Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Friday, July 28, 2006

முஸ்லிம்களும் யாகுதிகளும்

முஸ்லிம்களும் யாகுதிகளும் அண்ணன் தம்பிகளாக நூற்றாண்டுகள் பழகினார்கள். கடந்து வந்த பல நூற்றாண்டுகளில் கடந்த 50 வருடங்களை தவிர முஸ்லிம்கள் யாஹீதிகளை வெறுத்ததாக சரித்திரம் இல்லை. யாஹீதிகளின் நிரந்தர எதிரி கிருத்துவர்கள்தான் என்று இருந்தது சமீப காலம் வரை.

உலகம் முழுவதும் யாகுதிகள் சித்திரவதை படுத்துவது எத்தனையோ நூற்றாண்டுகளாக வழக்கம். கிருத்துவ மதம் ஓங்க ஓங்க யாகுதிகளின் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டது. ஐரோப்பிய சரித்திரத்தில் யாகுதிகளின் ரத்தம் ஓடாத சகாப்தங்கள் கிடையாது என்று ஆனது.

ஆனால், இன்று முஸ்லிம்களும் யாஹீதிகளும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள். ஹிஜ்புல்லா என்ற விஷ பிராணி லெபனானில் பல வருடங்களாக குடித்தனம் பண்ணி கொழுத்து வருகின்றது என்பது வெளிப்படை. இதற்கு எந்த நாடும் கண்டிக்க முனைய வில்லை. இந்தியாவையும் சேர்த்துதான். தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்ற கீரல் விழுந்த ரெகார்டையே கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. ஆனால், இவர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை.

இஸ்ரேலின் இப்போதைய போர் வெறி அளவுக்கு அதிகமானது. அது நிச்சயம் கண்டிக்க வேண்டியது.

ஆனால், அவர்கள் இந்த எதிர்வினை புரிந்துகொள்ளகூடியது. (இது சப்பைகட்டல் இல்லை. விளக்க பார்வை அவ்வளவே) இந்த உலகில் எந்த ஒரு சமுதாயமும் மற்ற சமுதாயம் அழிய வேண்டும் என்று முயற்சிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால், ஹிஜ்புல்லா என்ற ஒரு சமுதாயம் இதற்காகவே ஜிகாத் நடத்தி வருகிறார்கள். இதை எந்த தன்மானமுள்ள சமுதாயம் சகிக்க முடியாதது.

லெபனான் ஒரு அற்புதமான நாடு. அங்கு க்ரிஸ்துவர்களும், யாஹீதிகளும், முஸ்லிம்களும் கலந்து எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஏழைகள். அரபிக்கார்ர்கள் போன்று திடீர் பெட்ரோலில் கொழுத்தவர்கள் கிடையாது. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்கள் குடும்ப பொருளாதாரம் மேன்பட வேண்டும் என்பதே. ஆனால், இன்று 30% லெபனான் பிரஜைகள் அகதிகளாக நாட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்காக முதலில் கடமைப்பட்டது மத்திய கிழக்கு பணக்கார நாடுகள்தான். ஆனால், அவர்கள் *** கூட அசைக்கவில்லை.

எல்லோரையும் போல வாய்சவடால் விட்டு கும்பலில் கத்தி ஓய்ந்துவிடுகிறார்கள்.மரியம் யாஹ்யா மருஹ். 75 வயது. விடிகாலை 4.30 க்கு தொழுகைக்கு எழும்போது ராக்கெட்டால் வீழ்த்தப்பட்டார். அவர் குடும்பத்தில் 15 பேரில் 6 பேர் மட்டுமே பிழைத்தார்கள். அவர் மகனும் அந்த மகனின் 5 மகன்களும் இறந்தவர்களில் அடக்கம். 'இஸ்ரேலை நாங்கள் எப்போதுமே வெறுத்ததில்லை. ஆனால், இதுநாள்வரை' என்கிறார் மரியம்.15 வயது காதீர் ஷைத்தோ. ஷியா. பள்ளி மாணவி. தாடை வாயில் இழப்பால் பேச்சை இழந்துள்ளார். ராக்கெட் தாக்கலில் முகத்தில் புண் மற்றும் எரிகாயம் அதிகமாக. பேரூட்டில் இருக்கும் சொந்தக்கார்ர்களால் 23 ஆம் தேதி ஒரு மினி பஸ் இவர்களை மீட்க வந்து அதில் இவர்கள் ஊரை விட்டு ஓடும் போது ராக்கெட் தாக்கம். மூன்று பேர் இறந்தது இவளுக்கு தெரியும். கடைசியாக ராக்கெட் விழுந்தபோது, வயதான தன் பக்கத்து வீட்டு காரருக்கு இடம் கொடுக்க எழுந்த தந்தை, பின் என்ன ஆனார் என்று இவருக்கு இன்னம் சொல்லப்படவில்லை.

====================

An Eye for an Eye only makes the whole world blind!!!

எங்களால் கண்ணீர் மட்டுமே விட முடிகிறது. அதுவும் ரொம்ப யோசனைக்குபின்.

11 Comments:

At 3:01 AM, Anonymous Anonymous said...

ஜயராமன் ஐயா,

நல்ல பதிவு

தங்களின் துக்கிரித்தனமான பல காரியங்களில் தங்கள் செயலிழந்து போகிறீர்கள்.

தாங்கள் தங்கள் கருத்துக்களை விவகாரமில்லாத இது போன்ற விளக்கண்ணை பதிவுகளில் மட்டும் பதித்து நின்றுகொள்ளவும்

- பிரகாஷ்

 
At 3:41 AM, Blogger Muse (# 5279076) said...

ஜயராமன் ஸார்,

>>>இஸ்ரேலின் இப்போதைய போர் வெறி அளவுக்கு அதிகமானது. <<<<

நிலமெல்லாம் ரத்தம் எழுதிய பா. ராகவன் இஸ்ரயீல் எப்போதும் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறது என்று கூறுகிறார். (நன்றி பத்ரிக்கு)

மேலதிகத் தகவல்களுக்கு:

http://thoughtsintamil.blogspot.com/2006/07/blog-post_115400599251024186.html

யூதர்களுக்கு யாகுதிகள் என்கிற பெயர் புதியதாக இருக்கிறது. புதிய வார்த்தைக்கு நன்றிகள்.

 
At 4:19 AM, Blogger Vajra said...

அது என்ன...யாகுதிகள்? யூதர்கள் இல்லையா?

Yehudi என்று இவர்கள் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கின்றனர்..அதை அப்படியே தமிழிலில் லொல்லிவிட்டீர்களா? !

..
இந்த உலகில் எந்த ஒரு சமுதாயமும் மற்ற சமுதாயம் அழிய வேண்டும் என்று முயற்சிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால், ஹிஜ்புல்லா என்ற ஒரு சமுதாயம் இதற்காகவே ஜிகாத் நடத்தி வருகிறார்கள். இதை எந்த தன்மானமுள்ள சமுதாயம் சகிக்க முடியாதது.
..

அரபிக்களின் இந்த ஆசை தான் இவ்வளவு அழிவுக்குக் காரணம்..

 
At 4:27 AM, Anonymous johan -paris said...

அண்ணா!
யார் யாரை அடித்தாலும்; போவது ஏழை உயிர்;உடமை,நிம்மதி; வசதி படைத்தோர் தப்பிவிடுகிறார்கள். இவர்களை ஆண்டவனும் கைவிட்டு விட்டான். "ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"- நடப்பதாக இல்லை.
யோகன் பாரிஸ்

 
At 5:00 AM, Blogger கோவி.கண்ணன் said...

//தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்ற கீரல் விழுந்த ரெகார்டையே கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. ஆனால், இவர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை.//

குருதிப் புனல் படத்தில் சொல்லும் 'ப்ரேக்கிங் பாய்ன்ட்' தான் காரணம்.

பி.கு : பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்கு மட்டும் தான்.

 
At 9:17 AM, Blogger ஜயராமன் said...

ம்யூஸ் சார்,

////

ஜயராமன் ஸார்,

>>>இஸ்ரேலின் இப்போதைய போர் வெறி அளவுக்கு அதிகமானது. <<<< ///

அதெப்படி சார் எப்போதும் இப்படி நுணுக்கமாய் கலக்கிறீங்க. இப்போதைய என்கிற வார்த்தைக்கு அழுத்தம் சத்தியமாய் எனக்கு தோன்றவில்லை. அப்படி நீங்கள் கொடுத்ததில் அர்த்தமே மாறிவிட்டது. ஆனால், அதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது.

தங்கள் கொடுத்த லிங்கிக்கு நன்றி. மேலும் விவரங்கள் தெளிந்து அறிய உதவியது.

===========

வாங்க வஜ்ரா சார்,

/// அது என்ன...யாகுதிகள்? யூதர்கள் இல்லையா?

Yehudi என்று இவர்கள் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கின்றனர். ///

யாஹூதி என்று அரபிக்காரர்கள் சொல்லுகிறார்கள். யஹூதி என்று ஹீப்ரூவில் சிறிது மாறும் என்று நினைக்கிறேன். இதுதான் சரியான பெயர். எல்லாவற்றையும் தமிழ்படுத்துகிறேன் பேர்வழி என்று யூதர்கள் என்று நாம் சொன்னாலும், யஹூதிகள் என்பதே சரியான பெயர் என்று எனக்கு தோன்றியது.

///அதை அப்படியே தமிழிலில் லொல்லிவிட்டீர்களா? !///

இது எழுத்துப்பிழை மாதிரி தெரியவில்லை. நான் 'லொல்லு'வது சரிதானே?

///அரபிக்களின் இந்த ஆசை தான் இவ்வளவு அழிவுக்குக் காரணம்.. ///

ஆமென்!

யோஹான் சார்,

///"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"- நடப்பதாக இல்லை.
யோகன் பாரிஸ் ///

இந்த பரிதாபத்திற்காக மட்டுமே நான் இந்த பதிவை இட்டேன். இந்த வலை உலகில் என் கண்ணீர் ஒரு துளி.

கண்ணன் சார்,

///பி.கு : பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்கு மட்டும் தான். ///

ரொம்பதான் உஷாரா கீரீங்க. என் பதிவு என்கிற பயம் மேலும் விவகாரமான மேட்டர் என்று எல்லாமே கீது. உஷார் தேவைதான்.

பின்னூட்டம் இட்ட தங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி

 
At 9:33 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//ரொம்பதான் உஷாரா கீரீங்க. என் பதிவு என்கிற பயம் மேலும் விவகாரமான மேட்டர் என்று எல்லாமே கீது. உஷார் தேவைதான்.//

ஜெயராமன் சார்,
உங்கள் பதிவில் மட்டுமல்ல... எல்லோருடைய பதிவிலும் இதே வழியைத் தான் கையாளுகிறேன்.
என்னோட மூக்கு ரொம்ப சின்னது
:)))

 
At 9:36 AM, Blogger ஜயராமன் said...

கண்ணன் சார்,

///என்னோட மூக்கு ரொம்ப சின்னது
:))) ///

விளையாட்டாகத்தான் சொன்னேன். தங்கள் மூக்கு பத்திரம். கண்ட விஷயத்தில் நுழைக்காதீர்கள்.... :-)))

 
At 9:40 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//விளையாட்டாகத்தான் சொன்னேன். தங்கள் மூக்கு பத்திரம். கண்ட விஷயத்தில் நுழைக்காதீர்கள்.... :-)))//

கேட்டுக்க மாட்டோமா !:))

 
At 12:09 PM, Anonymous Anonymous said...

ஹெஸ்புல்லா,ஹமாஸ் போற்ற தீவிரவாத கும்பல்களின் ஒரே நோக்கம் யுதர்களை அழிக்க வேண்டும்.யுதர்கள் இன்னொரு முறை ஏமாரமாட்டார்கள்.

இஸ்ரெலின் தாக்குதலை கண்டிக்கும் உலகநாடுகள்,ஹெஸ்புல்லாவின் தாக்குதலை ஏன் கண்டிக்கவில்லை?யுதர்களும் மனிதர்கள்தனே?ஏன் இந்த இரட்டை வேடம்?
இப்பொளூது ஹமாஸ் இஸ்ரெலுக்கு எதிராக தற்கொலை தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டிள்ளது.இதையும் யாரும் கண்டிக்கமாட்டார்கள்.காரணம் சாவது யுதர்கள்தானே என்ற எண்ணம்.

 
At 8:58 AM, Blogger ENNAR said...

இதை படிக்க பார்க்க மணது கஷ்டமாகத் தான் இருக்கிறது வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை

 

Post a Comment

<< Home