Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, May 23, 2006

பார்ப்பனர்கள் நவீன இந்தியாவின் தலித்துக்கள்

Are Brahmins the Dalits of today?

http://in.rediff.com/news/franc.htm ல் Francois Gautier இவ்வாறு எழுதுகிறார்.

பார்ப்பனர்களை வசதியாக ஒரு சமூகமாக பல உள்நோக்கம் கொண்ட அமைப்புகள் சித்தரிக்கின்றன.

ஆனால், இந்தியாவில் அவர்கள் உண்மையான நிலை வேறு.

டில்லியில் 50 பொது கழிப்பிடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் கழுவும் வேலை செய்பவர்கள் பார்ப்பனர்கள். இந்த ‘சுலப் டாய்லெட்’ ஒரு பார்ப்பனரால் சமூக நலனுக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதுவா, மேற்குடி மட்டம் என்று சொல்லமுடியும்?

ஒவ்வொரு டாய்லெட்டையும் 5 முதல் 6 பார்ப்பனர்கள் நாள் முழுதும் சுத்தம் செய்கிறார்கள். பத்து வருடம் முன் அவர்கள் உத்தர்பிரதேசத்திலிருந்து வேலே தேடி டில்லி வந்தவர்கள். அவர்கள் கிராமங்களில் இன்று 60 சதவீதம் வரை தலித்துக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு யூனியன் அமைத்து எல்லா வேலைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

டில்லி ரயில் நிலையத்தில் பல பார்ப்பன கூலிகளை பார்க்கலாம். அவற்றில் கிருபா ஷங்கர் என்பவரிடம் பேசியபோது ‘எங்கள் பூர்வீக கிராமங்களில் தலித்துக்கள் 5 அல்லது 6 குழைந்தைகளை நிம்மதியாக வளர்க்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வேலை சுலபமாக கிட்டிவிடுகிறது. என் ஒரே மகள் கல்லூரியில் படிக்கிறாள். ஆனால், வேலை கிடைக்குமா தெரியாது’ என்றார்.

டில்லியில் ரிக்சா இழுக்கும் பல பார்ப்பனர்களை பார்க்கலாம். படேல் நகர் என்ற இடத்தில் 50 சதவீதம் ரிக்சா ஓட்டுபவர்கள் பார்ப்பனர்கள். கிராமங்களில் வேலை இன்றி டில்லிக்கு வந்தவர்கள்.

இவர்கள் நாள் முழுக்க உழைத்தும் கைக்கும் வாய்க்கும் போதவில்லை என்கிறார்கள்.

வாராணசியில் ரிக்சா இழுப்பவர்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்கள்.

காஷ்மீர் பண்டிட் எனப்படும் 4 லட்சம் பார்ப்பனர்கள், தங்கள் ஊர்களிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதால் ஓட்டு செல்வாக்கு இல்லாமல் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலைமை வட இந்தியாவில் மட்டும் அல்ல.

ஆந்திராவில் வீட்டு வேலை மற்றும் சமையல் செய்யும் 75 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். J. ராதாகிருஷ்ணா என்பவரால் (Brahmins of India by J Radhakrishna, published by Chugh Publications) மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி எல்லா (100% ) கோயில் குருக்கள்கள் ஆந்திராவில் வருமைக் கோட்டுக்கு கீழே வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் 80% பேர் தாங்கள் வறுமைக்காகவும், தங்கள் பாரம்பரிய உடைக்காகவும் (குடுமி முதலிய) பல கேலிக்கு ஆளாவதாக குறிப்பிடுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு நவீன படிப்பில் இடம் கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் இத் தொழிலையே நாட வேண்டி இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில், பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. படிப்பவர்களும், 44% ஆரம்ப கல்வி அளவிலும், 36% நடுத்தர கல்வி அளவிலும் படிப்பை விட்டு விடுகிறார்கள் என்று ஆராய்ச்சி குறிக்கிறது.

ஆந்திராவில் பார்ப்பனர்களில் 55% பேர் வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் – மாதம் 650க்கும் குறைவாக. (இந்தியா மொத்தம் 45% பேர்தான் வருமைக் கோட்டிற்கு கீழே)

இந்தியாவின் மற்ற பாகங்களிலும் இதே நிலைமைதான்.

கர்னாடகா நிதி மந்திரி சட்டசபையில் தெரிவித்த சராசரி வருட வருமான நிலைமை (annual per capital income): கிருத்துவர்கள் – ரூ:1562; ஒக்கலிகர்கள் – ரூ: 914; முஸ்லிம்கள் – ரூ: 794; SC – ரூ: 680; ST – ரூ:577; பார்ப்பனர்கள் – ரூ: 537.

இவர்களின் அதீதமான வறுமை இவர்களை கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயரச் செய்தது. நகரங்களில் பரவி விட்டதால் இவர்கள் கூட்டமைப்பு குறைந்து சமுதாயத்தில் அரசாங்கத்தில் தங்கள் குரல் இல்லாமல் போகிறது. முதலில் அரசாங்க வேலையை சார்ந்திருந்த இவர்கள் அரசாங்க கொள்கைகளால், நவீன தொழிலான மருத்துவம், பொறியியல் என்று மாறினார்கள். அதிலும் கொள்கைகள் இவர்களுக்கு விரோதமாகி இவர்கள் வேறு திட்டங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர பிரதேச ஆராய்ச்சியின் படி, பார்ப்பனர்களில் பெரும்பான்மையோர் பிழைப்புக்கு வீட்டுவேலை செய்கிறார்கள். அவர்களில் 75% வேலையின்மை இருக்கிறது. இதில் 70% பரம்பரை தொழிலை சார்ந்துள்ளார்கள். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கோயில்களில் புசாரியாக மாதம் ரூ.500 ல் வாழ்க்கை நடத்துகின்றன.

கோயில் அர்ச்சகர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. தமிழ்நாட்டு பணக்கார ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகருக்கு மாதம் ரூ.300ம் தினசரி ஒரு பட்டை சாதமும் சம்பளம் (ஆதாரம்; Census Department studies). அதே கோவிலில் அரசாங்க ஊழியர்கள் சம்பளம் ரூ.2,500 மாதத்துக்கு.

இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது. இவ்வாறு ஒரு திட்டமும் அர்ச்சகர்களுக்கு இல்லை.

இந்நிலையில் வேறு சில மேற்பட்ட வகுப்பு என்று வகுப்பப்ட்ட்வர்களும் வாய்மொழியின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் gautier தன் கட்டுரையில்.

நன்றி

49 Comments:

At 7:23 am, Anonymous Anonymous said...

ம்ம்ம்...இது குறித்து தரமாகவும் புள்ளி விவரங்களுடனும் எழுதி இருக்கிறீர்...

பார்ப்போம் விடாது கருப்பு என்ன பண்ணுகிறார் என்று ?

 
At 7:30 am, Anonymous Anonymous said...

சரி வோய்..., அவாளுக்கும் இப்பத்தானே கஷ்டம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சுருக்கு. இன்னும் ஒண்ணு ரெண்டு தலைமுறை ஆனதுக்கு அப்புறம் அவாளுக்கும் ஒதுக்கீடு கொண்டாந்துட்டாப்போச்சி. என்ன நாஞ்சொல்லுறது ?

 
At 7:38 am, Blogger கால்கரி சிவா said...

//இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது. இவ்வாறு ஒரு திட்டமும் அர்ச்சகர்களுக்கு இல்லை.//

உங்களைப் பார்த்தால் கையில் துரு பிடித்த திரிசூலம் என்ற பயங்கர ஆயுதத்தை பிடித்துக் கொண்டு திரியும் இந்து தீவிரவாதிகளை போல் இருக்கிறது.

சிறுபான்மையினரின் உரிமையை தட்டிக் கேட்டு அவர்களை நசுக்கும் எண்ணம் நன்றாக தெரிகிறது.

:)))))))

 
At 7:44 am, Blogger ஜயராமன் said...

கால்கரி சிவா அவர்களே,

தங்கள் வருகைக்கும் என் பதிவுக்கு மதிப்பளித்து கமெண்ட் செய்ததற்கும் மிக்க நன்றி.

நான் எழுதியது முழுக்க முழுக்க இரவல். நான் படித்த அந்த கட்டுரை என் மனதை தாக்கியதை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இங்கு இட்டேன்.

தாங்கள் குறிப்பிட்ட வரிகள் எனக்கு உரித்தவை அல்ல. அந்த கட்டுரையின் வரிகள்.

தாங்கள் தயை செய்து எந்த முத்திரையும் எனக்கு அளிக்க வேண்டாம். அந்த முத்திரைகள் எனக்கு பொருந்தவில்லை.

நன்றி

 
At 7:48 am, Blogger Sivabalan said...

ஜயராமன்,

மிக நல்ல பதிவு!!

மிக்க நன்றி!!


வெறும் மயிலாப்பூர் மற்றும் மாம்பலத்தை வைத்து பிராமன சமுதயாத்தை பற்றி முடிவு செய்ய முடியாது!!

என் வாழ்க்கையில், பிராமன சமுதய நன்பர்கள் வறுமையில் வாடுவதையில் நான் பார்த்திருக்கிறேன்!!

இந்தியாவில் வறுமையில்லா சமுதாயம் உருவாக வேண்டும். (அது யாராக இருந்தாலும்)


தலைப்பில் வருத்தம் தெரிகிறது!! ஆனால் அதுவே வேறுவிதமான அர்த்ததையும் தருகிறது. முடிந்தால் மாற்றவும்

 
At 7:52 am, Blogger வஜ்ரா said...

இப்போது நடப்பது, இடஒதுக்கீடு என்கிற பெயரில் Reverse Discrimination.

இந்த இடஒதுக்கீட்டினால், கீழ் ஜாதி மக்கள் மேலே வருகிறார்களோ இல்லையோ, பார்பாணர்கள், மேல் ஜாதியினர் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதில் இருக்கிறாது. இது தான் Social justice என்கிற பெயரில் "அறிவு ஜீவிக்கள்" கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஒரு சில பேர், Francoise Gautier பெயர் கேட்டவுடன், இவர் சொல்லும் கருத்துக்களுக்கு பதில் தராமல், இவர்களை மட்டையடிக்க வேகமாக வந்து, இவர் இது, இவர் அது, என்று லேபிள் ஒட்டுவார்கள்.

"மைனாரிடி, கீழ் தட்டு மக்கள்" என்றவுடன் ரத்தம், சதை, துடி துடிக்கக் கொதித்து வரும் மனித உரிமைக்கு ஏக போக அதிகாரம் கொண்டாடும் மார்க்ஸ்வாதிகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இதற்க்கு பதில் சொல்வதைவிட, Francois Gautier உடய motive சரி இல்லை என்று மட்டையடிப்பார்கள்.

உண்மை என்ன வென்றால்,
இந்த மனித உரிமை, Social justice மார்க்ஸ்வாத அறிவு ஜீவிக்களுக்கு, Theory of Social conflict ல் சொல்லப் படும் Class difference கண்ணோட்டத்தைத் தவிர்த்து வேறு கண்ணொட்டத்திலோ, பார்வையிலோ, யோசிக்கத் தெரியாது.

வஜ்ரா ஷங்கர்.

 
At 7:53 am, Blogger மாயவரத்தான் said...

ம்...எல்லாம் சரி.. வரிக்கு வரி பார்ப்பனர்கள் என்று எழுதியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

 
At 7:54 am, Anonymous Anonymous said...

கட்டுரைய சங் பரிவார் வலையில் இருந்து எடுத்தீரா ?

 
At 7:57 am, Blogger வஜ்ரா said...

ஜெயராமன்,

கால்கரி சிவா, ஒரு "உள் குத்து" வைத்து பதித்திருக்கிறார்.

(ச்சே! இந்த தமிழ்மணத்தில் வந்ததிலிருந்து தமிழ் வொக்கபுளரியே (vocabulary தான்..தப்பா நெனெச்சுக்காதீங்க) மாறிப் போச்சு...!!)

அவர் பதித்தது போன்ற Standard பின்னூட்டததை நிரைய வலைப்பதிவர்கள் Notepad ல் ஏற்கனவே ஏற்றி வைத்திருப்பார்கள், இது போல் பதிவுகள் வரும்போது உடனே "வெட்டி-ஒட்டி" விடுவார்கள். அதைத் தான் அவர் சொல்ல வருகிறார். என்ன சிவா? ரைட்டா?

வஜ்ரா ஷங்கர்.

 
At 8:09 am, Anonymous Anonymous said...

சரி வோய்..., அவாளுக்கும் இப்பத்தானே கஷ்டம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சுருக்கு. இன்னும் ஒண்ணு ரெண்டு தலைமுறை ஆனதுக்கு அப்புறம் அவாளுக்கும் ஒதுக்கீடு கொண்டாந்துட்டாப்போச்சி. என்ன நாஞ்சொல்லுறது ?

If possible do study taking the books...(yes..school books..) and compete ....not back door entry...

 
At 8:16 am, Blogger கால்கரி சிவா said...

ஜயராமன்,

மன்னிக்கவும். அது ஒரு எதிர்மறை வஞ்சகப் புகழ்ச்சி.

உண்மைகளைச் சொன்னால் சிலருக்கு கசக்கும். அதை நினவில் வைத்துதான் என் பின்னூட்டம்

 
At 8:27 am, Blogger வஜ்ரா said...

//
At 8:24 PM, தரன் said...
கட்டுரைய சங் பரிவார் வலையில் இருந்து எடுத்தீரா ?
//

இது சங் பரிவார் வலைத்தளமா?

வஜ்ரா ஷங்கர்.

 
At 8:30 am, Blogger ஜயராமன் said...

கால்கரி சிவா மற்றும் ஷங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி.

தங்கள் கருத்துக்களின் உண்மை அர்த்தங்கள் புரிந்தது. மிக்க நன்றி.

மாயவரத்தான் அவர்களே. பார்ப்பனர் என்ற வார்த்தை தவிர்க்க வேண்டியது என்று எனக்கு தெரியாது. அது நல்ல தமிழ் சொல் என்றே நினைத்தேன். நிஜமாகதான் சொல்கிறேன். தாங்கள் மாற்று சொல்லவும்.

நன்றி

 
At 11:08 am, Blogger Muse (# 01429798200730556938) said...

>>>>>கோயில் அர்ச்சகர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. தமிழ்நாட்டு பணக்கார ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகருக்கு மாதம் ரூ.300ம் தினசரி ஒரு பட்டை சாதமும் சம்பளம் <<<<<<

இதில் மிகப்பெரிய ஜோக்கென்னவென்றால் இது போன்ற பெரிய கோயில்களுக்கு அர்ச்சகர் ஆவது மிகவும் கடினம். கன பாடிகள் ரேஞ்சுக்காவது விஷயம் தெரிந்து இருக்க வேண்டும். விஷயம் தெரியாதவர்கள் அர்ச்சகர்களாக எப்படியாவது ஆனால் அவர்களை மற்றவர்கள் வழித்தெறிந்து விட்டு போய்விடுவார்கள். நாய் பிழைப்பு. பார்ப்பனர்கள் விஷயம் தெரியாதவர்களை துச்சமாகவும், தெரிந்தவர்களை மரியாதையுடனும் நடத்துபவர்கள்.

>>>> இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது. <<<<

அதை சரிசெய்து கொள்ளத்தான் கைலாச மானசரோவர் யாத்திரை போகுபவர்கள் பணம் கட்டவேண்டும். பணத்தைக் கட்டிய பின்னால் மானசரோவர் போகவேண்டுமானால் இஸ்லாமிய புனிதப் போர் வீரர்கள் அன்று சற்று சோம்பலாகவோ, உடம்பு முடியாமலோ இருக்க வேண்டும். அவர்கள் மட்டும் சற்று விளையாட்டு மூடிலிருந்தால் அதிகளவு காபிர்களை கொல்லுகிற (புனித) விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படி செத்துபோனவர்களின் குடும்பங்களுக்கு பணம் கொடுப்பது மதச்சார்பின்மைக்கு விரோதச் செயல் என்பதால், அரசாங்கம் ஹஜ்ஜில் ஸாத்தானின் மேல் கல் எறியப்போய் கூட்டத்தில் உயிர்விட்ட இந்திய இஸ்லாமியருக்கு நஷ்ட ஈடு வழங்கும்.

வாழ்க மொபாக்ராஸி !

 
At 1:25 pm, Blogger Sundar Padmanaban said...

ஜயராமன்,

//பார்ப்பனர் என்ற வார்த்தை தவிர்க்க வேண்டியது என்று எனக்கு தெரியாது. அது நல்ல தமிழ் சொல் என்றே நினைத்தேன்.//

கட்டுரையைப் படிச்சுட்டு அப்படியே அப்பீட் ஆயிரலாம்னு பாத்தேன். பின்னூட்டங்களைப் பாத்துக்கிட்டே வந்தா இதுல இப்படிச் சொல்லிருக்கீங்க. இதைப் படிச்சுட்டு கொஞ்ச நேரம் "புன்னகை மன்னனா" இருந்தேன். அவ்ளவுதான்.

புள்ளி விவரங்களெல்லாம் சரிதான். எல்லாத்துக்கும் புள்ளி விவரங்கள் இருக்கு ஜயராமன். இன்னும் யாராவது வேறு வகையான புள்ளி விவரங்களோட வருவாங்க. பாருங்க. அப்படியே
அந்தாள், இந்தாள், மத்தாள், அவாள், இவாள், ஏவாள் எல்லாரும் வந்து பின்குத்து...ஸாரி.. பின்னூட்டம் இடுவாங்க. காத்திருங்க.

இன்னொரு முக்கியமான விஷயம் - என்ன சொல்றாங்கங்கறது முக்கியமில்லை - "யாரு" சொல்றாங்கங்கறதுதான் முக்கியம். "யாரு" சொல்றாங்கங்கறத யோசிக்கலைன்னா நிறைய பேருக்கு இங்க தூக்கமே வராது சாமி.

என்னமோ போங்க.

கால்கரி சிவா..

//கையில் துரு பிடித்த திரிசூலம்//

என்னங்க நீங்க. துருப்பிடிச்சது - அப்டீங்கறதுக்கு என்ன அர்த்தம்னே ஜயராமன் குறிப்பிட்ட "தமிழ் சொல்" காரர்களுக்குத் தெரியாது. தங்கத்தட்டுல வெள்ளி ஸ்பூன்ல சாப்பிட்டு பட்டு மெத்தைல தூங்கறவங்களுக்கு "துரு"ன்னா என்னன்னு தெரியுமா? "தங்கத் திரிசூலம்" இல்லாட்டி போனா போவுதுன்னு "வெள்ளித் திரிசூலம்"னு சொல்லுங்க. பொருத்தமா இருக்கு.

 
At 5:06 pm, Anonymous Anonymous said...

Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - OBC
25 - SC
20 - ST
5 - Handicapped
5 - Sports Persons
5 - Terrorist Affected
5 - Kashmiri Migrants
9 - Politicians
and if possible
1 - Astronnaut

 
At 6:35 pm, Blogger குழலி / Kuzhali said...

This is my comment in Rediff
-----
May I know how the author got these data? he did not mention any sources for these data? any sources or proof for these data?
----
//Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - OBC
25 - SC
20 - ST
5 - Handicapped
5 - Sports Persons
5 - Terrorist Affected
5 - Kashmiri Migrants
9 - Politicians
and if possible
1 - Astronnaut
//
definetly not 100% reservation like few decades back :-)

 
At 6:42 pm, Blogger மாயவரத்தான் said...

அடடே..புள்ளி விபரமெல்லாத்துக்கும் 'source' எங்கன்னு கேக்குறது யாரு?! அட.. 'குழலி'...சரி சரி..!! :D

 
At 6:42 pm, Blogger ஜயராமன் said...

குழலி அவர்களுக்கு,

இந்த கட்டுரையின் ஆசிரியர் தன் தகவல்களின் ஆதாரத்தை இந்த கட்டுரையிலேயே வைத்திருக்கிறாரே.

ஆந்திர பார்ப்பனர்களின் ஆராய்ச்சிக்கான விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அர்ச்சகர்கள் விழயத்துக்கும் census ஆதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மற்றவை தினசரி நிதர்சன தகவல்கள். படேல் நகர், வாராணசி மற்றும் டெல்லி டாய்லெட் விழயங்கள் எல்லோருக்கும் பழகினவை.

ஆதலால் இந்த கட்டுரையில் ஆதாரம் இல்லாமல் ஒன்றும் இல்லை.

தங்களுக்கு இந்த கட்டுரை கருத்துக்களில் சொல்ல வந்த ஒரே விமர்சனம் 'இதற்கு ஆதாரம் என்ன?' என்பதுதான் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது.

நன்றி

 
At 7:37 pm, Blogger அருண்மொழி said...

//கர்னாடகா நிதி மந்திரி சட்டசபையில் தெரிவித்த சராசரி வருட வருமான நிலைமை (annual per capital income): கிருத்துவர்கள் – ரூ:1562; ஒக்கலிகர்கள் – ரூ: 914; முஸ்லிம்கள் – ரூ: 794; SC – ரூ: 680; ST – ரூ:577; பார்ப்பனர்கள் – ரூ: 537.//

இது எந்த ஆண்டிற்கான புள்ளி விபரம்? What happend to other major castes?

Looks like the brahmins are not working in the IT Sector in Karnataka. Too bad. You guys should talk to Narayanamoorthy & Premji.

 
At 7:42 pm, Blogger கருப்பு said...

பின்னூட்டம் பெரிதாக இருந்ததால் தனிப்பதிவாக எழுதி இருக்கிறேன்.

படித்து கருத்து சொல்லும் வோய்!

 
At 7:43 pm, Blogger அருண்மொழி said...

இதே போன்ற ஒரு கட்டுரையை அசோகமித்திரன் இந்தியா டுடேயில் எழுதி வாங்கிகட்டிக் கொண்டார். இப்போது இன்னும் ஒருவர். வாழ்க வளமுடன்.

 
At 8:05 pm, Blogger குழலி / Kuzhali said...

//தங்களுக்கு இந்த கட்டுரை கருத்துக்களில் சொல்ல வந்த ஒரே விமர்சனம் 'இதற்கு ஆதாரம் என்ன?' என்பதுதான் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
//
நேரக்குறைவு...
நிறைய எழுதலாம் தான், இதையும் விட நாங்கள் முன்னெடுக்க வேண்டிய நிறைய விடயம் இருக்கின்றது...

//அடடே..புள்ளி விபரமெல்லாத்துக்கும் 'source' எங்கன்னு கேக்குறது யாரு?! அட.. 'குழலி'...சரி சரி..!! :D
//
நான் புள்ளிவிவரம் கொடுக்கும் போது source சுட்டியும் சேர்த்து தான் ஒவ்வொருமுறையும் கொடுக்கின்றேன், அந்த sourceன் நம்பகத்தன்மை வாசகர்களே கூட சரிபார்த்துக்கொள்ளலாம், இருந்தாலும் வசூலில் உலகின் 33ம் இடம் போன்ற டுபாக்கூட் புள்ளிவிவரங்களெல்லாம் நமக்கு தரத்தெரியாது தான்.

 
At 8:20 pm, Blogger ஜோ/Joe said...

//இருந்தாலும் வசூலில் உலகின் 33ம் இடம் போன்ற டுபாக்கூட் புள்ளிவிவரங்களெல்லாம் நமக்கு தரத்தெரியாது தான்.//

ஹா..ஹா.நெத்தியடி!

 
At 8:29 pm, Anonymous Anonymous said...

இருந்தாலும் வசூலில் உலகின் 33ம் இடம் போன்ற டுபாக்கூட் புள்ளிவிவரங்களெல்லாம் நமக்கு தரத்தெரியாது தான்/

"வசூல் ராஜா MBBS" இதுவரைக்கும் எத்தனை கோடி வசூல் பண்ணிருக்கார் என்ற உண்மையான புள்ளி விவரத்தை வெளியிடுவாரா?

 
At 8:45 pm, Anonymous Anonymous said...

Jeyaraman, Kuzhali atleast asks for proof and probably would believe when she reads the original article, and gets the original documents of proof. There are others who just want to make a joke on the plight of poor Brahmins. That is in bad taste. I have seen scores of Brahmins living in houses with portions fallen in rain, and no money to renew, simply living in the remaining portion. or Brahmins working as servants, getting food, and some clothes once in a while. Or those who work as helpers to cooks, can list them. No one cares for them, both Brahmins and non-Brahmins. This type of hating each other helps nobody. Communities should begin to help themselves, and if possible each other.

 
At 9:03 pm, Anonymous Anonymous said...

பார்ப்பனர் மலம் அள்ளினர்.
தலித் மக்கள் வேதம் ஓதினர்.


மேற்கண்ட வரிகளை படிக்கும்போது எத்தனைப் பேருக்கு அசாதாரண (அபத்தம், கோபம், வெறுப்பு ...) உணர்ச்சி ஏற்படவில்லை.

கழிப்பிடங்கள் என்ற வார்த்தைக்கு அருகே பார்ப்பனர் என்ற வார்த்தை வருவதையே ஜீரணிக்க முடியாமல், அந்த வார்த்தையை தவிர்க்கச் சொல்லுகிறார் ஒருவர்.

புள்ளி விபரங்களை நான் மறுக்கவில்லை. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் இந்தப்பதிவில் கூறியுள்ள மனிதர்களை அன்றாட வாழ்வில் சந்தித்திருக்கிறோம்? இதை வைத்து நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கமுடியாது.

(பி.கு. இந்தப் பதிவில் பார்ப்பனரைப்பற்றி கூறியுள்ளதாலேயே நானும் அந்த வார்த்தையை உபயோகித்தேன். அதில்லாமல், பார்ப்பனருக்குப் பதிலாக தேவர், வன்னியர், கவுண்டர், நாடார், பிள்ளை, முதலியார் ... எதை வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்).

 
At 9:34 pm, Blogger Anbudan said...

உம்ம கணக்கு சரிதாண்ணா .... அப்படியே மத்த சாதிகாரா எவ்வளவு பேர் பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்யரா-னு ஒரு கணக்கு சொல்வீரா... ஏன் ஓய் இப்படி சாதி, சாதி-னு கட்டின்டு அழரீர் ...

 
At 10:00 pm, Blogger சீனு said...

இதெல்லாம் இண்மைதான் என்றால், இதுவும் தவறு தான். தப்புக்கு இன்னொரு தப்பு பிராயச்சித்தம் ஆகிவிடாது.

 
At 11:26 pm, Blogger வடுவூர் குமார் said...

எது எப்படியோ,நமது குழந்தைகளுக்கு கையில் புத்தகத்தை கொடுத்து "முன்னேற பாதையை காண்பிப்போம்".என்னை பொருத்தவரை அது ஒன்றே அவர்களை முன்னுக்கு கொண்டுவரும்.

 
At 12:04 am, Blogger வஜ்ரா said...

//
enough of this guy!

-Nambi
//

என்ன சொல்ல வருகிறீர்கள்....காதியர் சொல்வதெல்லாம் புழுகல், என்றா? அல்லது உங்களிடம் ரெடிமேட் லேபிள் இருக்குமே, அதை ஓட்ட வருகிறீர்களா?

வஜ்ரா ஷங்கர்.

 
At 12:21 am, Blogger லக்கிலுக் said...

பார்ப்பனர்கள் நிலையே இவ்வளவு மோசம் என்றால் மற்றவர்கள் நிலை?

அய்யா, கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகர்களுக்கு 300 தான் கிடைக்கிறது என்கிறீர்கள்.... நீங்கள் வடபழனி அல்லது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு போய் பாருங்கள்.... ஒரு அர்ச்சகர் குறைந்தது ஒரு நாளைக்காவது ரூ. 300 சம்பாதிப்பார்....

தட்டில் காசு போட்டவனோ வெளியே உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பான். :-(

 
At 1:57 am, Blogger Geetha Sambasivam said...

ஜயராமன் அவர்களே,
கிருஷ்ணர் பிறந்த மத்ராவில் "பிரிஜ்பாஸி பிராமின்" என்ற உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். மாடு வைத்துப் பால் வியாபாரம் செய்கிறார்கள். அப்படியும் ஏழையாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
திரு Francois Gautier-ன் Rewriting Indian History-யில் உள்ளதை எல்லாம் இங்கே எழுத முடியாது. விவாதம் எங்கேயோ போகும். நான் இப்போது படிப்பது அது தான்.

 
At 2:35 am, Anonymous Anonymous said...

ஐயா!
இதனால், எதுவும் கெடிடுவிடவில்லை. அவர்கள் எதைச் செய்தாலும்;தாம் உயர்ந்தவர்கள் என்ற "மிதப்பில்" இருந்து; பின்வாங்குபவர்கள் இல்லை!; "கெட்டாலும் செட்டி;கிழிஞ்சாலும் பட்டு" எனும் திமிருடன் ,திரிபவர்கள்; அடுத்தவர்களைப் புழுவாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். "வேதம் சொல்லியிருக்கு" என்றே சொல்லிச் சொல்லி ;முழு இந்து சமுதாயத்தையும்; சாக்கடையில் சாதி யெனும் பெயரில்; தள்ளியவர்கள் :அதன் பலனை அனுபவிக்க விடவும்.
"பட்டாத்தான் தெரியும்"......விட்டுவிடவும்.
"என்னால் உன் இடத்துக்கு;வரமுடியும்...;உன்னால்.....என் இடத்துக்கு வரமுடியுமா?";;;;என சாதி என்ற ஒரே காரணத்தால்;;;;அந்தப் பதவியை அனுபவிப்பவர்.;;;இறுமாப்பாகப் பேசுவதும்.
அடங்க வேண்டுமென ஆண்டவனே! நினைத்திட்டார் போலும்.
யோகன்
பாரிஸ்

 
At 2:51 am, Anonymous Anonymous said...

கீதாம்மா!
உயர் குலப் பிராமணர்-எனச் கூறியுள்ளீர்கள்; அப்போ தாழ்குலப் பிராமணர் யாருங்க???
சங்கராச்சாரியா???
தயவு செய்து விளக்குங்க!!!
யோகன்
பாரிஸ்

 
At 3:33 am, Anonymous Anonymous said...

Dear Jayaraman

Thanks for all the statistics. When talking about non-bramins these perverts dont talk about Kshathriyars, vaisiyars, sutras etc, but when it comes to Bramins, they club all sorts of bhramins together. Even the elite bhramins who are well off and well educated do know about the existence of poor bhramins in Inida. Badri's post stating no reservation is needed for poor bhramins is one such example. These sort of bramins who live in cities dont know and can not understand the plight of millions of poor deserving bramins who live in slums and live under below poverty line. These elite class think that all braims are well off and lead a comfortable lifestyle like them. Your post gives the true picture. Thanks for bringing out the statistics.


Like classifying Kshathriya community under so many castes, bhramins also should be considered under so many subsects and reservation should be provided to those non elite, non rich bhramins. Ramanujar has converted lot of non bramins from SC into Iyengar subsect of bramins. Descendents of those subsects are still under acute poverty and not so well educated. Such subsects should be separated out of FC category and should be treated like SC/ST. Any reservation policy that does not consider such poor and really downtrodden among those so called bramins will not be complete and gross injustice only. The policy of clubbing all bramins under one class itself is absur. Like the classification of Vellalars and Naidus into so many sub sects, bhramins also should be classified into so many subsects based on their socio/econmic levels and provided with suitable reservation.

There are poor bhramins even in Tamil Nadu, if a real survey is conducted Govt will come to know that the percentage of poor, un educated, socially and economically down bhramins will be same as the same percentage for any other caste. I can tell this for sure from what I observe in my surroundings.

One thing is for sure, the curse of those poor bramins will not go off.

Regards
Sa.Thirumalai

 
At 3:56 am, Blogger வஜ்ரா said...

I think Francois Gautier's commentary on rediff.com is to "dispel the myth" that the Communists are perpetrating. That the Brahmins are "Status group capitalists."

//
தவராக நினைக்கவேண்டாம்,நீங்கள் இடதுசாரித் தத்துவதையே சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள் என அஞ்சுகிறேன்.

பார்ப்பனர்கள் யார்?

இந்தியாவில் பார்ப்பனர்கள் என்பவர் Status Group Capitalists என்று Max Weber என்பவர் தெளிவாக எழுதியிருக்கிறார்.
//

சந்திப்பின் ஒரு பதிவில் பார்பான வெறுப்புப் பின்னூட்டத்தில் பார்த்தது.

ஜல்லியடிக்க நினைப்பவர்கள் முக்கியமாக, யோஹன் பெரீஸ், அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களில் பின்னூட்டமிட்டுவிட்டு ஓடுபவர்கள் தயவு செய்து இதைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

வஜ்ரா ஷங்கர்.

 
At 4:21 am, Blogger ஜயராமன் said...

சுந்தர் அவர்களே!

///தங்கத்தட்டுல வெள்ளி ஸ்பூன்ல சாப்பிட்டு பட்டு மெத்தைல தூங்கறவங்களுக்கு "துரு"ன்னா என்னன்னு தெரியுமா?////

தாங்கள் கேலி செய்வது என்னையா இல்லை அந்த சாதிக்கார்ர்களையா. எதுவாக இருந்தாலும், மிக தவறான எண்ணம்.

இந்த கட்டுரையின் விளக்கமே தங்களின் இந்த பேச்சுக்களை அந்த சாதியருக்கு பொருந்தாது என்பதுதான்.

அதை தாங்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது ஒப்பவில்லையா? தாங்கள் ஒப்பவில்லை என்றால் சரியான பதிலை காணோமே. இந்த இடக்கு ஏன்?

அருள்மோலி அவர்களுக்கு

/////இதே போன்ற ஒரு கட்டுரையை அசோகமித்திரன் இந்தியா டுடேயில் எழுதி வாங்கிகட்டிக் கொண்டார். இப்போது இன்னும் ஒருவர். வாழ்க வளமுடன்.////

இதை எழுதியவர் இந்தியர் இல்லை. அவர் வாங்கிக் கட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. அசோகமித்திரன் 'வாங்கிகட்டிக்கொண்டார்' என்பதே கருத்து சுதந்திரம் இந்த விஷயத்தில் மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

///Looks like the brahmins are not working in the IT Sector in Karnataka. ///

For every brahmin in IT today, there are innumerable others outside. Many of the IT staff in K'taka belong outside the state also. But, I acknowledge that I do not have the year infomation or more details on this. I read this in Francois Gautier's essya like others also.

விடாது கருப்பு அவர்களே!

////பின்னூட்டம் பெரிதாக இருந்ததால் தனிப்பதிவாக எழுதி இருக்கிறேன்.

படித்து கருத்து சொல்லும் வோய்! ///

தங்கள் பதிவு கண்டேன். தரக்குறைவான தனிமனித சாடல்களும் விவாத விஷயத்துக்கு சம்பந்தமில்லாத தங்கள் நீட்டி முழக்கிய வார்த்தை ஜாலங்களும் தங்களை மிகவும் தரம் தாழ்த்துகின்றன.

இதில் சம்பந்தமில்லாமல் தப்பு தப்பாக என் சாதி பற்றி ஆராய்ச்சி வேறு. அதற்கு ஜால்ரா போடும் கூட்டம் வேறு.

நான் இந்திய பொருளாதாரத்தையோ அல்லது புராதான சொத்துக்களையோ இந்த பதிப்பில் எங்கு பேசினேன்?

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் கருப்போ!.

தங்கள் பதிவில் காழ்ப்புணர்ச்சியும் அவதூறும் தூக்கி நிற்பது தங்களின் தரத்திற்கு உரைகல்.


நன்றி

குகன் அவர்களே,

////புள்ளி விபரங்களை நான் மறுக்கவில்லை. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் இந்தப்பதிவில் கூறியுள்ள மனிதர்களை அன்றாட வாழ்வில் சந்தித்திருக்கிறோம்? இதை வைத்து நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கமுடியாது.////

புள்ளிவிவரங்களை திறந்த மனதுடன் ஆராய்வோம். அவை சொல்லும் விஷயங்களை திறந்த புத்தியுடன் ஏற்றுக்கொள்வோம். அவை நிதர்சனத்துக்கு விபரீதமாக இருந்தால் ஒன்று புள்ளிவிவரம் தவறாகவோ இல்லை நாம் காணும் காட்சி தவறாகவோ இருக்கும்.

தங்கள் பதிலை பார்த்தால் மனதை திறக்க மறுப்பது (இல்லை பயப்படுவது ) போல் தோன்றுகிறது.

இந்த புள்ளிவிவரங்களை (இந்த சாதியினரின் ஏழ்மையை) வாழ்க்கையின் நிஜத்தில் சந்தித்தவர்களும் இங்கு பதிலை பதிந்துள்ளார்களே. அவர்களுக்கு தங்களிடம் என்ன பதிலை எதிர்பார்க்கலாம்?

test page அவர்களே,

/////உம்ம கணக்கு சரிதாண்ணா .... அப்படியே மத்த சாதிகாரா எவ்வளவு பேர் பொது கழிப்பிடங்கள் சுத்தம் செய்யரா-னு ஒரு கணக்கு சொல்வீரா... ஏன் ஓய் இப்படி சாதி, சாதி-னு கட்டின்டு அழரீர் .../////

சாதி சாதி என்று நான் எங்கே அலைந்தேன். என் சாதி சம்பந்தமான முதல் பதிவு இது. இதுவும் ஒரு ஆக்கபூர்வமான நிலை என்ன என்று உணரவே பதித்தேன்.

எந்த சாதியாக இருந்தாலும் வருமையில் வாடுவது விரும்பாத்துதான். அதை தவிர்க்கவே சமுதாயம் முயலவேண்டும். அதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இங்கு வந்துள்ள பல பதிப்புகளை பார்த்தால், இது இவாளுக்கு நன்னா வேணும் என்ற வித்த்திலேயே அமைகிறதே. இது தங்களுக்கு சரி என்று படுகிறது.

கழிப்பிடங்கள் சுத்தப்படுத்துவது மற்ற வேலைகளை போலத்தான். அதை இழிவு என்று சொல்வதும், சாதி சாயம் பூசுவதும் பெரிய குற்றம். ஆனால், இத்தொழில் ஏழ்மையின் அடையாளம். அத்தொழிலில் இருப்பவர்கள் யாராயினும் அவர்களுக்கு இந்த சமுதாயமே குற்றவாளி. இதில் விலக்கு இல்லை.

லக்கி லுக் அவர்களே!,

/////அய்யா, கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகர்களுக்கு 300 தான் கிடைக்கிறது என்கிறீர்கள்.... நீங்கள் வடபழனி அல்லது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு போய் பாருங்கள்.... ஒரு அர்ச்சகர் குறைந்தது ஒரு நாளைக்காவது ரூ. 300 சம்பாதிப்பார்....////

அய்யா, தாங்கள் ஒரு கபாலி ஒரு வடபழனியையே காண்கிறீர்கள்.

அக்கோவில்களிலும் அம்மை, அப்பன் சன்னதியில்தான் காசு. அதற்கும் போட்டா போட்டி. பாலிடிக்ஸ்.

தமிழகத்தில் இவ்வாறுள்ள கோயில்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். எத்தனை ஆயிரம் கோவில்கள் ஒரு வேளை கூட விளக்கின்றி இருக்கின்றன தெரியுமா? அரசே இதற்காக விளக்கொளி திட்டம் போல நடத்துவது தெரியுமா? இந்த ஆயிரக்கணக்கான கோவில்களில் தினசரி பூசை செய்யும் பூசாரிகள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று தெரியுமா.

தாங்கள் தயை செய்து மயிலாப்பூரை விடுத்தி வெளியே ்வாருங்கள், ப்ளீஸ்.

john-paris அவர்களே

கீதா அவர்கள் சொன்னது

///கிருஷ்ணர் பிறந்த மத்ராவில் "பிரிஜ்பாஸி பிராமின்" என்ற உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். ///

'உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள்...' என்பதை எவ்வாறு தாங்கள் 'உயர்குல பிராமணர்கள்' என்று புரிந்துகொண்டீர்கள். தவறா இல்லை திரிக்கப்பட்டதா.

உயர்குலம் என்ற வகுப்பை சேர்ந்த பார்ப்பனர்கள் என்றுதான கீதா அவர்கள் சொன்னது என்று தெரிகிறது. தாங்கள் பிராமணர்களில் உயர்குலம் யார் என்று இடக்காக கேட்பது ஏன்?

குழப்பம் தீர்ந்ததா?

நன்றி

பின்னோட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி

 
At 5:06 am, Anonymous Anonymous said...

ஐயா!
உயர் குலத்தைச் சேர்ந்த பிராமணர்- என்பது வேறு உயர் குலப் பிராமணர் வேறு என்கிறீர்கள். அதாவது
சென்னையைச் சேர்ந்த பிராமணர்- என்பது வேறு சென்னைப் பிராமணர் வேறு என்பது போல்!
எட ராமா!!! தலை சுத்துதடா,,,,??,
தெரியாம வந்துட்டேன்; விட்டுடுங்கோ!; ஒங்களப் பகவான் ரட்சிப்பான்!!
யோகன்
பாரிஸ்

 
At 5:18 am, Blogger லக்கிலுக் said...

ஜெயராமன்,

இந்தியாவில் சுமார் 3 சதத்துக்கு குறைவாக இருக்கும் ஒரு இனத்தில் இருக்கும் சுமார் 10 சத மக்களைப் பற்றி இவ்வளவு கவலைப்படும் நீங்கள்.... சுமார் 85 சத மக்களின் வாழ்க்கையைப் பற்றி இதுவரை எண்ணிப் பார்த்ததுண்டா?

பிராமணன் மலம் அள்ளுகிறான் என்றதுமே கண்ணில் நீர் வருகிறதே உங்களுக்கு.... காலம் காலமாக ஒரு சமுதாயமே இதற்காக பிராமணர்களால் ஒதுக்கப்பட்டு ஒடுங்கப்பட்டு நிற்கிறதே.... அவர்களைப் பற்றி இதுவரை ஏதாவது நீங்கள் பதிந்ததுண்டா?

ஜாதியை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்கள்.... வருணாசிரம ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்கள்... அவர்களால் தான் இந்திய மக்கள் சமுதாயமே ஏற்றத் தாழ்வோடு இருக்கிறது....

இதற்கு பிராயச்சித்தமாக இப்போதிருக்கும் பிராமணர்கள் அவர்களது முன்னோரால் ஒடுக்கப்பட்டவர்கள் மேன்நிலைக்கு வர உதவ வேண்டும்....

உதவா விட்டாலும் பரவாயில்லை... உதவும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலே போதும்.....

 
At 5:30 am, Blogger ஜயராமன் said...

யோகன் பாரீஸ்,

தங்கள் கேலி எனக்கு புரியவில்லை. என் தமிழ் பதில் தங்களுக்கு புரியவில்லை.

வாருங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

///உயர் குலத்தைச் சேர்ந்த பிராமணர்- என்பது வேறு உயர் குலப் பிராமணர் வேறு என்கிறீர்கள்.////

இங்கு தமிழில் அமையும் வார்த்தை சிக்கனத்தால் என் எண்ணம் தங்களிடமிருந்து வேறுபடுகிறது

'உயர்குலத்தைச் சேர்ந்த' என்கிற வரிகள் பிராமணர்களை குறித்த பொது விளக்க அடைமொழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது பிராமணர்களில் மேலும் வரையறுக்கும் ஒரு அடைமொழியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இதலால் இந்த குழப்பம்.

இதற்கு தயை செய்து என்னையும் வேறு சாதியையும் கேலி செய்ய வேண்டாம்.

பிராமணர்கள்....' = Brahmins, who are part of higher society. This means that brahmins are part of higher society.

"who are part of higher society" is an explanation for brahmins.

நன்றி

 
At 5:48 am, Blogger ஜயராமன் said...

luckylook அவர்களே,

/////இந்தியாவில் சுமார் 3 சதத்துக்கு குறைவாக இருக்கும் ஒரு இனத்தில் இருக்கும் சுமார் 10 சத மக்களைப் பற்றி இவ்வளவு கவலைப்படும் நீங்கள்.... சுமார் 85 சத மக்களின் வாழ்க்கையைப் பற்றி இதுவரை எண்ணிப் பார்த்ததுண்டா?////

தங்கள் பதிலில் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்த விஷயத்தில் தங்களுக்கு கருத்து எதுவும் இல்லையென்றால் இப்படி என்னைப்பற்றி அவதூறாக ஏன் எழுதுகிறீர்கள்?

என்னைப்பற்றி தனி முறையில் குற்றங்சாட்டி எழுத தங்களுக்கு யார் உரிமை தந்தது?

என்னைப்பற்றி தங்களுக்கு என்ன தெரியும்?

என் பதிவுகளில் நான் எனக்கு மனமார்ந்த விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். அவற்றுக்கு வரைமுறை நான் மட்டுமே இட்டுக்கொள்கிறேன்.

இந்த particular பதிப்பு புது ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட நேர்ந்ததால் ஏற்பட்ட இயற்கையான ஈர்ப்பு. இதற்கு தாங்கள் சாதி சாயம் பூசி கொச்சைப் படுத்துவதால் தங்களுக்குதான் இழுக்கு!

இதைக்கூட தங்களுக்கு விலக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

மேலும் என் பதிப்புகளுக்கு நேரிடை விமர்சனங்களையே தங்களிடம் வேண்டுகிறேன். இம்மாதிரி நீ அதை செய்தாயா, இதை செய்தாயா என்று குப்பை இரைப்பதை அல்ல.

மேலும், எல்லோரும் தாழ் நிலை மக்களிடம் தங்கள் பெருமையை நிலைநாட்டியே தீரவேண்டும் என்பதும் இல்லை.

எந்த ஒரு விஷயத்தை சொல்கிறவர்களிடமும் போய் நீ இதற்கு என்ன செய்தாய், அதற்கு என்ன செய்தாய் பெரிசா பேச வந்துட்ட... என்று சொல்ல முடியாது.

அவரவர்கள் தங்களால் இயன்ற அளவில் இந்த தமிழ்மணத்திலே கலந்து தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். பல கருத்துக்கள் என் மனம் கவர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறது.

கடை விரித்த எல்லோரிடமும் தனி சுவை. (சில வெறுப்பு பரப்பும் கருமை மனம் கொண்டவர்களை தவிர)

தங்களின் காழ்ப்புணர்ச்சியையும், விஷ தாக்கல்களையும் தயை செய்து வேறு இடம் சென்று கடை போடுங்கள்.

இந்த தமிழ்மணத்தில் மேலும் மணம் வீசட்டும்.

இது தனிப்பட்ட முறையில் தங்களை சாடுவதற்கில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும். வேகத்தில் என் கருத்துக்களை விளக்குவதில் சில குறைகள் நிகழ்கின்றன.

நன்றி

 
At 6:42 am, Blogger ஜயராமன் said...

யோகான் அவர்களே,

////என் கருத்துக் எதிராக எந்த புதுவிதமான ;கருத்தையும்; நீங்கள் தருவது போல் தரவில்லை////

தங்களை குழப்பியதற்கு மன்னிக்கவும்.

இந்த தொடரை மேலும் வளர்த்த விரும்பவில்லை. பின்னோட்டத்தை கூட்ட பண்ணிய சதி என்று வசைச்சொல் வாங்கவும் விரும்பவில்லை.

தங்கள் எனக்கு தங்கள் மின்னஞ்சல் கொடுத்தால் இவ்விஷயத்தை மேலும் பேசுவதில் எனக்கு மறுப்பில்லை. எப்போதும் புது பொருள் காண்பது சுவாரசியமானது தானே!

இத்துடன் முற்றுப்புள்ளி.

நன்றி

 
At 9:08 am, Blogger Sundar Padmanaban said...

//தாங்கள் கேலி செய்வது என்னையா இல்லை அந்த சாதிக்கார்ர்களையா. எதுவாக இருந்தாலும், மிக தவறான எண்ணம். //

அய்யய்யோ "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது" என்பது உண்மைதான். நிற்க.

நான் யாரையும் கேலி செய்யவில்லை - செய்யவும் மாட்டேன்.

காலங்காலமாக சில குறிப்பிட்ட சமூகத்தினர் அநியாயமாக ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை அந்தச் சங்கிலிகளிலிருந்து விலக்கி விடுவிப்பது கடமை. ஆனால் "ஒரு கண்ணுக்கு மறுகண்" என்பதிலோ "முப்பாட்டன், பாட்டன், அப்பன் செய்த தப்புக்குப் புள்ளைங்க அனுபவிக்கணும்" என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. எந்த வேறுபாடுமில்லாமல் சமவாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும்.

வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்து ஒன்றுக்கு நோய் இருந்தால் அதன் மீது சிறப்பு கவனம் செலுத்துவோமே - அது மாதிரி இதுவரை நசுக்கப்பட்டவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிக்கவேண்டும். இன்னொரு பிள்ளையை நோய்வாய்ப் படச் செய்வது தீர்வல்ல.

வரலாறு சாக்கடை. கிளறினால் எல்லாருக்கும் நாறும். அதைவிட ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்று யோசித்துச் செயல்படுத்துவதில் நேரத்தைச் செலவிடவேண்டும் என்று நினைக்கிறேன். பாத்திரத்தில் இருக்கும் நண்டுகளைப் போல முன்னேறுபவர்களைக் கீழே இழுத்துப் போடுவதற்குப் பெயர் "பரிகாரம்" "சீர்திருத்தம்" என்று தவறாக எண்ணிக்கொண்டார்களோ என்று தோன்றுகிறது.

நீங்கள் உள்ளிட்டுள்ள கட்டுரையின் ஆதாரப் பிரச்சினை "வறுமை" - "சாதி"யல்ல. "பார்ப்பனர்" என்ற இடத்தி்ல் எந்த சாதிப் பெயரையும் போட்டாலும் பொருந்தும். வறுமையில் உழல்பவர்களுக்கு சாதி சாஸ்திரங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் குறிப்பிட்ட சாதிக்காரர்களைப் போல பல மடங்கு மற்ற சாதிக்காரர்கள் பல மடங்கு கஷ்டப்படுகின்றார்கள் என்பதையும் மறுக்கமுடியாது இல்லையா? ஆக ஆதாரப்பிரச்சினையான "வறுமை"யைப் பார்க்கவேண்டுமேயொழிய எந்தச் "சாதி"க்காரன் வறுமையில் உழல்கிறான் என்பது முக்கியமல்ல. யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி தேவை.

அவ்வளவுதான் எந்நிலை.

இதில் எந்த உள், வெளிக்குத்துகளும் இல்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

 
At 9:36 am, Blogger ஜயராமன் said...

சுந்தர் அவர்களே!

////அய்யய்யோ "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது" என்பது உண்மைதான். நிற்க////

அய்யா, அய்யா. என்னை ஒருத்தர் தமிழர் என்று ஒத்துக்கொண்டு விட்டாரே.

ரொம்ப தாங்க்ஸ் சார். இந்த தமிழ்மணத்தில இந்த சர்டிபிகேட் கிடைக்கறதுதான் சார் ரொம்ப கஷ்டம்.

நன்றி

 
At 9:52 am, Blogger Sundar Padmanaban said...

//அய்யா, அய்யா. என்னை ஒருத்தர் தமிழர் என்று ஒத்துக்கொண்டு விட்டாரே.
//

அடுத்து இன்னொண்ணை ஆரம்பிச்சிட்டீங்களா?

நீங்க இன்னும் என்னுடைய முதல் மடலைத் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நற்சான்றிதழ் தருவதற்கு நான் யார்?

நானும் தமிழை ஓஹோ என்று இல்லாவிட்டாலும், ஓரளவிற்காவது பிழையில்லாமல் எழுதப் பேசப் படிக்கத் தெரிந்த தமிழன்தான். நான் தமிழன் என்பதற்குச் சான்றிதழ் தரும் தகுதிவாய்ந்த அந்தப் "பரம் பொருள்" யாரென்று யாமறியோம் பராபரமே! :) :)

ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கீங்க போல இருக்கு. வேற எதாச்சும் எழுதுங்களேன்!

 
At 10:46 am, Blogger SHIVAS said...

என்னங்க இது அநியாயமா இருக்கு. ஒரு அம்பது வருஷத்து ரிசெர்வேஷனுக்கே வாரணாசில பார்பனர்கள் ரிக்ஷா இழுக்குறாங்க. ஆனா இரெண்டாயிர வருஷத்துக்கு மேல இருந்த ரிசெர்வேஷனையும் தாண்டி அம்பேத்கார் இந்திய சட்டத்தையே வடிவமைக்கற அளவுக்கு வளர்ந்திருக்கிறாருன்னா எவ்வளவு பெரிய விஷ்யம். ஒரு தலித்துக்கு உள்ள திறமையையும் ஒரு பார்பனருக்கு உள்ள கையாலாகாத தனத்தையும் இப்படி பட்டுன்னு போட்டு உடைச்ச உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.

 
At 10:51 am, Blogger SHIVAS said...

//இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது. இவ்வாறு ஒரு திட்டமும் அர்ச்சகர்களுக்கு இல்லை.//

அது சரி அது சரி. இப்ப கொண்டுவந்தே ஆகவேண்டும். இனிமே நம்ம பயலுக தான் அர்ச்சகராக போரானுங்கில்ல. தில்லை மூவாயிராம் இருக்கற வீடுகளுக்கு நம்ம பயலுக போய் மீன் குழம்பு வைக்கப்போரானுங்க.

 
At 11:07 am, Blogger SHIVAS said...

//கோயில் அர்ச்சகர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. தமிழ்நாட்டு பணக்கார ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகருக்கு மாதம் ரூ.300ம் தினசரி ஒரு பட்டை சாதமும் சம்பளம்//

அதெல்லாம் வேணாம் விடசொல்லுங்க. அதுகல நம்ம பசங்க பாத்துக்குவானுங்க. மாட்டு தோல்ல செருப்பு தைய்க்கிற கம்பனியில வேலை, மாதம் 3000ரூபாய் சம்பளம். மாமியும் வரலாம்.அவா அவா தெரமைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கூட்டி கொடுக்கப்படும் என்று சொன்னால் எத்தனை கஷ்டஜீவன் நடத்தும் அர்ச்சகர்களும் மாமிகளும் வேலைக்கு வரத்தயார்? ஒரே ஒரு கன்டீஷன் வரும்போது பூநூல் அணிந்து வரப்படாது. அப்படி வந்துட்டாள் என்று சொன்னால் அவா பிள்ளைகளுக்காக பெரிய போராட்டமே நடத்தி தலித் கோட்டா வாங்கி கொடுத்துபுடறேன்.

"பார்ப்பனர்கள் நவீன இந்தியாவின் தலித்துக்கள்" அப்படிங்கிற பேரும் பொறுத்தாமாயிடும்.

 

Post a Comment

<< Home