல்கின்றீர்கள் என்றால்,

ஸ்ரீ ஜெகத்குரு பட்டாச்சார்யார் இசை அமைத்து, கோபால் சந்த்ர தர் தேச ராகம் (மல்ஹர்) ல் 1876 ல் பாடினார்.

1882 ல் பாடல் ஆனந்த்மட் ல் இணைக்கப்பட்டது.

1896ல் இந்திய காங்கிரஸ் கூட்டத்தில், beadon square, கல்கத்தாவில், ரபீந்திரனாத் தாகோர் பாட ஜ்யோதிந்திரனாத் தாகோர் பியானோ வாசித்தார்.

 
At 4:38 am, Blogger ஜடாயு said...

ஜயராமன் ஸார், நல்ல பதிவு. பின்னூட்டங்களிலும் நிறைய அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. BTW, இப்போது நாம் பாடும் இசை வடிவைத் தந்தவர் விஷ்ணு திகம்பர் பலூஸ்கர் (இந்துஸ்தானி இசை மேதை) என்று http://www.freeindia.org/vmataram/ இணைப்பில் உள்ள கட்டுரை கூறுகிறது.

இது பற்றி இந்த வார திண்ணை இதழில் "வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்" என்று விலா வாரியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இந்தப் பாட்டுக்கான முதன்முதல் இஸ்லாமிய எதிர்ப்பு எப்படி உருவாயிற்று என்றும் அதில் சொல்லியிருக்கிறேன்.

http://www.thinnai.com/?
module=displaystory&
story_id=20608259&format=html
நேரம் கிடைத்தால் கட்டுரையைப் படித்து தங்கள் கருத்தைச் சொல்லவும்.

நன்றி.

 
At 4:44 am, Blogger ஜயராமன் said...

ஜடாயு ஐயா,

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

/// நேரம் கிடைத்தால் கட்டுரையைப் படித்து தங்கள் கருத்தைச் சொல்லவும். ///

சுட்டிக்கு நன்றி. அவசியம் படித்து என் எண்ணங்களை சொல்கிறேன். நான் இப்பொழுது ஆபீஸில் இருக்கிறேன். இரவு படிக்கிறேன்.

நன்றி

 
At 12:42 am, Blogger JB said...

Hi ஜயராமன், I love the characters of your writing but I can't catch any word :( I like this picture because of the people on the panel!

Kind regards, from the mediterranean sea!

 

Post a Comment

<< Home