கவிதைத்துளிகள்
என் மனங்கவர்ந்த மக்கள் டிவி காட்சியை பற்றி என் முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள்.
அதில் நான் இன்று ரசித்தது சுவையான கவிதை நிகழ்ச்சி.
வழங்கிய கவிஞரோ திலீபன் கண்ணதாசன் என்பவர். முன்னால் எனக்கு பரிச்சயமில்லாத பெயர். அவரின் பல கவிதைகளை வாசித்தார். நிறம்ப நன்றாக இருந்தன. சில பொசபொசத்து போயின.
என் ஞாபகத்திலிருந்து எனக்கு பிடித்த மூன்று கவிதைகள் இதோ எழுதியிருக்கிறேன். வரிகள் வார்த்தைகளில் சிறிது மாற்றமிருக்கலாம். ...
**********************************
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவசரமாக ஊருக்குப்போகவேணுமுன்னு ஆயிரத்து நூறு ரூபாய் வாங்கிப்போன கருப்பனையும்,
முப்பத்து முக்கோடி கடவுள் சாச்சியாய் மூணே மாதத்தில் அசலூரில் வேலே நிச்சயமுன்னு மூணு சேவல் ஐநூத்தி ஒரு ரூபா வாங்கிப்போன பூசாரியையும்
ஆணுக்கொன்னு, பெண்ணுக்கொன்னு தனி கழிப்பறை கட்டித்தருவேனுன்னு வாக்கு குடுத்த எம்மெல்லேவையும்...
தேடிக்கொண்டிருக்கிறேன்
******************
முரண்
மனைவி மக்களுடன் கடைவீதியில் போய் வரும்போதுதான் கண்ணில் படுகிறாள் என் பழைய காதலி.
மாதக்கடைசியில் கடிதம் போடாமல் வந்து சேருவார்கள் குடும்பத்தோடு விருந்தினர்கள்.
மருந்து சாப்பிட்டு குணமாகி வீடு திரும்பும்போது அழைப்பிதழோடு வந்து சேருவார்கள் என் நண்பர்கள்...
************************
சோத்துக்கட்சி
வந்துவிட்டது தேர்தல் மாதம். சர்சர் என்று நாலைந்து பிளைமூத்தும் காரும் வந்தது.
தெருவுக்கு தெரு நாலு குழாய் கட்டி பாட்டு
விடிய விடிய எம்ஜியார் சிவாஜி படம் போட்டு கொட்டகாயில் கொண்டாட்டம்.
வெள்ளையும் ஜொல்லையும் ஏக ஆட்கள் ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு
வீட்டில் அம்மா சொன்னாள். ஒன்னுக்கும் கவலையில்லை. அடிச்சி சாப்பிட்டா ஒரு மாதம் நீ அரிசிக்கஞ்சி.
***********
5 Comments:
thanks for sharing.
கவிதை நல்லாதான் இருக்கு.இறைநேசன் என்ன இந்த கிழி கிழிக்குறாரு,நீங்க என்னடான்ன இஙக..கவிதை..
:-))
பொட்டிக்கடை அவர்களே,
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. பிடித்திருந்ததா கவிதைகள்?
அனானி சார்,
நீங்கதான் அவரா? என்னைப்பற்றி இத்தனை விசாரம் படும் அளவுக்கு என்னை பெரியவனாக்கியதற்கு நன்றி!!!
தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத இறைவேச கும்பல் துலுக்கர் என்ற வார்த்தையை சொல்வதே தவறு என்கிறது.அது மிகப்பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்தப்பட்டு வந்த தமிழ் சொல்.திராவிட கவிஞரான பாரதிதாசன் கூட அதை பயன்படுத்தியுள்ளார்.
துலுக்கர் என்ற சொல்லை பயன்படுத்திய தமிழ்கவிஞர்கள்
3.5. சதாசிவ தேவமகாராயர் (1542 - 1570) -2
3.5.2 (73)
சுபமஸ்து
ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகாமண்டலேசுவர மேதினி மீசர
கண்டகடாரி சாளுவ அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவ ராய கண்டன்
\முவராயர கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - 5
துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந்தவிர்த்தான்
பூர்வ தட்சிண் பச்சிம உத்தர
சத்த சமுத்திராதி பதி
எம்மண்டலமங் கொண்டருளிய
இராசாதி ராச ராச பரமேசுவர - 10
ஸரீவீரப் பிரதாப ஸரீசதாசிவ தேவ மகாராயர்
பிருதிவி இராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம்
1471 ன் மேல் செல்லா நின்ற சவுமிய வருடம்
ஆனிமாதம் 13ஆம் தேதி சோமவாரமும் பிரதமையும்
பேற்ற மூல நட்சத்திரத்து நாள் ...... - 15
http://www.infitt.org/pmadurai/mp134.html
(பாரதிதாசன் கவிதை)
தேசத்தோர் நல்லுணர்வு பெறும்பொ ருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைதெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி, அதைக் கனிவாய் உண்டார்.
http://www.tamilnation.org/literature/bharathy/bharathidasan.htm
அனானி அவர்களே,
மிகவும் சுவாரசியமான, தெரியாத இந்த விவரங்களை கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home