Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Thursday, June 22, 2006

தலித் கிருத்துவர்கள்

கிருத்துவர்களின் மதப்பிரசாரம் ஒரு நூறு வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம், கிருத்துவ தலித்துக்களுக்காக செலவிடப்பட வேண்டும்.

சொல்பவர் நான் இல்லை. உடனே காறித்துப்பி பின்னோட்டம் இட வேண்டாம்.

‘ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கம்’ அமைப்பின் அங்கமான தலித் கிருத்தவர்களின் தேச மாநாட்டில் அதன் தலைவர் R.L.Francis இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அவர் பேசியது தலித் கிருத்துவர்களின் மனக்குமுறல்களை வெளிக்காட்டியது. கிருத்துவ சர்ச் அமைப்புகள் தலித் கிருத்துவர்களை புறக்கணிக்கின்றன. மேல்ஜாதி கிருத்துவர்கள் மட்டுமே சர்ச்சுகளில் பதவி பெறுகிறார்கள், என்கிறார் அவர்.

இந்தியாவில் அரசாங்கத்துக்கு அடுத்து 40,000 உடல்நல, கல்வி, மற்றும் பிற சமுதாய நிறுவனங்களை நடத்தும் மிகப் பெரிய சக்தி கிருத்துவ சர்ச். இந்த சர்ச்சுகள் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. ஆனால், இது வசதிபடைத்த மேல் மட்டவர்களுக்கே நடத்தப்படுகின்றன. தலைநகர் டில்லியில் கூட தலித்துக்கள் பங்கேற்கும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் மிக குறைவு (என்கிறார் பிரான்சிஸ்).

இதுவரை, தலித் கிருத்துவர்கள் மேம்பாட்டிற்காக சர்ச் ஒரு கல்வி கவுன்சில் மாதிரி அமைப்பை கூட ஏற்படுத்தியதில்லை. இதனால், சர்ச்சின் பணம் முழுதும் மேல்மட்ட கிருத்துவர்களின் கையிலேயே இருக்கிறது. தலித் கிருத்துவர்களின் நலனை புறக்கணித்து சர்ச் பிறர் நலனுக்காக இந்த பணத்தை உபயோகப்படுத்துகிறது, என்கிறார் பிரான்சிஸ்.

ஒரு காரைத் துரத்தும் நாய் போல கிருத்துவ மதம் இந்து தலித்துக்களை துரத்தி ‘அறுவடை’ செய்கிறது (போப்பின் வார்த்தையில்). ஆனால், காரை நெருங்கி விட்ட நாய் போல, பின்னால் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் விட்டு விடுகிறது. (இந்த பாரா வேறு மசாலா. பிரான்சிஸ் சொன்னது இல்லை!)

கிருத்துவர்களும், சர்ச்சுகளும், கிருத்துவ மத்த்தினர் நடத்தும் பள்ளிகளிலும், சமூக அமைப்புகளிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், கிருத்துவர்களுக்கு அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள், என்கிறார் பிரான்சிஸ். என்ன இரட்டை வேடம். இந்த இட ஒதுக்கீடு கேட்பது இவர்கள் ஆளுமைக்காகவே.

இந்த சர்ச்சுகளை நடத்தும் பிஷப்புக்கள் ரியல் எஸ்டேட்டுக்களை தன் மனம் போன படி சுய லாபத்திற்காக விற்பதும், வாங்குவதும் செய்கிறார்கள். தலித் நலனுக்காக வசூல் செய்த பணம், செலவழித்த பணம் எதுக்கும் கணக்கு இல்லை என்கிறார் பிரான்சிஸ்.

ஆனால், இந்த கிருத்துவ அமைப்புகள் மதமாற்ற பிரச்சாரத்திற்காக ஏராளமாக செலவழித்துக்கொண்டிருக்கின்றன. மதம் மாறிய கிருத்துவர்களின் நலனுக்காக சர்ச் ஒன்றுமே செய்வதில்லை என்கிறார் அவர்.

இந்த மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு தலித் கிருத்துவர்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றன. மதப்பிராசர கூட்டங்களில் “குருடர்கள் பார்க்கிறார்கள், மூடர்கள் பேசுகிறார்கள்” என்றெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்க பொய் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் சொல்கிறார்.

ஒருவேளை, தன் மன வலிமையால் யாராவது ஒருவர் ஒருவாறு குணமாகியிருந்தாலும், அதை இவர்கள் பெரிய பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தி மதகுருமார்களின் வலைகளில் மேலும் மக்களை விழ வைக்கிறார்கள், என்கிறார் பிரான்சிஸ்.

இந்த மாதிரி கூட்டங்களில், இதை நடத்தும் பாதிரியார் வியாதிப் பேயை (ghost of sickeness) வெளியேற ஆணையிடுகிறார். இவர் மதகுருமாரா இல்லை மந்திரவாதியா என்று சந்தேகம் வருகிறது என்கிறார் பிரான்சிஸ்.

இந்த தேசிய மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.

RESOLUTIONS PASSED UNANIMOUSLY AT THE 4TH NATIONAL ASSEMBLY OF DALIT CHRISTIANS ORGANISED BY POOR CHRISTIAN LIBERATION MOVEMENT ON 6 AUGUST 2003 IN THE SPEAKERS HALL, CONSTITUTION CLUB, V.P. HOUSE, RAFI MARG, NEW DELHI:

2. மதமாற்ற பிரசாரம் சமுதாய மேன்பாட்டுக்கு வழிசெய்யவில்லை. அதனால், இதை 100 வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம் மதம் மாறிய தலித் கிருத்துவர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.

3. சர்ச் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், மேல் படிப்பு நிலையங்களில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.

4. எல்லா சர்ச்சு நிறுவனங்களும் தங்கள் அமைப்பில் தலித் கிருத்துவர்களின் பங்கேற்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவர்கள் நடத்தும் ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கத்துக்கு எல்லோரும் ஆதரவு தருவோம்.

பொய் பிரசாரத்தில் ஏமாந்து வாழ்க்கையில் ஏமாற்றத்தை ஏந்தியுள்ள இவர்கள் நம் ஆதரவுக்கு உரியவர்கள்.

போன செப்டம்பரில் இவர்கள் டெல்லியில் ஜன்தர் மந்தரில் சர்ச் நிறுவனங்களில் நிலவும் ஊழலை கண்டித்து மிகப்பெரிய தர்ணா நடத்தினார்கள். அப்போது அவர்கள் கிருத்துவ NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள். சர்ச் நிறுவனங்கள் ‘ஊழல், சாதி வெறி, வேண்டுபவர்களுக்கு ஆதரவு ‘ நிறைந்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

1991 சென்சஸ்படி இந்தியாவில் 196.5 லட்சம் கிருத்துவர்கள் இருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் 107 லட்சம். வடகிழக்கு மாநிலங்களில் 36 லட்சம். மீதி பரவலாக.) தமிழ்நாட்டில் இருக்கும் 32 லட்சம் கிருத்துவர்களில் 65% தலித்துக்கள். மதம் மாறுவதால் சமுதாய மேன்மை கிடைக்கும் என்றால், இவ்வளவு அதிக விழுக்காடு தலித், ஆதிவாசிகளை கொண்டிருக்கும் கிருத்துவ மதம் தலித்துக்களுக்காக என்ன செய்கிறது என்று கேட்கிறார் பிரான்சிஸ்.

மதம் மாறிய பிறகு சாதி அடிப்படையில் இவர்களை நடத்துவது நிறுத்தப்பட வேண்டாமா? ஆனால், அப்படி நடக்கவில்லை.

1991 வரை இந்தியாவின் 134 கத்தோலிக்க பிஷப்புக்களில் ஒரு தலித் கூட இல்லை. (முதலாவதாக 1991ல் Bishop Ezra Sargunam உருவானார்.) கோவா, கேரளா தவிர கிருத்துவர்களில் தலித்துக்களே பெரும்பான்மை. ஆனால், அவர்களில் தலித்துக்களை காணுவதே கஷ்டமாக இருக்கிறது. பிஷப், விகார், பாதிரியார்கள், இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், கிருத்துவ மருத்துவமனைகளில் சர்ஜன்கள், மருத்துவ கல்லூரிகளில் சர்ஜன்கள் யாருமே தலித்துக்கள் மிக மிக குறைவு.

தமிழகத்தின் 13 பிஷப் கவுன்சில்களில் தலித்துக்கள் யாருமே இல்லை. தலித்துக்களை பலப்பல உயர் பதவிகளில் இன்று உட்கார்த்தி வைத்து பார்க்கும் இந்து மதத்திலிருந்து (ஏன் ஜனாதிபதி பதவி வரை அவர்களுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது) சமத்துவம், சமுதாய நீதி என்றெல்லாம் மனமாற்றம் செய்து அவர்களை ஆட்கொண்ட மதத்தில் அவர்கள் ஏமாற்றமும் சமுதாய அநீதியும் எதிர்கொள்கிறார்கள் என்பது கொடுமை.

வெறுக்க வைக்கும் தீண்டாமை முதலிய நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை தவறாமல் இந்து மத்த்தில் வைக்கும் இந்த புரட்டுவாதிகள், அந்த நம்பிக்கைகளை தகர்க்கும் இந்து மதவாதிகளை, தங்கள் பிரச்சாரத்துக்கு பலமில்லாமல் போய் விடும் என்று, சதி செய்து எதிர்க்கிறார்கள்.

ஆனால், இந்து மதத்தில் ஒவ்வாத இந்த தீண்டாமை எவ்வாறு பரவியது என்று ஒரு செக்குலர்வாதிகளும் நடுநிலையில் பார்ப்பது இல்லை. மேல்நாட்டு ‘அடிமை வியாபாரம்’ போன்று (அதெற்கும் இஸ்லாமிய, கிருத்துவ அமைப்புகள் பல நூறு வருடங்களாக ஆதரவு தந்ததை வசதியாக மறந்துவிடுகிறார்கள்) இந்த தீண்டாமை ஒரு சரித்திர-சமுதாய அரசியலமைப்பு சூழலை சார்ந்து எழுந்தது என்று தெரிந்தாலும் அதை புரட்டு பேசி மறைக்கிறார்கள்.

தீண்டாமை மட்டுமே தலித் கிருத்துவர்களின் சாபக்கேடு அல்ல. இன்றுவரை, மேல்சாதி கிருத்துவர்களுக்கும், தலித் கிருத்துவர்களுக்கும் கலப்பு மணம் மிகமிக அரிது. அப்படிப்பட்ட கலப்பு மணங்கள், இந்து சமுதாயத்தில் சாதாரணமாகி வருகின்றன என்பதால் இப்போதெல்லாம் இது ஒரு செய்தி கூட இல்லை. மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்.

பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.

இவ்வாறு, கிருத்துவ அமைப்புகளில், தீண்டாமை சுவர்க்கத்திலும், நரகத்திலும் கூட நிரந்தரமாக்கப்படுகிறது. (செத்தபிறகு, சுவர்க்கமோ, நரகமோ நிரந்தரம் என்பது கிருத்துவ நம்பிக்கை).

விவரங்கள் இங்கே.

http://www.saxakali.com/southasia/PCLM.htm

25 Comments:

At 5:17 am, Blogger ரவி said...

நீங்கள் கூறியுள்ள பல செய்திகளில் உண்மை இல்லையே என்ன செய்ய...இது போன்ற அவதூறு பிரச்சாரம் செய்ய உங்களை தூண்டுவது எது ??

ஏன் இந்த உணர்வு எழுகிறது உங்களுக்கு ?

எதோ ஒரு இடத்தில் நடப்பதை / அல்லது நடவாததை உண்மை போல் திரித்து எழுதி இருக்கிறீரே ??

உங்களுக்கு தலித் கிறிஸ்தவர்மேல் இவ்வளவு கரிசனம் எழுந்தது ஏன் ? அவர்களை மாராப்பு அணிய தடைவிதித்தது யார் ? கிறிஸ்தவ மிஷினரிகளா ??

மேலும் கிறிஸ்தவரின் இறை நம்பிக்கையையும் புண்படுத்தி எழுதி உள்ளீரே ?

யாரோ ஒருவர் (மனம்பிழன்றவர்) சொல்வதை வைத்துக்கொண்டு எல்லாரையும் இகழ்ந்து விஷம் போல கக்கும் தீய சிந்தனையை எங்கிருந்து பெறுகிறீர்..

ஆண்டவன் உங்களை மன்னிப்பாராக..

 
At 5:33 am, Blogger ஜயராமன் said...

ரவிசார்,

பதிவுக்கு நன்றி.

நான் ஒரு பதிவு போட்டதும் அவதூறு பிரசாரம் என்கிறீர்கள்?

நான் எழுதியதில் எது அவதூறு? நான் ஒரு பதிவு போட்டது பிரசாரம் என்றால், என் மத நம்பிக்கைகளை கேலி செய்து தினசரி ஆயிரக்கணக்கில் துண்டு சீட்டு போடும் கிருத்துவ மதம் அவதூறு பிரச்சாரம் இல்லையா?

என்னுடையது சரியான பதிவு.

நான் அதில் சொன்ன விவரங்கள் சரியில்லை என்கிறீர்கள். நான் இந்த விவரங்களை சேகரித்த விவரங்களை இங்கேயே சுட்டியிருக்கிறேன். தாங்கள் ஏதாவது குறிப்பிட்டு சொல்ல முயன்றால் நான் அதற்கு விளக்கம் கொடுக்க கடைமைப்பட்டவன்.

இல்லை என்றால், தங்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றாகும்.

உண்மையான கிருத்துவர்களுக்கு இந்த பதிவில் வருத்தம் வருவது முற்றிலும் நியாயமே. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபம். ஆனால், தாங்கள் வருத்தப்பட வேண்டியது நான் குற்றம் சாட்டியுள்ள கிருத்துவ அமைப்புகளிடம்தான்.

எனக்கு ஏன் இந்த கரிசனம் என்று முதலில் கேள்வி வரும் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால் இதுதான் ஈஸியான கேள்வி. ஆனால், மிகவும் சம்பந்தமில்லாத கேள்வி. நான் சொன்ன விவரங்களுக்கு தாங்கள் பதில் அளிக்கவும். நீ யாருடா கேட்பதற்கு என்று கேட்டால் என் குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை என்று நிரூபணம் ஆகிறது.

தலித் மக்கள் என் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மனமாற நம்புகிறேன். கிருத்துவர்களின் அடிமை வியாபாரம் போன்று தீண்டாமையும் ஒரு வரலாற்று தவறு. அடிமை வியாபாரத்தை ஆதரித்த கிருத்துவ மதம் அதற்காக இப்பொழுது ஆப்பிரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்டதா? இல்லை, ஆப்பிரிக்கர்களை அறுவடை செய்ய தயங்குகிறதா? இல்லையே? இதை ஒரு ஒப்பிடுதற்காக சொன்னேன். ஆனான், என் இந்து மதத்தை ஒரு வாழும் (அதாவது சமுதாய களைகளை எப்போதும் களைந்து கொள்ளும்) மதமாகத்தான் இருக்கிறது.

அதனால், இந்த தலித் மக்கள் நம் மண்ணின் சகோதர்ர்கள். அவர்கள் மதம் மாறியது அவர்கள் தனிப்பட்ட சாய்ஸ். அதற்காக, அவர்கள் கஷ்டத்தில் எனக்கு ஏன் அக்கறை இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு, இலங்கை தமிழர்கள் எத்தனையோ தலைமுறை தமிழகத்தை விட்டு பிரிந்திருந்தாலும், தமிழன் என்பதால் (அவன் இந்துவோ, முஸ்லிமோ...) ஒன்று பட்டு நாம் உணரவில்லையா? அதுபோல், இவர்கள் இந்தியர்கள். கிருத்துவ மத போதகர்களின் புரட்டுகளில் ஏமாந்தவர்கள். அவர்களுக்கு நாங்கள் உதவாமல், ஏமாற்றுகிறவர்களா உதவப்போகிறார்கள்.

கிருத்துவர்களின் இறை நம்பிக்கையை எங்கே புண்படுத்தினேன். நிச்சயமாக இல்லை.

நன்றி

 
At 6:40 am, Blogger ரவி said...

///உண்மையான கிருத்துவர்களுக்கு இந்த பதிவில் வருத்தம் வருவது முற்றிலும் நியாயமே. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபம். ////

அப்படியா..சரி சரி...

கிருத்துவர்களின் இறை நம்பிக்கையை எங்கே புண்படுத்தினேன். நிச்சயமாக இல்லை.

அப்படியா..சரியில்லை சரியில்லை...

 
At 6:42 am, Blogger ரவி said...

///உண்மையான கிருத்துவர்களுக்கு இந்த பதிவில் வருத்தம் வருவது முற்றிலும் நியாயமே. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபம். ///

அப்படியா..சரி சரி...

///கிருத்துவர்களின் இறை நம்பிக்கையை எங்கே புண்படுத்தினேன். நிச்சயமாக இல்லை....////

அப்படியா..சரியில்லை சரியில்லை...

நீங்கள் இன்று கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பார்கள்...

கணினியை விடுத்து சன்னல் வழியாக பச்சை பசுமையை கொஞ்ச நேரம் பார்க்கவும்...

நாளை என் கருத்தை பதிவு செய்கிறேன்..

நன்றி..

 
At 7:13 am, Blogger கோவி.கண்ணன் said...

ஜெயராமன் சார்,
செந்தழல் ரவியின் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டருந்தது உங்களுக்கு வருத்தாமாக இருப்பதாக அறிகிறேன். அதற்காக வருந்துகிறேன்.

 
At 8:01 am, Blogger VSK said...

நியாய உணர்வுடந்தான் எழுதியிருக்கிறீர்கள் என்றாலும், சற்று தரம் தாழ்ந்த பதிவு என்பதே என் கருத்து.

பதிவில் குறிப்பிட்ட நிகழ்வுகளும், சுட்டியும் தவறில்லை எனினும், மத நல்லிணக்க அடிப்படையில், நீங்கள் இதனை எழுதியிருக்க வேண்டாமோ எனத்தான் தோன்றுகிறது.

நம்மிடம் இருக்கும் கணக்கற்ற பெருமைகளை எழுதி நம்மை உயர்த்திக் காட்டினாலே போதாதா, மற்றவரைச் சிந்திக்க வைப்பதற்கு.?

அடுத்தவரின் குணக்கேட்டை[உங்கள் பார்வையிலிருந்து] விமரிசனம் செய்வது இணக்கத்தை விடுத்துக் கேட்டையே அதிகம் விளைக்கும் என நம்புபவன் நான்.

அந்த முறையிலேயே என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.

தவறாக எண்ணவேண்டாம்.

தவறெனில், மன்னிக்கவும்.

 
At 8:08 am, Anonymous Anonymous said...

Read the book by A.Sivasubramanian to know more about caste and christianity in Tamil Nadu.Ask any knowledgable christian in the southern districts and (s)he will tell you the caste politics in the church , particularly the internal fights between dalit christians
and nadar christians to control
church sponsored institutions.
Dalit christians and nadar christians are agressive in
the south as they are the predominant christian communities
there. In some areas in northern
tamil nadu reddiar christians
try to dominate over dalit
christians.

 
At 10:07 am, Blogger SHIVAS said...

தலித்கிரிஸ்துவர்களும் உயர்ஜாதி கிரிஸ்த்துவர்களும் ஒன்றாக வழிபாடு செய்யவேண்டும் என்று புதுவையில் இருந்த பிரெஞ்சு சட்டத்தை மீறும் வகையில் மேல் ஜாதி கிரிஸ்துவர்கள் தங்களுக்கென்று தனி தேவாலையம் ஒன்று அமைத்து அதற்கு "பெத்தி செமினார்" என்று பெயரிட்டு தங்களின் வழிபாட்டுக்களை நடத்தி வந்தனர். அந்த பெத்தி செமினார் தேவாலயத்துடன் உள்ள பள்ளிக்கூடத்தில் தான் அடியேன் படித்தேன் என்பதால் இந்த அவலங்கள் தெறிய வந்தன.
ஆக தலித் கிருஸ்த்துவத்தை தழுவினாலும் அங்கும் அவன் தலித்துதான். அதற்கு பதில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே கலப்படமில்லாதவர்கள் என்ற பெருமையோடு எந்த மத அடையாளத்தையும் போத்திக்கொல்லாமல் சங்கராச்சாரி வந்தாலும் சரி போப் ஆண்டவர் வந்தாலும் சரி செருப்பால் அடிப்போம் என்று சொல்லிவிட்டு பெருமையுடன் வாழலாம்.

 
At 10:46 am, Blogger ஜயராமன் said...

சதயம் அவர்களுக்கு,

தங்கள் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி.

என் பதிவுக்கு பதிலுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்னொரு 'நீ யாருடா கேட்க. உனெக்கென்ன யோக்கியதை' பாணி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். சலிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், இதற்கான பதிலை ஏற்கனவே ரவி அவர்களுக்காக இங்கு பதிந்திருக்கிறேன்.

என்னை ஓநாய் என்கிறீர்கள். சரி, இருந்துவிட்டு போகட்டும். அந்த ஆடு இன்னொரு ஓநாயிடன் போய் விட்டதே என்று வருத்தத்தில் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்களேன். :-) இல்லை என்றால், இரண்டு ஓநாய்களுக்கும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். :-)

இம்மாதிரி விவாதங்களால் உங்களுக்கு இதில் பதில் இல்லை என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?

இதையே திருப்பி நான் உங்களிடம் கேட்கலாமே. அதாவது, எங்கள் மதங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். அதில் தலித் மீது கரிசனம் என்ன கிருத்துவர்களுக்கு. அவர்களை அறுவடை செய்ய பார்க்கும் அவர்கள் அல்லவா 'ஆடு நனைய அழும் ' ஓநாய்கள்.

தலித் கிருத்துவர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கிருத்துவ மத்த்தின் இரட்டை வேடம் தானே.

எனக்கு இதைபற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறீர்கள். சரி, நேரிடையாகவே பதில் சொல்கிறேன்.

என் சமுதாயத்திலிருந்து தலித்துகளை பிறித்து சூட்சி செய்யும் கிருத்துவர்களை பற்றி 'அவர்களால் உங்களுக்கு நியாயம் கிடைக்காது' என்று சொல்ல எனக்கு ஏன் உரிமை இல்லை. நானும் இதில் அங்கம் தானே.

நான் தலித் என் சமுதாயம் என்றால் சிரிப்பு வருகிறதாம். எனக்கு, இந்த பிரான்சிஸின் பேச்சை பார்த்தால், தாங்கள் கிருத்துவ மத்த்தில் தலித் வாழ்க்கையில் பாலும், தேனும் ஒடும் என்று சொல்வதுதான் சிரிப்பு வருகிறது.

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவது நான் இல்லை. எங்கள் வீட்டின் குறைகளை நாங்கள் அறிந்து அதை களைந்துள்ளோம். ஆனால், அதுமாதிரி ஒரு குறையே இல்லை என்று அதை மூடப்பார்க்கும் கிருத்துவ மதம் அல்லவா கண்ணாடி வீட்டிலிருந்து இந்து மத்த்தில கல் எறிகிறார்கள்.

அய்யா, தலித் கிருத்துவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இன்றும் தெருக்களில் போராட வேண்டிய அவலம் கிருத்துவ மத்தில் எப்படி அய்யா இடம் பெற்றது. அதற்கு பழங்கால தீண்டாமை கொடுமைகள் எவ்வாறு சரியாகும். பழங்காலத்தில் கிருத்துவ மத்த்தில் நடந்த கொடுமைகளையும், அடிமை வியாபாரங்களையும் பட்டியலிட்ட்டுமா? இவ்வாறு ஒவ்வாத பேச்சுக்களால் தங்கள் பக்கத்தில் நியாயம் இல்லாத்து தெரிகிறது.

கோயில்களில் தலித் வர முடியாதாம். தாங்கள் மெட்றாஸ் தாண்டியதில்லை போலிருக்கிறது. ஏன் இன்றைக்கும் எல்லா வட மாநில கோயில்களிலும் ஆண் பெண் எல்லா இனத்தவரும் தொட்டு தாங்களாகவே பூசை செய்கிறார்களே, பார்த்ததில்லையா. நீங்கள் தலித்தா, கிருத்துவனா என்று யாரும் பார்ப்பதில்லை. தென்னக கோயில்களில் நுழைய கட்டுப்பாடு சாதி அடிப்படையில் இல்லை. அங்கு பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. விலையுள்ள நகைகள் இருப்பதால். இது பற்றி ஏற்கனவே பல முறை பதிலளித்தும் அதே மாதிரி எழுதுவதும் பேசுவதும் நான் எழுதிய பதிவை நியாயப்படுத்துகிறது.

நான் எழுதினேன். இந்து சமுதாய குறைகளை களைய முற்படும் இந்து மத்த்தவரை இவர்கள், தங்கள் பிரச்சாரம் பலமிழக்கும் என்று பயந்து சதி செய்து அழிக்கிறீர்கள் என்று எழுதினேன்.

அதை இப்பொழுது கண்கூடாக கண்டேன். நான் தலித் என் சமுதாயம் என்றால் அதை தாங்கள் இழிவுபடுத்தி பேசி இந்து சமுதாயத்தில் சமத்துவம் இல்லை அது பேசுபவர்கள் ஏமாற்றாளர்கள், என்ற ஒரு தோற்றத்தை தீவிரமாக்க முயற்சிப்பது தெரிகிறது. ஏன் நான் தலித் என் சமுதாயம் என்று சொல்லக்கூடாதா. கிருத்துவர்கள் தலித் மீது பாசம் கொட்டுவது அவர்களை அறுவடைக்குதான் என்று தலித் கிருத்துவர்களே இன்று குமுறும் போது தாங்கள் எங்கள் ஒற்றுமையை இழிவாக பேசுவது என்ன ஒரு வேடிக்கை.

நன்றி

 
At 9:51 pm, Blogger ஜயராமன் said...

SK அவர்களே,

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

என் பதிவு பல பேரை என் மீது (காரணமின்றி) கோப்ப்பட வைக்கிறது. ஆனாலும், இந்த விஷயங்களை விவாதிக்காமல் எப்படி இருக்க முடியும். சமுதாயத்தின் நிகழ்வுகளை விவாதிக்க ஒரு ஆரோக்கியமான சூழலை நம் பிளாக் குழும்ம் இன்னும் உருவாக்கிக்கொள்ளவில்லை.

பிரச்சினைகளை அதன் கருத்துக்களை ஒட்டி அணுகாமல், தனிப்பட்ட வெறுப்பை உமிழ்ந்து செல்லும் சில ஈன பிறவிகள் போன்று இங்கு பல இடையூறுகள் இருக்கின்றன.

மத நல்லிணக்கிற்கும் ஆரோக்கியமான விவாதத்திற்கும் ஒவ்வாது என்று நான் நினைக்கவில்லை. இந்த பிளாக் குழுமத்திலேயே எனக்கு கிருத்துவ நண்பர்கள் சிலர் உண்டு. அவர்கள் நட்பும் உயர்ந்த பண்பும் என்றால் போற்றி பாதுகாக்கப்படுகின்றன

நன்றி

 
At 10:17 pm, Blogger அருண்மொழி said...

ஜெயராமன்,

நீங்கள் எழுதிய வாக்கியங்கள்.

//தலித் மக்கள் என் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மனமாற நம்புகிறேன்.
என் இந்து மதத்தை ஒரு வாழும் (அதாவது சமுதாய களைகளை எப்போதும் களைந்து கொள்ளும்) மதமாகத்தான் இருக்கிறது.
எங்கள் வீட்டின் குறைகளை நாங்கள் அறிந்து அதை களைந்துள்ளோம்.//

இது உண்மையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று கூறுவார்கள். ஆனால் இது என்ன வகை என்று தெரியவில்லை.

தமிழகத்தில் தலித்துகள் சம்பந்தப்பட்ட 2 விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஒன்று பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல்கள். இன்னொன்று கண்டதேவி கோவில் தேர் இழுப்பு. இவை இரண்டும் இந்துக்களிடையே உள்ள பிரச்சனைகள். Muhammadansஓ அல்லது Christian Missionariesஓ இதற்கு காரணமில்லை. இதை ஏன் இந்து மதத்தலைவர்களோ அல்லது உங்களை போன்றவர்களோ தீர்க்கமுயற்சி செய்யவில்லை.

 
At 10:34 pm, Blogger மங்கை said...

நாங்கள் ஒனாய்கள் தான் மாறமாட்டோம் என்று வெளிப்படையாக் ஒதுக்கொண்டுள்ளீர், ஆடு உங்கள் கைக்கு சிக்க வில்லை என்ற வயித்தெரிச்சல்..

உங்கள் கரிசனம் நிஜமானதாக இருந்தால் இந்துக்களாக இருக்கும் தலித்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்து அறநிலையங்கள் , தொண்டுநிறுவனங்களுக்கு நல்லதொறு திட்டதை பரிந்துரைக்க உங்கள் நேரத்தை
செலவிடுங்கள்.

//டெல்லியில் ஜன்தர் மந்தரில் NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள்.//

சென்னையில் "பெரியவா" மடத்தை சேர்ந்த NGO வின் முறைகேடுகள் உங்களுக்கு தெரியுமா...

இன்றும் , சில கிராமங்களில் தலித் வகுப்பை சேர்ந்த தபால்காரர், மேல்மட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் வசிக்கும் வீதியில் மிதிவண்டியில் செல்ல அனுமதி இல்லை. அது நம்ம ஊர் புதுக்கோட்டை , கும்பகோணம் ஆக இருந்தாலும் சரி , கர்னாடகாவின் குல்ப்ர்காவாக இருந்தாலும் சரி, ராஜஸ்தானின் பரத்பூர் ஆக இருந்தாலும் சரி, தபால் கொடுக்க ஊருக்கு வெளியே இருந்து நடந்து தான் செல்ல வேண்டும்..

யமனின் இருப்பிடமாக கருதும் ஊரின் தெற்குப்பக்கமே எப்பொழுதும் இவர்களுக்கு இடம் ஒதுக்கும் நமக்கு, "dalit oppression" பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது..
தெற்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று சொல்வதும் யமன் அங்கு wait பண்ணிக்கொண்டு இருப்பதினால் தானாம்...அப்படி எதாவது அவருக்கு "பசி" வந்தால் தலித் மக்கள் முதலில் தீனி ஆகட்டும் என்ற "நல்லென்னம்"...ஹ்ம்ம்ம்ம்

முதலில் நமது முதுகின் அழுக்கை அகற்றுவோம் பிறகு மற்றவனின் அழுக்கை சுட்டிக்காட்டுவோம்

 
At 10:39 pm, Blogger ஜயராமன் said...

அருண்மொழி அவர்களே,

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

பாப்பாபட்டி முதலிய அராஜகங்கள் நடப்பது மிகவும் இழுக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. தலித் மக்களின் மீது அராஜகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அவைகளை நான் நடைமுறை விகார குற்றங்களாகத்தான் பார்க்கிறேன். நான் 'இந்து மத்த்தில் குறைகள் களையப்பட்டுள்ளன' என்று சொன்னது அடிப்படை structural லெவலில்.

இந்து மத்த்தில் உள்ள சமுதாய குற்றங்கள் இன்று சமுதாய அமைப்பு ரீதியில் இல்லை. தலித்துக்கள் மற்றும் எல்லா சாதி மக்களையும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பார்க்க ்முடிகிறது.

இந்தியாவின் 55 வருட சுதந்திர கட்டமைப்பில் இங்கு பாராளுமன்றம் வரை எத்தனையோ தலித் சகோதர்ர்கள் நிலைபெற்று தங்கள் உரிமையான இடத்தை பெற்றுள்ளார்கள். இதை அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாட்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். அங்கெல்லாம், இந்தியாவை விட பல வருடங்களாக நிறக்கார்ர்களுக்காக சட்டமியற்றியும் பாராளுமன்றங்கள் பெரும்பாலும் வெள்ளையர்களின் ஆளுமையிலேயே இருக்கின்றன.

இந்த விஷயங்களில் இந்து மதம் பெருமைக்கூடிய வகையில் மாறி முன்னேறியிருக்கிறது. தீண்டாமை, சதி முதலிய கொடுமைகளும் இன்று சமுதாய கட்டமைப்பில் களையப்பட்டுள்ளன.

இதை எவ்வாறு பாப்பாரப்பட்டியுடன் பொருத்தி பேசுகிறீர்கள் என்று கேட்பீர்கள். இம்மாதிரி இழுக்கான நிகழ்வுகள் இன்னும் மூடிய மனத்துடன், குறுகிய சுயநலத்துடன் இருக்கும் தனிப்பட்ட இடமுள்ள சில குறு மனிதர்களால் தொடரப்படுகின்றன. இவற்றுக்கு சில அரசியல்வாதிகளும் உடந்தை என்பது வெட்க்க்கேடு. ஆனால், இம்மாதிரி தனிப்பட்ட நிகழ்வுகள் பொது உண்மையை மாற்றாது.

இம்மாதிரி தவறுகள் எல்லா விஷயத்திலும் எங்கும் நடக்கின்றன. மதச்சண்டைகள் இந்தியாவில் ஆங்காங்கே நடப்பதால் இந்தியாவில் மத உரிமை இல்லை என்று சொல்ல முடியுமா? அதைப்போலத்தான். அமெரிக்கா போன்ற சமத்துவ நாடுகளில் கூட kkk போன்ற வெறிக்கூட்டங்கள் இன்றும் இனக்கலவரத்தை தூண்டுகின்றன. இஸ்லாம் இரண்டு பட்டு கலவரங்கள் இன்றும் நடப்பதால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்றாகி சொல்லுவீர்களா. கிருத்தவர்களிடம் இன்றும் சாதி கலவரங்கள், கத்தோலிக்க, பிரோடச்செண்ட் கலவரங்கள் நடப்பதால் அவை அடிப்படை structural தவறுகள் என்று சொல்ல முடியுமா. அது போலத்தான்.

தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி.

தங்களுக்கு என் விளக்கம் சரியாக பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

 
At 10:46 pm, Blogger ஜயராமன் said...

மங்கை அவர்களுக்கு,

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

தாங்கள் என்மீது பயங்கர கோபமாக எழுதியிருக்கிறீர்கள்.

வழக்கமாக எல்லோரும் எழுதும் 'உனக்கென்ன யோக்கியதை' வித்த்தில் தான் தங்கள் பதிலும்.

நான் ஓநாய் என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்று விளையாட்டாக ஆரம்பித்து பின் விளக்கம் எழுதியுள்ளேன். அது தங்களுக்கும் தெரியும். இருந்தபோதிலும், நான் ஓநாய் என்றும் எனக்கு வயிற்றெரிச்சல் என்றும் எழுதுவது தங்களின் குமுறலை காட்டுகிறது.

தாங்களின் வயிற்றெரிச்சல் என் மீது வர நியாயமில்லை. அது தங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று சொல்லும் தலித் கிருத்துவரகளை அடக்குபவர்களை பற்றி வர வேண்டும்.

நான் எழுதிய விவரமான பதிலை தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே விடையாக இருக்கும். அதை படித்துப்பாருங்கள்.

என் முதுகில் அழுக்கு, அதனால் பிறத்தியாரை குற்றம் சொல்லாதே என்று எழுதுகிறீர்களே! அதைத்தான் நானும் திருப்பிக்கேட்கிறேன்.

உங்கள் சமுதாய தலித்துக்களை தெருவில் போராட வைத்துவிட்டு எங்கள் தலித்துகள் மீது கரிசனமாக துண்டு பிரச்சாரம் கொடுக்கிறீர்களே. நீங்கள் அல்லவா இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தாங்கள் எழுதிய கேள்விகளை தாங்களே கேட்டுக்கொள்ளுங்களேன்.

இந்து சமுதாயமாவது தீண்டாமை முதலிய தீமைகளை சமுதாய அமைப்பிலிருந்து களைந்துவிட்டு பலப்பல ஆதரவு செயல்களை எடுத்துவருகிறது.

ஆனால், அதை காரணம் காட்டி தலித்துக்களை மாற்றிவிட்டு பின் அவர்களுக்கு அதே கொடுமையை தாங்கள் செய்துவருகிறீர்களே, இதுதானே அதைவிட பெரிய துரோகம்.

தங்கள் கேள்விக்கு விடை இதில்தான் இருக்கிறது.

நன்றி

 
At 10:59 pm, Blogger ஜயராமன் said...

மங்கை அவர்களே,

////நாங்கள் ஒனாய்கள் தான் மாறமாட்டோம் என்று வெளிப்படையாக் ஒதுக்கொண்டுள்ளீர், ஆடு உங்கள் கைக்கு சிக்க வில்லை என்ற வயித்தெரிச்சல்..////

நாங்கள் ஓநாய்கள்தாம் மாறமாட்டோம் என்று நான் எங்கும் சொல்லவில்லையே!

///சென்னையில் "பெரியவா" மடத்தை சேர்ந்த NGO வின் முறைகேடுகள் உங்களுக்கு தெரியுமா...///

தெரியாதே. சொன்னால் தெரிந்து கொள்கிறேன். காட்டுங்கள். இதற்காக யாராவது ரோட்டுக்கு வந்து தர்ணா செய்தார்களா என்றும் சொல்லுங்கள். தெரிந்துகொள்கிறேன்.

///இன்றும் , சில கிராமங்களில் தலித் வகுப்பை சேர்ந்த தபால்காரர், மேல்மட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் வசிக்கும் வீதியில் மிதிவண்டியில் செல்ல அனுமதி இல்லை. அது நம்ம ஊர் புதுக்கோட்டை , கும்பகோணம் ஆக இருந்தாலும் சரி ///

மங்கை அவர்களே.

புதுக்கோட்டை, கும்பகோணத்தில் எங்கு இவ்வாறு நடக்கிறது என்று சொல்லுங்களேன். நான் இன்றைய சூழலில் இவ்வாறு அறவே நடக்கவில்லை என்று சொல்கிறேன். தங்களின் ஆதாரம் அல்லது source என்ன?

என் ஆதாரங்களை நான் தந்திருக்கிறேன். தாங்கள் பல sweeping செய்திகளை தருகிறீர்களே. அதற்கு ஆதாரம் தரமுடியுமா. இல்லை என்றால் இம்மாதிரி பின்னூட்டம் இடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

///யமனின் இருப்பிடமாக கருதும் ஊரின் தெற்குப்பக்கமே எப்பொழுதும் இவர்களுக்கு இடம் ஒதுக்கும் நமக்கு, "dalit oppression" பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.. //

எந்த ஊரில் மங்கை அவர்களே. நான் வாழ்ந்த பார்த்த எல்லா ஊரிலும் எல்லா பக்கத்திலும் எல்லா சமுதாயத்தினரும் இருக்கிறார்களே.

///தெற்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று சொல்வதும் யமன்....///

தெற்கில் தலை வைத்து படுத்துக்கொள்ளலாமே. வடக்கில்தான் தலை வைத்து படுத்துக்கொள்ள கூடாது.

ஏதாவது மனத்துக்கு தோன்றியதை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுதிவிட வேண்டியதா?

////முதலில் நமது முதுகின் அழுக்கை அகற்றுவோம் பிறகு மற்றவனின் அழுக்கை சுட்டிக்காட்டுவோம்////

இதைத்தான் நானும் வேண்டுகிறேன். கிருத்துவர்கள் முதலில் ரோட்டில் போராடும் தன் தலித் மக்களை சரி செய்து பிறகு இந்துக்களை இழிவு படுத்தும் துண்டு பிரச்சாரத்துக்கு வரட்டும்.

நன்றி

 
At 11:52 pm, Anonymous Anonymous said...

1929 - Christian Depressed classes of South India submitted a Memorandum to the Simon Commission.
Still even in 2006 their problems continue.What a shame.

 
At 12:28 am, Blogger அருண்மொழி said...

ஜெயராமன்,

நீண்ட விளக்கத்திற்கு நன்றி. ஆனால் எனக்கு தங்களின் வாதம் சரியாக படவில்லை.

//இந்தியாவின் 55 வருட சுதந்திர கட்டமைப்பில் இங்கு பாராளுமன்றம் வரை எத்தனையோ தலித் சகோதர்ர்கள் நிலைபெற்று தங்கள் உரிமையான இடத்தை பெற்றுள்ளார்கள்.//

பாராளமன்றங்களை பற்றி சொன்னீர்கள். அதற்கு காரணம் "தனி" தொகுதிகள் என்ற அரசியல் அமைப்புதான். அந்த "தனி" தொகுதிகளை நீக்கிப்பாருங்கள், பிறகு எத்தனை தலித்துகள் உள்ளே இருக்கிறார்கள் என்று. இதில் மதம் எதையும் செய்யவில்லை. அமைச்சராக இருந்த தலித் திறந்த சிலையை புனித நீரால் கழுவிய அவலமும் நம் நாட்டில் நடந்திருக்கிறது.

//தலித்துக்கள் மற்றும் எல்லா சாதி மக்களையும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பார்க்க முடிகிறது//

தலித்துகள் படித்து பெரிய நிலைக்கு போயிருப்பதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் கருதுகிறேன். பெரிய நகர்களில் அவர் யார் என்பது தெரியாது. ஆனால் அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால் அங்கு கிடைக்கும் மரியாதை என்ன?

//தீண்டாமை, சதி முதலிய கொடுமைகளும் இன்று சமுதாய கட்டமைப்பில் களையப்பட்டுள்ளன.//

சதி ஏறத்தாழ ஒழிக்கப்பட்டு விட்டது எனலாம். ஆனால் தீண்டாமை?? நிச்சயமாக களையப்படவில்லை. அதற்கு நான் கூறிய 2 உதாரணங்களே சாட்சி.

என் உறவினர் ஒருவர், தலித்துகள் கூட அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்பதற்காக அவர் கிராமத்தில் இருக்கும் உணவு விடுதிகளுக்கு செல்வதில்லை. இது நடந்தது 90களில்.

//இவற்றுக்கு சில அரசியல்வாதிகளும் உடந்தை என்பது வெட்க்க்கேடு. ஆனால், இம்மாதிரி தனிப்பட்ட நிகழ்வுகள் பொது உண்மையை மாற்றாது. //

அரசியல்வாதிகளிடம் இருந்து அரசியலைதான் எதிர்பார்க்கலாம். ஆனால் மதத்தலைவர்கள் என்ன செய்தனர். குறைந்தபட்சம் அங்கு சென்று அனைவரும் சமமே என்று எடுத்துக்கூறலாமே? சாதி இந்துக்கள், சாமியார்களின்/குருஜீக்களின் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள் என்பது என் என்னம்.

இதுவாவது அரசியல். ஆனால் கன்டதேவி பிரச்சனை கோயில் சம்பந்தப்பட்டது. ஒரு இந்து தான் வணங்கும் தெய்வத்தினுடைய தேரை இழுப்பதிற்கு ஆசைப்பட கூடாதா? ஏன் இந்து மதத்தலைவர்கள் இதை சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை?

இந்த பதிவிற்கு சம்பந்தமில்லா ஒரு சுவையான செய்தி - நண்பர் ஒருவர் மூலம் அறிந்தது (உடனே link, email, fax, scan போன்ற ஆதாரங்களை கேட்க வேண்டாம்.)

சிறையில் தூக்குதண்டனை கைதியாக இந்து ஒருவர் இருந்தார். உறவினர் சென்று பார்ப்பதில்லை. யாரிடமாவது தன் மனக்குமுறளை கொட்டித்தீர்க்க வேண்டும் என்றார். சிலர் இராமகிஷ்னா மடத்திற்கு சென்று ஏதாவது செய்ய இயலுமா என்றனர். வந்த பதில், விதி, பூர்வ ஜென்ம பலன் ...... சில வாரங்கள் கழித்து சென்று பார்த்தால் கைதி கிருத்துவராக இருக்கிறார். அம்மதத்தை சார்ந்த சிலர் இவரிடம் சென்று பேசி அவரின் மனப்பாரத்தை குறைக்க, அவர் மதமாறிவிட்டார்.

 
At 1:04 am, Anonymous Anonymous said...

எப்படி இப்படி கதை எழுதிருங்க? ஐயரே குதிரை ஏற ஆள் வேணுமா? முதல்ல தலித்துகளை இந்து மதத்தில் மனூசன மதிக்கங்க அப்பபுறம் அவுங்க எங்கேயும் போகமாட்டாங்க

 
At 1:41 am, Blogger மங்கை said...

திரு ஜெயராம்

எனக்கு எந்த கோவமோ குமுறலோ இல்லை , இதுக்கு எல்லாம் end result என்ன என்பதை மனதில் வைத்தே எழுதி இருக்கிறேன்...

ஆதாரம் இல்லாமல் நான் எழுதவில்லை..
NGO sector ல நான் இருக்கறதுனால தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அவர்கள் சமுதாயத்தில் இருந்து பணியாற்றி இருக்கின்றேன்,அங்கு நான் கண்ணால் கண்ட காட்சியைத்தான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன், நிரூபிப்பதற்கு நான் video எல்லாம் எடுக்கவில்லை ஜெயராம் அவர்களே..

அவர்களுடன் இருந்த நாட்கள் மரக்கமுடியாதவை..குறிப்பாக பெண்களின் நிலை..
யாரால் இந்த human rights violation and opression என்று பேசி ஏந்த உபயோகமும் இல்லை.. அதை தடுக்க , நிருத்த என்ன வழி என்பதுதான் தொண்டு நிருவணங்களில் இருக்கும் எங்களின் கவலை...

தலித் மக்களின் அவல நிலையை அவர்கள் சமுதாயத்தில் இருந்து, பழகி ஆராய்ந்து எழுதின பல புத்தகங்கள் , அறிக்கைகளை முன்பு படித்த அனுபவத்தை வைத்தே பின்னூட்டம் எழுதி உள்ளேன், குறிப்பாக திரு.சாய்னாத் அவர்களின் ஊழைப்பு இதில் குறிப்பிடத்தக்கது..

கோவையை சுற்றி உள்ள பல ஊர்களில் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் தலித் மக்களுக்கு ஊரின் தென்கோட்டில் இடம் ஒதுக்கி உள்ளதை பார்க்க்லாம்...இது இந்துக்களின் religious rationalisation...
எல்லா சாதியனரையும் நான் சேர்த்து தான் சொல்கிறேன்..யாரையும் குறிப்பிட்டு குறைசொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை..என்னை சுற்றி உள்ளவர்களும் இதைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்..எடுத்துச் சொல்லி பலனில்லாமல் போனது தான் மிச்சம்...

மற்றபடி உங்களை தனிப்பட்ட முறையில் நான் எந்த குற்றமும் சொல்லவில்லை,,,
எல்லோரும் ஒட்டு மொத்தமாக உங்களை தாக்குவதாக எண்ணாமல், அன்பர்.சதயம்,சொன்னது போல்

"பிரச்சினைகளை அதன் நேர்கோட்டில் அணுகினால்தான் ஆரோக்கியமான எதிரூட்டங்களை பெற இயலும் என நான் நம்புகிறேன்....நீங்கள்"
எல்லோருக்கும் இதே கருத்துதான் அன்பரே..

பிழைதிருத்தம்
"தெற்கு நோக்கி" என்று சொல்ல நினைத்து தெற்கில் என்று சொல்லிவிட்டேன்..மன்னிக்கவும்
இப்பதான் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்..அதானால் தான் பிழைகள் ..திருத்திக்கொள்கிறேன்

 
At 2:08 am, Blogger மங்கை said...

//இதற்காக யாராவது ரோட்டுக்கு வந்து தர்ணா செய்தார்களா என்றும் சொல்லுங்கள். தெரிந்துகொள்கிறேன்.?//

இது பொறுப்பில்லாத பேச்சாகவே படுகிறது..சொன்னால் அந்த முறைகேட்டை சரி செய்து விடமுடியுமா உங்களால்,,இல்லை யாருக்காக அந்த பணம் ஒரு சர்வதேச தொண்டு ஒன்று ஒதுக்கியதோ அவர்களுக்குப் போய்சேர உதவதான் முடியுமா உங்களால்..
அவர்களின் மற்ற பணிகளின் மூலம் பயணடையும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பேச்சை இத்தோடு முடிக்கிறேன்..

முறைகேடுகள் எல்லா இடத்திலும் நடக்கத்தான் செய்கிறது.. ஆனால் christian missioneries செய்யும் சேவையை நாம் ஒதுக்கி விட முடியாது.
நம் நாட்டில் இருக்கும் தொண்டு நிருவனங்களுக்கு வரும் பணம் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவணங்களில் இருந்து தான் வருகிறது.. அது கிருத்துவ நிறுவனமா இல்லையா என்று பார்த்து அவர்கள் பணம் ஒதுக்குவது இல்லை.. அதனால் ஒட்டு மொத்தமாக அவர்களை சாடுவது நியாமாக படவில்லை

மங்கை

 
At 3:38 am, Blogger ஜயராமன் said...

மங்கை அவர்களுக்கு,

தங்கள் பதிவுக்கு நன்றி.

தங்கள் புதிதாக எழுத வந்தேன் என்று சொன்னாலும், மிகுந்த முதிர்ச்சியுடனும் எச்சரிக்கையுடனும் எழுதுகிறீர்கள். அதில் ஏதும் தவறு தெரியவில்லை.

தங்களின் சமீபத்திய பதிலில் தாங்கள் என் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு தாங்கள் சொன்னீர்கள்:

//டெல்லியில் ஜன்தர் மந்தரில் NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள்.//

சென்னையில் "பெரியவா" மடத்தை சேர்ந்த NGO வின் முறைகேடுகள் உங்களுக்கு தெரியுமா...////

இதற்குதான் நான் தங்களுக்கு தெரிந்த விவரங்களை கேட்டேன். தலித் மீது NGO விஷயத்துக்கு தாங்கள் பதில் சொல்லியுள்ளீர்கள்.

பெரியவா என்று தாங்கள் சொல்வது காஞ்சி மடம் என்று நினைக்கிறேன். அதில் தாங்கள் தெரிந்த ஆதாரம் கண்டோ காணாமலோ என்ன ஊழலை கண்டீர்கள் என்று சொல்லுங்கள்.

இதுதான் என் கேள்வி.

விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வடக்கில் தலைவைத்து என்றாலும் வடக்கை நோக்கி தலை வைத்து என்றாலும் ஒன்றுதான். வேறு மாதிரியாக இருந்தால் தாங்கள் விளக்கவும்.

நன்றி

 
At 4:17 am, Blogger ஜயராமன் said...

மங்கை அவர்களுக்கு,

தங்கள் பதிலை பாருங்கள்.


//இதற்காக யாராவது ரோட்டுக்கு வந்து தர்ணா செய்தார்களா என்றும் சொல்லுங்கள். தெரிந்துகொள்கிறேன்.?//

இது பொறுப்பில்லாத பேச்சாகவே படுகிறது..சொன்னால் அந்த முறைகேட்டை சரி செய்து விடமுடியுமா உங்களால்,,///

நான் கேட்டது என்ன? நீங்கள் எழுதுவது என்ன?

நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள். பெரியவா மடத்தில் டெல்லியில் ஊழல் என்று சொன்னீர்கள். அதற்கு நான் தங்களுக்கு தெரிந்த விவரம் கேட்டேன்.

அப்போது தங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது இதன் பேரில் என்று கேட்டேன். அதாவது, யாராவது ரோட்டில் தர்ணா செய்தார்களா இந்த பெரியவா மட ஊழல் விழயமாக என்று கேட்டிருந்தேன்.

ஏன் என்றால், கிருத்துவ என்.ஜி.ஓ.க்களில் ஊழல் என்று தர்ணா நடந்தது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு தாங்கள் பெரியவா மடத்திலும் ஊழல் என்று சொன்னீர்கள்.

இப்போது என் பதிலை சம்பந்தம் இல்லாமல் ஏதோ 'சொன்னால் உங்களால் திருத்தி விட முடியுமா' என்று கேட்கிறீர்கள்.

இது தங்களுக்கே சரியாக தோன்றாது.

இதுவரை பல பதிவுகளை பதித்து விட்டீர்களே தவிர என் கேள்விக்கு பதில் இல்லை.

புதுக்கோட்டை, கும்பகோணத்தில் எந்த பகுதிகளில் மிதிவண்டியில் தலித் செல்ல தடை என்றும் கேட்டிருந்தேன். அதற்கும் மவுனம் தான்.

ஆதாரம் இல்லாவிட்டால், தாங்கள் கேள்விப்பட்டேன் என்றாவது ஏதாவது விவரம் எழுதலாம். அதை விட்டு ....

தங்களின் பின்னூட்டங்கள் சரியாக இருக்கட்டும்.

நன்றி

 
At 7:49 am, Blogger VSK said...

பொறுமையாகவும், அதே நேரம் நிதானம் பிறழாமலும் பதிலிறுக்கும் உங்கள் நேர்மை பிரமிக்க வைக்கிறது.
வாழ்த்துகள்!
மீண்டும் சொல்கிறேன்,
ஆக்கபூர்வமான "நம்" நிகழ்வுகளில் இதனைச் செலவிட்டால் நிறையச் சாதிப்பீர்கள் என இன்னமும் நம்புகிறேன்.
நன்றி.

 
At 10:05 am, Blogger ஜயராமன் said...

SK அவர்களே,

தங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை நான் உணர்கிறேன். எனது நலன் கருதி மனப்பூர்வமாக தாங்கள் சொல்வது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன்.

நன்றி

 
At 7:35 am, Blogger Ram said...

ஜயராமன் சார்,

உங்களோடு நான் ஒத்துப்போகிறேன், பல இடங்களில். ஆனால் இங்கு பதிலளிக்கும் பலரும் பார்ப்பன எதிர்ப்பு என்பதையும் கிறுத்துவ மதமாற்றத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். என்னசெய்வது எல்லாம் நேரம்.

 

Post a Comment

<< Home