Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Monday, October 02, 2006

கபாலி! கபாலி!

நேற்று டிவியில் யதேச்சையாக புட்பால் பார்த்தேன்.

இங்கிலாந்து டீம் லிவர்பூல், ்துருக்கியின் "கலதசராய்" (GALATASARAY) டீமை துவம்சம் செய்துகொண்டிருந்தார்கள். வருத்தமாய் இருந்தது.

ஏன் என்றால் கலதசராய் என் டீம்.

நான் துருக்கியில் இறங்கியதும் அங்கு புட்பால் தெரியாவிட்டால் பிழைக்கமுடியாது என்பதை தெரிந்துகொண்டேன்.

அதுவரை புட்பால் என்பது பெங்காலிகள் ஸ்டிரைக்குகளுக்கு நடுவே விளையாடும் ஒரு விளையாட்டு என்று மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தேன்.

ஆனால், துருக்கியில் புட்பால் சுவாசிக்காமல் இருப்பது கஷ்டம். பல ஐரோப்பா ஊர்களில் இதே கூத்துதான்.

கிரிக்கெட் பித்து பிடித்தால் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், புட்பால் தோஷம் பிடித்தால் குணப்படுத்துவது கொஞ்சம் கஷடம். இந்த விளையாட்டில் ருசி வந்தால் ரோட்டில் சட்டையை கழட்டி ஆட்டிக்கொண்டு ராத்திரி முழுக்க குதிக்க பலம் வேண்டும்.

இந்த அசட்டு மக்களுக்கு மதத்துக்கு பிறகு பிடித்த இன்னொரு சனியன் இந்த விளையாட்டு என்று புரிந்தது.

இஸ்தான்பூலில் நான் இருந்த முதல் சில மாதங்களிலேயே ஒரு ரொடீன் அமைந்துவிட்டது.

என்னைப்பார்த்ததும் முதல் கேள்வி ஒரே மாதிரியானதுதான் "ஈரானா, பாகிஸ்தானா" என்று கேட்பார்கள்.

"இல்லை, இந்திஸ்தான்" என்று சொல்லவேண்டும்.

இந்தியாவை இந்திஸ்தான் என்றுதான் துருக்கி பாஷை மற்றும் அரபியில் சொல்கிறார்கள்.

இந்த 'இந்தி' வேறு - இந்து வேறு.

அதைப்போல, இந்த 'இந்தி' வேறு, திராவிடர்கள் தார் பூசும் இந்தி வேறு.

நம்மூர் துலுக்கர்கள் எல்லாம் சேர்ந்து, அரபிக்கள் இந்தியாவை 'இந்திஸ்தான்' என்று சொல்லக்கூடாது என்று ஒரு ஃபட்வா அவசியம் போட வேண்டும். நாம் செகுலர் தேசமில்லையா? இல்லாவிட்டால் "திம்மிஸ்தான்" என்றாவது கூப்பிடட்டும். நடப்பு நிலைமையை சொன்ன மாதிரியாவது இருக்கும். ஆனால், இந்துஸ்தான் நன்றாகவே இல்லை.

விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன்!!

இந்திஸ்தான் என்று சொன்னதும் என்னை ஒரு செவ்வாய் கிரக பூச்சி மாதிரி பார்ப்பார்கள். கொஞ்சம் வயசானவர்கள் என்றால் (சமீபத்தில் அறுபது வயதானவர்கள்...) ராஜ்கபூர் சினிமா பார்த்திருப்பார்கள்.

மற்றபடி எல்லாம் இந்தியா என்றால் ஃபகீர்கள் இருக்கும் நாடு என்றுதான் நினைப்பு.

நான் சந்தித்த ஒரு மானேஜர், என்னைப்பார்த்து சீரியஸாக உங்களுக்கு snake charming (பாம்பாட்டி வித்தை) தெரியுமா? என்று கேட்டார். நான் தெரியாது என்றவுடன் ரொம்பவும் வருத்தப்பட்டார். எல்லா இந்திஸ்தானிக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமே என்று சந்தேகப்பட்டார். பின், அந்த வாரம் அவர் வீட்டிற்கு கூப்பிட்டிருந்த டின்னர் வரவேற்பை கேன்சல் செய்தார். பாம்பாட்ட தெரியாத இந்தியனிடம் அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கவில்லை.

இப்படி குசல பிரச்னங்கள் முடிந்தபிறகு அடுத்த கேள்வி நீங்கள் எந்த டீம் என்பதுதான். கிரிக்கெட் விளையாட்டில் இந்த டீம் குழப்பம் இல்லை. இங்கு இந்தியாவில் எல்லோரும் இந்தியா டீம்தான். (ஒரே வித்தியாசம், துலுக்கர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் டீம் பிடிக்கும்). ரஞ்சி ட்ராபி, புச்சிபாபு எல்லாம் எங்களூர் நன்னிலம், திருவாரூர் டீம் அளவில்தான் இருக்கிறது. ஆக, இங்கு டீம் குழப்பமில்லை.

இதனால், எனக்கு அவர்களின் கேள்வியை சமாளிக்க முதலில் தெரியவில்லை. "இந்தியாவில் புட்பால் கிடையாது. அதனால், நான் துருக்கி டீம்" என்று அப்பாவித்தனமாக சொல்வேன். அவர்கள் விழுந்துவிழுந்து சிரித்ததை பார்த்து பார்த்து தான் இது ஏதோ தப்பான பதில் என்று புரிந்தது.

அதைவிட, புட்பால் இல்லாத தேசம் எத்தனை கொடுமையாக இருக்கவேண்டும் என்று அவர்கள் என்மீது பரிதாபப்படுவார்கள்.

இந்தியாவில் இரண்டு விளையாட்டுதான். இந்துக்கள் மசூதியை இடிப்போம். துலுக்கர்கள் மார்க்கெட்டில் வேட்டு வைப்பார்கள் என்று சொல்வேன். வாயடைத்துவிடுவார்கள்.

பின்னர் விவரம் புரியாமல் ஒரு பத்திரிக்கையை பார்த்து ஃபெனர்பாசே (FENERBAHCE) என்றொரு டீமின் பெயரை சொல்ல ஆரம்பித்தேன். இது ஆப்பையிலிருந்து அடுப்பில் விழுந்தது போலாச்சு. இந்த பெயரை கேட்டதுமே பிலுபிலு என்று பிடித்துக்கொண்டுவிடுவார்கள். இந்த ஃபெனர்பாசே நல்ல டீம். இதற்கும் நான் மேலே எழுதின கலதசராய்க்கும் எப்போதும் போட்டி. இதில் கலதசராய் கொஞ்சம் பசையுள்ள அதனால் வெற்றியுள்ள ஒரு டீம். இதெல்லாம் பின்புத்தி.

எதிராளி கலதசராய் ஆளாக இருந்தால் நான் மாட்டினேன். என்னை ஒரு கிழிகிழித்து சுவற்றில் மாட்டிவிடுவார்.

மாறாக, எதிராளி ஃபெனர்பாசேவாக இருந்தால், அதுவும் திண்டாட்டம்தான். என்னை முத்தமிட்டு அதன் விளையாட்டுவீரர்கள் பற்றியும், சமீபத்திய அதன் தோல்விகளை பற்றியும் ரம்பம் போட்டுவிடுவார்.
இது ஏதோ ஒரு பேச்சு இடஞ்சல் என்று முதலில் நினைத்தது ரொம்பவே தப்பு என்று பின்னால் புரிந்தது. இந்த புட்பால் ஒரு பெரிய சாதிக்கலவரத்துக்கே காரணமாக இருக்கிறது என்று புரிந்தது.

கலதசராய் டீம் துருக்கியர்கள் தனியாக ரக் அடித்து அவர்களுக்குள் கள்ளப்பணம் வியாபாரம் செய்வார்கள். அதே மாதிரி, ஃபெனர்பாசே டீம் துருக்கியர்கள் அவர்களுக்குள் வரவு செலவு வைத்துக்கொண்டு பிஸினஸ் நடத்துவார்கள். நீங்கள் மாற்றி சொல்லிவிட்டீர்கள் என்றால் ஃகாபீர் ஆகிவிடுவீர்கள். இது பெரிய உபத்திரவம்.

இந்த பிரச்சனைக்காகவே நான் கலதசராயாக மாறினேன். ஏனென்றால் அது மெஜாரிட்டாய் இருந்தது. ப்ராபப்ளிட்டி விகிதாசாரம் கூட இருந்தது.

ஆனால், இந்த புட்பால் பிடித்ததாக ஆக்கிக்கொள்வது ரொம்பவும் கஷ்டம். எப்போதும் இந்த புட்பால் மேச்சுகள் ராத்திரியிலேயே நடக்கின்றன். அதுவும், நரம்பு உரையும் சில்லென்ற எதிர்காத்தில் புட்பால் பிடிப்பதாக நடிப்பது ரொம்பவும் கஷ்டம். பந்தை துரத்துபவர்களை விட பார்ப்பவர்கள் நன்கு உழைக்கவேண்டும். மேச் முடியும் வரை ஒரு இரண்டு மணி நேரம் குதிக்க வேண்டும். கடைசியில் சட்டை இல்லாமல் காரில் மேல் ஏறி உட்கார்ந்து உறுமிக்கொண்டே சுற்றிவர வேண்டும்.

இதெல்லாம் எல்லோருக்கும் வற்புறுத்தல் இல்லை. ஆனால், நல்ல துருக்கியர்களுக்கு இது அல்லாவால் விதிக்கப்பட்ட இன்னொரு கடமை.

துருக்கியில் வியாபாரம் பண்ணுவதே கஷ்டம். அதிலும் புட்பால் தெரியாமல் ஜீவிப்பது அதைவிட கஷ்டம். வியாபாரத்தில் கருப்புபணம் ஒரு 50% ஆவது இருக்கும். எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்தால் ஓட்ட முடியும்.

அதைவிட பயங்கரமான inflation எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும். நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது நான் பார்த்து பயந்துபோனேன். 30 லட்சம் லிரா மாத அலவன்ஸ் என்று போட்டிருந்தது. (1990 ல்).

இரண்டு மாதத்தில் விசா வாங்க வந்த எம்பஸி பேப்பரில் 50 லட்சமாக உயர்ந்திருந்தது. கம்பெனியில் சேரும் முன்பு சம்பள உயர்வு கிடைத்த ஒரே பாக்கியசாலி நானாகத்தான் இருக்கவேண்டும்.

நான் மாகாணத்திலேயே ரொம்பவும் சம்பளக்காரன் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விமானம் ஏறினேன்.

ஆனால், இந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அந்த கிடுகிடு குளிரில் நான் இறங்கியதுமே என் உடம்பு விரைத்துப்போய்விட்டது. அந்த டாக்ஸி ட்ரைவர் என்னைவிட அழகாக கோட்டு சூட்டு போட்டுக்கொண்டிருந்தேன். நான் ஒரு ஜீன்ஸூம், குமார் சட்டை ஒன்றையும் போட்டுக்கொண்டிருந்தேன்.

டாக்ஸி மீட்டர் போட்டதுமே பகீர் என்றது. 50,000 என்று காட்டியது. என்னை அழைக்க வந்தவரிடம் வீடு எங்கே என்று கேட்டேன். பக்கம்தான் அதகாய் என்று சொன்னார். அதகாய் ஒரு பணக்கார ஏரியா. பத்து நிமிடத்தில் போய்விட்டோம். வீட்டு வாசலில் இறங்கியபோது, டாக்ஸி ஒன்றரை லட்சம் லிரா காட்டியது.

வந்து சேர்ந்தேன் என்று சொல்ல அம்மாவுக்கு போன் செய்தேன். நகைக்கடைக்கு போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். நீ நல்ல சம்பாதிக்கிறே. ஏதாவது வாங்கி வைக்கவேண்டாமா என்று வியாக்கியானம் வேறு. விவரத்தை சொன்னேன். அப்பா பயந்துவிட்டார். ஏதாவது செலவுக்கு பணம் வேணுமானால் நான் அனுப்பிவைக்கட்டுமா என்று கேட்டார். நான் வேணும் எனறால் சொல்கிறேன் என்று சொல்லி போனை வைத்தேன்.

நான் வந்த முதல்நாள் ஒரு டாலர் 3000 லிரா. ஒரே வருஷத்தில் அது 7500 லிரா ஆனது.

என் பிளாட் 13 வது மாடியில் இருந்தது. லிப்டில் போனோம். லிப்டில் நம்பர் பட்டன்களை தவிர கபாலி என்றொரு பட்டன் இருந்தது. பின்னால் ஆபீஸிலும் சூபர் மார்க்கெட்டிலும் இதே கபாலி பட்டனை பார்த்தேன். இது என்ன என்று என் boss ஐ கேட்டேன். லிப்டில் மாட்டிக்கொண்டாளோ, யாராவது தவறாக நடந்தாலோ, இந்த பட்டனை அழுத்தினால் உன் ஊர் மயிலாப்பூர் கபாலி வந்து காப்பாற்றுவான் என்று சொன்னார். மயிலாப்பூர் கபாலி ரொம்பவும் ஸ்ட்ராங் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், கபாலியை கூப்பிடும் சந்தர்ப்பம் மட்டும் வரவேயில்லை.

ஒரு மாதம் கழித்து கொஞ்சம் துருக்கி பாஷை தெரிந்த போது dictionary ஐ பார்த்தேன். துருக்கி பாஷை இங்கிலீஷ் script ல்தான் எழுதப்படுகிறது. அரபியில் எழுதியதை சட்டம் போட்டு மாற்றினவர் அத்துர்க். KAPALI என்பதை "கபால" என்று படிக்கவேண்டும். துருக்கி பாஷையில் புள்ளி வைத்த i க்கும் புள்ளி வைக்காத i க்கும் உச்சரிப்பு நிறைய மாறும் என்று தெரிந்துகொண்டேன்.

KAPALI என்றால் Close / மூடு என்று போட்டிருந்தது.

கலதசராய் தோற்றதற்கு ரொம்பவும் வருத்தத்தை என் துருக்கி நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில், ஒரே லாபம். துருக்கியில் யாரும் சட்டையை கழட்டிக்கொண்டு ரோட்டில் ஓட வேண்டியதில்லை.

15 Comments:

At 4:49 AM, Blogger dondu(#4800161) said...

தூள் பதிவு. நான் ரசித்த வரிகள்.

"அதுவரை புட்பால் என்பது பெங்காலிகள் ஸ்டிரைக்கு நடுவே விளையாடும் ஒரு விளையாட்டு என்று மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தேன்."

"இந்த விளையாட்டில் ருசி வந்தால் ரோட்டில் சட்டையை கழட்டி ஆட்டிக்கொண்டு ராத்திரி முழுக்க குதிக்க பலம் வேண்டும்."

"பாம்பாட்ட தெரியாத இந்தியனிடம் அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கவில்லை."

"இந்தியாவில் இரண்டு விளையாட்டுதான். இந்துக்கள் மசூதியை இடிப்போம். துலுக்கர்கள் ரயிலில் வேட்டு வைப்பார்கள் என்று சொல்வேன். வாயடைத்துவிடுவார்கள்."

"கடைசியில் சட்டை இல்லாமல் காரில் மேல் ஏறி உட்கார்ந்து உறுமிக்கொண்டே சுற்றிவர வேண்டும்."

"லிப்டில் மாட்டிக்கொண்டாளோ, யாராவது தவறாக நடந்தாலோ, இந்த பட்டனை அழுத்தினால் உன் ஊர் மயிலாப்பூர் கபாலி வந்து காப்பாற்றுவான் என்று சொன்னார். மயிலாப்பூர் கபாலி ரொம்பவும் ஸ்ட்ராங் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், கபாலியை கூப்பிடும் சந்தர்ப்பம் மட்டும் வரவேயில்லை."
(ஏன், ஜாம்பஜார் ஜக்குவை சேத்துக்க மாட்டாளாமா?)

எழுத்தாளர் இரா முருகனை ரொம்பவும் ஞாபகப்படுத்துகிறீர்கள்.

அன்புஇடன்,
டோண்டு ராகவன்

 
At 7:42 AM, Blogger bala said...

அன்புள்ள ஜயராமன்,

நல்ல நகைச்சுவையுடன் கலந்த நடை.

சுவாரசியமாக இருந்தது.

வாழ்த்துக்கள்.

பாலா

 
At 9:36 AM, Blogger Vajra said...

//
இந்தியாவை இந்திஸ்தான் என்றுதான் துருக்கி பாஷை மற்றும் அரபியில் சொல்கிறார்கள்.
//

அரபியில்...Standardaized அரபியில் இந்தியாவிற்கு அல் ஹிந்த். என்று பெயர்.

ஒவ்வோறு அரபு நாட்டிலும் ஒவ்வொறு மாதிரி பேசுவார்கள்...ஜோர்டானில், எகிப்து, சிரியா, இராக் என்று தனித் தனி அரபி இருந்தாலும் Standardized அரபி தான் செய்திகள், தோலைக்காட்சிகளில் வரும்..

 
At 9:55 AM, Blogger ஜயராமன் said...

டோண்டு சார்,

தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

நீங்கள் சொன்ன இரா. முருகனின் படைப்புகளை நான் இதுவரை அறிந்ததில்லை. இனி படிக்க முயலுவேன். நன்றி

பாலா அவர்களே,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இந்த புட்பால் வினோதங்கள் நிறைய அனுபவங்கள் இருந்தன. இன்று லீவு நாளில் ஆபீஸூக்கு வேறு வேலையாக போய் தனியாளாய் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடத்தில் சுருக்க எழுதி போட்டேன். நன்றி

வஜ்ரா,

தகவலுக்கு நன்றி. Hint என்றுதான் துருக்கியில் எழுதுகிறார்கள், சொல்கிறார்கள். நீங்கள் சொன்னது சரி.

இதில் இன்னொரு காமெடி என்ன தெரியும். டர்கி என்று உலகம் முழுதும் அழைக்கப்படும் பறவைக்கு டர்க்கி தேசத்தில் என்ன பெயர் தெரியுமா? "இந்தி" என்பது.

துலுக்கர்கள் என்ற வார்த்தையை அங்கு பெருமையாக கருதினார்கள். எங்கள் துருக்கிதான் உங்கள் நாட்டுக்கு தாஜ்மகால் கொடுத்தது என்கிறார்கள். துருக்கி வம்சத்தினர்தான் அங்கு முஸ்லிம் ராஜ்யத்தை கொடுத்தது என்கிறார்கள். இங்குள்ள துலுக்கர்கள் துலுக்க வார்த்தையை கண்டு இத்தனை எகிறுவதை பார்த்து எனக்கு இப்போது ஆச்சரியமாய் இருக்கிறது.... என்னவோ போங்கள்...

நன்றி

 
At 12:18 PM, Blogger ஜடாயு said...

ஜயராமன்,

நகைச்சுவையோடு சில நற நற விஷயங்களை ஊடே சொருகிவிட்டீர்கள். அருமை, அருமை.

துருக்கர்கள் என்று மறுபடி மறுபடி குறிப்பிட்டு எழுதியது இந்த contextல் தியரிடிகல்லி சரி, ஆனாலும் துருக்கியர்கள் என்பது இன்னும் பொருத்தமாகவும் politically ம்.
correct ஆக இருக்கும்.

டோண்டு சுட்டிய பஞ்ச் வரிகளை -வழிமொழிகிறேன்.

// இந்த 'இந்தி' வேறு, திராவிடர்கள் தார் பூசும் இந்தி வேறு //
:))))

// இந்தியாவில் இரண்டு விளையாட்டுதான். இந்துக்கள் மசூதியை இடிப்போம். துலுக்கர்கள் ரயிலில் வேட்டு வைப்பார்கள் என்று சொல்வேன். வாயடைத்துவிடுவார்கள் //

90-களில் நீங்கள் இதை உண்மையிலேயே சொல்லியிருந்தால் அது தைரியம் தான். அப்போது சூழல் அப்படி.

மசூதி (actually மசூதி அல்ல, சர்ச்சைக்குரிய பாபர் கால கட்டடம்) இடிப்பு நின்று விட்டது. ரயில் குண்டுகள் வெடித்துக் கொண்டே அல்லவா இருக்கின்றன !

// இதெல்லாம் எல்லோருக்கும் வற்புறுத்தல் இல்லை. ஆனால், நல்ல துருக்கியர்களுக்கு இது அல்லாவால் விதிக்கப்பட்ட இன்னொரு கடமை.//

வம்பை விலைக்கு வாங்குவது என்பது இது தான் - perfect.

 
At 8:43 PM, Blogger வடுவூர் குமார் said...

நன்றாக சிரித்தேன்.:-)))
நன்றி

 
At 9:47 PM, Blogger bala said...

ஜடாயு சொன்னது
"மசூதி (actually மசூதி அல்ல, சர்ச்சைக்குரிய பாபர் கால கட்டடம்) இடிப்பு நின்று விட்டது. ரயில் குண்டுகள் வெடித்துக் கொண்டே அல்லவா இருக்கின்றன ! "

உண்மை. மூல காரணங்களான,
காஷ்மிர்,செச்சென்யா,பலொசிஸ்த்தான்,பாலஸ்டின்,இத்யாதி இத்யாதி போன்ற இஸ்லாமியர்கள் சம்பத்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் வரை இஸ்லாமிய தீவிரவாதிகள் இவ்வாறு செய்வது மிகவும் முறையான செயல் என்று கூறி வரும் அரசியல்வாதிகளும்,அறிவு ஜீவிகளும் உள்ள வரை வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.

 
At 10:06 PM, Blogger tbr.joseph said...

அதுவரை புட்பால் என்பது பெங்காலிகள் ஸ்டிரைக்குகளுக்கு நடுவே விளையாடும் ஒரு விளையாட்டு என்று மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தேன்.//

நக்கலு? இருந்தாலும் பதிவு முழுக்க இந்த மாதிரி நக்கல் நிறைந்து வழிகிறது. சில இடங்களில் அதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை நீங்கள் நகைச்சுவையுடன் கையாண்டவிதம்.. வாய்விட்டு சிரித்தேன்..

காலையில் மனதை லேசாக்கியதற்கு உங்களுக்கு நன்றி ஜயராமன்..

 
At 10:38 PM, Anonymous Anonymous said...

சூப்பர்! அந்த கபாலி மேட்டர் படிக்கும்போது வந்த அடக்க முடியாத சிரிப்பில், தூங்கிகொண்டிருந்த என் மனைவி "என்ன அர்த்த ராத்திரில கண்டதயும் படிச்சு கெக்க பிக்கன்னுண்டு" என்று ஒரு போடு போட்டும் அடங்கவில்லை சாமி. ரொம்ப நாள் கழிச்சு வாய்விட்டு சிரிச்சேன். மிக்க நன்றி.

 
At 11:11 PM, Blogger ஜயராமன் said...

ஜடாயு அவர்களே,

///துருக்கர்கள் என்று மறுபடி மறுபடி குறிப்பிட்டு எழுதியது இந்த contextல் தியரிடிகல்லி சரி, ஆனாலும் துருக்கியர்கள் என்பது இன்னும் பொருத்தமாகவும் politically ம்.
correct ஆக இருக்கும். ///

அறிவுரைக்கு நன்றி. அப்படியே மாற்றிவிட்டேன்.

///90-களில் நீங்கள் இதை உண்மையிலேயே சொல்லியிருந்தால் அது தைரியம் தான். அப்போது சூழல் அப்படி.///

பாபர் மசூதி இடிப்பு அங்கே எல்லா அரபி நாடுகளைப்போலவே பெரிதாக ஷாக்காக பேசப்பட்டது. அது தொழுகை நடக்காத ஒரு பழைய மசூதி கட்டிடம். 50 வருஷமாக கேஸ் நடக்கிறது. அங்கு விக்கிரக ஆராதனை நடக்கிறதால் அது தொழுகைக்கு லாயக்கில்லை என்றெல்லாம் சொல்லி சமாளிப்பேன். அப்போது பாம்பே blast நடந்து முடிந்ததால், இரண்டையும் சேர்த்து சொல்லி சமாளிப்பேன். "துலுக்கர்கள் மார்க்கெட்டில் வேட்டு வைப்பார்கள்" என்பதே அந்த சமயத்தில் சரியான பதிலாக இருக்கும். அதனால், அதையும் மாற்றிவிட்டேன்.

பாலா அவர்களே,

///அரசியல்வாதிகளும்,அறிவு ஜீவிகளும் உள்ள வரை வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.///

முற்றிலும் உண்மை. சாக்குபோக்கு சொல்வோர்க்கு இதெல்லாம் ஜ்ஜல்லி சப்பைக்கட்டு. அவர்களாக பார்த்து ஏதாவது உருப்படியாக செய்தால் உண்டு.

நன்றி

 
At 11:13 PM, Blogger ஜயராமன் said...

ஜோசப் சார்,

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

//நக்கலு? இருந்தாலும் பதிவு முழுக்க இந்த மாதிரி நக்கல் நிறைந்து வழிகிறது.///

நக்கல் எல்லாம் இல்ல சார். அந்த காலகட்டத்தில் என்னைப்போன்ற சின்ன புள்ளைங்களுக்கு புட்பால் பத்தி தெரிந்ததே இவ்வளவுதான். டிவியும் ரொம்பவும் வரவில்லை இல்லையா!!

வடுவூரார், மற்றும் அனானி அவர்களுக்கு மிக்க நன்றி.

 
At 2:14 AM, Blogger Muse (# 5279076) said...

ஜயராமன் ஸார்,

ப்ளாக்குகள் உலகத்திலிருந்து ஸன்யாஸம் வாங்கலாமா என்று யோஸிக்கும்போதெல்லாம் உங்களைப் போன்றவர் கட்டுரைகள் ஸம்ஸாரத்திற்கு இழுத்துவிடுகின்றன.

ஜமாய்க்கிறீர்கள்.

 
At 11:05 AM, Blogger ஜயராமன் said...

ம்யூஸ்,

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!!! உங்களின் பின்னூட்டங்களால் முன்னோட்டமிடப்பட்ட பதிவுகள் எத்தனேயோ! உங்கள் பதிவுகளுக்கு ஏங்கும் பின்னூட்டங்கள் எத்தனையோ!!!

தமிழ்மண ப்ளாக்குகளில் சில வேண்டத்தகாதவை நடக்கின்றன என்பது வாஸ்தவம். ஆனால், இவை நம்மை ஒன்றும் செய்யாது.

நன்றி

 
At 11:29 AM, Anonymous Anonymous said...

Dear Jayaraman

Hilarious. Hereafter I decided not to read your blog when other people are around. They look like laughing loudly all alone like a Turkey football fan.

Did anybody say you discretley injected in a banana?

Regards
Sa.Thirumalai

 
At 11:38 AM, Blogger ஜயராமன் said...

Tirumalai sir,

so glad to receive your comments of encouragement. I always found your replies to blogs to be very focused and detailed. You are not writing much this time. I am new to blog and hope to see good contributions.

thanks

jayaram

 

Post a Comment

<< Home