இ.இ.இ.இ.இ
போலீஸ் எல்லாம் இப்போது அரசியல்வாதிகளின் கைத்தடிகள் என்று பலபேர் சொன்னாலும், அது உண்மையில்லை என்று நம்பும்படி கொஞ்சநஞ்சம் நிகழ்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணம் நம் மும்பை போலீஸ்தான். பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் ஆளும்கட்சி கூட்டங்களை, அவர்கள் இருந்த கனவுலகத்திலிருந்து நிஜத்துக்கு கூட்டிவந்த புண்ணியவான்கள் அவர்கள். மும்பை லோகல் ரயிலில் வேட்டு வைத்ததில் பாகிஸ்தானிகளுக்கு முக்கிய பங்கு என்று நிரூபித்தது நம் ஏமாளி பிரதம மந்திரியை, முஷரப் கவனமாக விரித்த “டிப்ளமசி” வலையில் விழாமல் கொஞ்சமாவது காப்பாற்றியது.
மும்பை போலீஸை பாராட்டிப்பேச இன்னொரு காரணமும் இருக்கிறது. இடதுசாரிகளின் சில சுயமாக பிரகடனப்படுத்திக்கொண்ட “லிபரல்”கள் விடாமல் போட்ட கிடுக்கிப்பிடியில் விழாமல் தப்பித்ததுதான் அந்த காரணம். இந்துத்துவா கூட்டங்கள்தான் மாலேகாங்வ் குண்டுக்கு காரணம் என்று பிரகனப்படுத்தவேண்டும் என்று ஆனானப்பட்டு முயன்றார்கள் இடதுசாரிகள்.
இப்போது மும்பை போலீஸ் முதல் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். நூர்-உல்-ஹூதா என்ற SIMI யின் ஒரு மெம்பரை. அவர்கள் இந்த சம்பவத்தை முமுதும் துப்பறிந்து முடிக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று கேள்வி.
இந்த விசாரணை நடந்தது எந்த மாதிரி சூழ்நிலையில் என்று நினைத்துப்பார்த்தால் ஆச்சரியம் வருகிறது. இந்திய அரசாங்கத்தின் “மிரட்டும் வழிகாட்டி”களாக முழங்கும் இடதுசாரிகள் விடாமல் “ஜிகாத்”தை கண்டிப்பவர்களை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்; இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பற்றி பேசுபவர்கள் மற்றும் நினைப்பவர்கள் மீது ஒரு தீவீர எதிர்ப்பை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மாலேகாங்வ் குண்டுவெடிப்பில் இந்த ஜிகாதிகளின் சம்பந்தம் பற்றி முதலிருந்தே சில ஆதாரங்கள் இருந்தன. போலீஸ் இப்போது சொல்வதன்படி, இதை நடத்தினது “தேசவிரோத சக்திகள்” என்கிறார்கள். அதாவது, (வழக்கமான பாகி, லஷ்கர், சிமி கூட்டமாக இருக்கலாம்.) இங்கு வெடித்த “கருப்பு RDX” பெஷாவர் தீவிரவாதிகளின் ஒரு ஸ்பெஷாலிடியாம்.
ஆதாரங்கள் இருந்தபோதிலும், போலீஸின் மீது தீவிரமான கெடுபிடியும் மிரட்டலும் தொடர்ந்தன. இந்தியாவின் பிரபலமான “மனித உரிமை” வக்காலத்துகள், (அல்லது மனித உரிமை பேசி பிரபலமான வக்காலத்துகள்), லிபரல் எச்சரிக்கையாளர்கள் என்று பல பேர் இந்த மாலேகாங்வுக்கு சாரிசாரியாக வந்தார்கள். பாதித்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இல்லை, ஆனால், ஒரு சதித்திட்டம் நடந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டு. போலீஸை இவர்கள் நேரிடையாகவே “அறிவுரை” சொன்னார்கள். “நீங்கள் எல்லா கோணத்திலும் பாருங்கள்” என்று. அதாவது, முஸ்லிம்களை விட்டுவிடுங்கள் என்று அர்த்தம். சிறுபான்மையினரை விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு சர்வாதிகார பாஸீஸ்ட் அரசாங்கத்தின் வேலையே என்று இவர்கள் வாதம்.
இவர்கள் கொஞ்சமும் கூசாமல், “மகாராட்டத்தில் சிறுபான்மையினரை தனிமைப்படுத்த, சிறுமைப்படுத்த ஒரு சதி நடக்கிறது’ என்று அரசாங்கத்தை எச்சரித்தார்கள். ஆளும்கட்சியையும் இவர்கள் இப்படிச்சொல்லியே சமாதானப்படுத்தினார்கள்.
(தமிழ் இணைய பதிவுகளிலும் இம்மாதிரி பலப்பல ஜல்லிகள் நடந்தது ஞாபகம் இருக்கலாம்.)
அரசியல்காரணங்களால் முடங்கிப்போன சோனியாவும், காங்கிரஸ் பரிவாரங்களும் உடனே மும்பை அரசாங்கத்துக்கு பல கெடுபிடிகள் போட்டார்கள். போலீஸை சிறுபான்மையினர் பக்கம் போகச்சொல்லக்கூடாது என்று தினசரி பயமுறுத்தினார்கள்.
உங்கள் ஊரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வது உங்கள் கடமை இல்லையா? பதில் இல்லை.
ஆனால், போலீஸ் எந்த பக்கமும் சாயவில்லை. குண்டுவெடிப்புக்கு மறுநாளே “எல்லா கோணங்களிலும்” விஜாரிப்போம் என்று திரும்ப திரும்ப போலீஸ் டிவியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிரஸ் மீட் போதும், விசாரணை அதிகாரிகள் “இந்து கோணத்திலும் விஜாரிக்கிறோம்” என்று வெளிப்படையாக சொன்னார்கள். நம் சோப்ளாங்கி பிரதமரும் “I am not ruling in or ruling out anything” என்று சொல்லியிருந்தார்.
ஆனால், இடதுசாரிகளின் இரண்டு காதுகளும் இதை கேட்கவில்லை.
இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதினார்கள். இந்துக்ரூப்கள்தான் இதுக்கு காரணம் என்று சொன்னார்கள்.
இவர்களின் இந்த “பரந்த சிந்தனை”, ஒரு பைத்தியக்காரத்தனமான பொழுதுபோக்காக இருந்தாலும், அதற்காக இது நடத்தப்படவில்லை. இவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கான காரணம் இதுதான். சிறுபான்மையினரின் ஒரு கும்பல் அவர்களின் மத-அரசியல் நோக்கங்களை அடைய வன்முறையை எளிதாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மழுங்க செய்யவே இந்த குற்றச்சாட்டு.
“இந்துக்களே குண்டுவெடித்தார்கள்” என்ற இவர்கள் குற்றச்சாட்டு மக்களின் கவனத்தை இந்த சிறுபான்மை தீவிரவாத கூட்டங்களிடமிருந்து நகர்த்தவே.
இஸ்லாமிய தீவிரவாதத்தை தொடர்ந்து கவனிப்போருக்கு தெரிந்த ஒரு சிம்பிள் விஷயம் இவர்கள் மூடிமறைக்கப்பார்க்கிறார்கள். சில சுன்னி அடிப்படைவாதிகள் தங்கள் இஸ்லாமிய கிலாபாத் அமைப்பதில் இருக்கும் தீவீரத்தில் மற்ற ஷியா, அகமதியா முதலிய இஸ்லாமியர்களை தாக்குவதில் என்றுமே தயங்கியதில்லை. சக இஸ்லாமியர்களையே இவர்கள் இப்படி என்றால், இந்து, யூத, கிருத்துவ “ஈனப்பிறவி”களைப்பற்றி கேட்கவா வேண்டும்?
இடதுசாரிகளின் கோரப்பிடியில் அகப்பட்டுள்ள இந்த அரசாங்கம் இன்னும் அந்த “ஆயிரம் கை” அரக்கன் நம் வாசலில் வந்துவிட்டான் என்பதை புரிந்துகொள்ளவில்லை.
தீவிரவாதத்தை ஒடுக்க விசேஷ சட்டம் தேவை என்றுகூட ஒப்புக்கொள்ளாத ஒரு இளிச்சவாய் இந்திய அரசாங்கம்.
பெண்கள் வன்முறையை அடக்க விசேஷ சட்டம் தேவை. (அது அல்லாஹ்வின் கட்டளையான “பெண்களை அடி” என்பதற்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை). வரதட்சிணையை ஒடுக்க 498A என்ற ஒரு காட்டுமிராண்டி பிரிவு தேவை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை முன்னேற்ற ஒரு ரிசர்வேஷன் தேவை.
இவை எல்லாமே அசாதாரணமான விசேஷ சட்டங்கள். ஆனால், நிலவும் சில விசேஷ நிலைகளால் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆனால், தீவிரவாதம் என்பதும் ஒரு அசாதாரணமான குற்றமானதால் ஒரு அசாதாரணமான ஒரு தீர்வு சட்டரீதியாக தேவையில்லையா? அதை மறுக்கிறார்கள்.
ஆனால், அதிருஷ்டவசமாக, மும்பை போலீஸூக்கு இந்த ஒரு பாவ்லாத்தனம் எல்லாம் இல்லை.
பல “மனித உரிமை”யாளர்கள் நடத்தின “போலீஸ் அடக்குமுறை குறை தீர்க்கும் கூட்டங்கள்” போலீஸை பயமுறுத்தத்தான். ஆனால், அது போலீஸை முடக்கவும் இல்லை, அவர்கள் கடமையை மாற்றவும் இல்லை.
மீடியாக்களும் இந்த விஷயத்தில் தாங்கள் நடந்துகொண்டதன் மூலம் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். மீடியாக்களின் சொல்படி, போலீஸை “இந்துகோணத்தில் விசாரியுங்கள்” என்று “அறிவுரை” சொல்பவர்களெல்லாம் செகுலர்வாதிகளாம்.
இவர்கள் அடித்த கூத்தில் ஒரு காமெடி இருந்தது.
இந்துகோணத்தில் விசாரணைக்கு இவர்கள் சொன்ன காரணம். – இறந்தவர்களில் இஸ்லாமியர்களே பெரும்பான்மை. அதாவது, “ஒரு இஸ்லாமியன் இன்னொரு இஸ்லாமியனை எப்படித்தாக்குவான்” என்பது கேள்வி தொக்கிநிற்கிறது. ஆனால், அதே மூச்சில் மற்றொரு வாதமும் வைக்கிறார்கள். அதாவது, தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது!!!
இதுதான் காமெடி.
- பி.ஆர். ரமேஷ் எகனாமிக் டைம்ஸில் 1 நவம்பர் 2006
பிகு: பதிவின் தலைப்பு “இஸ்லாமியர்களுடன் இணைந்த இடதுசாரிகளும் இளிச்சவாய் இந்தியாவும்” என்று வாசிக்கவும்.
13 Comments:
இ.இ.இ.இ.இ
ஜெயராமன் சார்,
என்ன இதுன்னு இளிச்சுப்பார்த்தேன் தலைப்பை. முழுக்கப் பதிவைப் படிச்ச பின்பு விளங்கியது.
கட்டுரையாளர் பேர் ரமேஷ்ன்னு இருக்கே! அப்ப இது செக்குலர் ஆர்டிக்கிள் கெடயாதுன்னு Sickular வியாதிகள் அடுத்த சமாளிப்புகேஷனை ஆரம்பிக்கும்.
Well Said. I wish all these mullahs to turn their eyes one day on their own sickularists too. Even then they wont realize. If these psec journos and leftists are cleansed away terrorists will automatically vanish.
//இ.இ.இ.இ.இ
ஜெயராமன் சார்,
என்ன இதுன்னு இளிச்சுப்பார்த்தேன் தலைப்பை. முழுக்கப் பதிவைப் படிச்ச பின்பு விளங்கியது.//
அதே தான்.
அரிகரன், சீனு மற்றும் அனானி அவர்களுக்கு,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
இடதுசாரிகளும், இஸ்லாமியர்களும் தங்கள் மூக்குக்கு அப்பாலும் உலகம் இருக்கிறது என்று உணர்ந்து, இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் தங்கள் நலன்களை முன்வைக்கும் காலம் வருமா என்று ஏக்கமாய் இருக்கிறது!!!
நன்றி
//இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் தங்கள் நலன்களை முன்வைக்கும் காலம் வருமா என்று ஏக்கமாய் இருக்கிறது!!//
ஜயராமன் அய்யா,
இஸ்லாமியர்கள் இந்திய இறயாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் காலம் கண்டிப்பாக கூடிய சீக்கிரம் வரும்.
ஆனால் இந்த இடது சாரிகளிடமிருந்து வராது. முதலில் இடது சாரிகளுக்கு நியாயம் என்பதே தெரியாது/கிடையாது.
பாலா
/// இஸ்லாமியர்கள் இந்திய இறயாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் காலம் கண்டிப்பாக கூடிய சீக்கிரம் வரும். /////
பாலா அவர்களே,
தங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன். நடந்தால் சந்தோஷம். முஸ்லிம்கள் எந்த தேசத்திலும் தங்கள் தனித்தன்மையையும் சுயலாபத்தையும் தேசபக்திக்கு மேல் கொண்டாடுகிறார்கள் என்று மேலைநாடுகளின் பல நிகழச்சிகள் காட்டுகின்றன. இதைப்பற்றி தனிபதிவே போடலாம். ஆனால், தங்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
////ஆனால் இந்த இடது சாரிகளிடமிருந்து வராது. முதலில் இடது சாரிகளுக்கு நியாயம் என்பதே தெரியாது/கிடையாது. ////
நிதர்சனமான உண்மையிலிருந்து மிகமிக விலகியதால் இவர்கள் நிஜம், நிழல் என்று பாகுபடுத்த இயலாதவர்களாகிவிட்டாரகள்.
நன்றி
நல்ல தலைப்பு. வாழ்க மும்பை போலீஸ்.
தமிழ்மணத்தில், ஏதோ ஒரு பதிவில் படித்தேன்.. இந்தியாவின் பாதுகாப்பு துறையில் உள்ள ஒரு உயரதிகாரி கூறியதாக...
இந்திய இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. 90%க்கும் மேலான இஸ்லாமியர் தேச பக்தியுடன் உள்ளார்கள். ஒரு 10% பேர் தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளார்கள். 10% என்றாலும் கிட்டதட்ட 1.5 கோடிக்கும் மேலான மக்கள். இவ்வளவு பேர் ஆதரிப்பதென்றால், அதை கட்டுப்படுத்துவது என்பது எந்த அரசாங்கத்திற்கும் மிகக் கடினமான வேலையே...
இதற்கு ஒரே தீர்வு, மீதமுள்ள 90% இந்தியாவின் மீது பக்தி கொண்ட இஸ்லாமியர் மிச்சமுள்ள அந்த 10% மக்களை முழுமையாக தம் சமூகத்திலிருந்த விலக்கி அவர்களுடன் எந்த தொடர்பும், எவ்வித ஆதரவும் அளிக்காமல் இருப்பதே...
எனக்கு என்னவோ, இக்கருத்து மிகச்சரியானதாக தோன்றுகிறது
ஜயராமன், அந்தக் கடைசி இ.க்கு இந்தியா என்று சொன்னது உறுத்துகிறது - "இப்போதைய இந்திய அரசு" என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அரசும், மீடியாவும் மும்பை காவல்துறைக்குக் கொடுத்த பிரஷர் கொஞ்ச நஞ்சமல்ல.. அதை மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள். இவ்வளவு பிரஷருக்கு மத்தியிலும் சரியாகக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய மும்பை காவல் துறை பாராட்டுக்குரியதே.. அடுத்த இஸ்லாமிஸ்ட் ஏவுகணை என்ன இருக்கும் தெரியுமா - "இஸ்லாமியர்களை வேட்டையாடும் இந்தியப் போலீஸ்" !
///ஜயராமன், அந்தக் கடைசி இ.க்கு இந்தியா என்று சொன்னது உறுத்துகிறது - "இப்போதைய இந்திய அரசு" என்று வேண்டுமானால் சொல்லலாம் ////
ஜடாயு ஐயா,
தங்களின் கருத்தும் உணர்வும் புரிகிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால், என் பார்வையில், இது "இப்போதைய" இந்திய அரசின் இழிநிலை அல்ல. சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருவதே என்று தோன்றுகிறது. மைனாரிடி அப்பீஸ்மெண்டில் அதீத ரூபம் இப்பொழுது நம் சமுதாயத்தை துண்டாக்கிக்கொண்டிருக்கிறது. இடதுசாரிகளின் கொள்கைக்குழப்பங்கள் பல வருடங்களாகவே நம் அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச்செய்துகொண்டிருக்கிறது.
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
//தங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன். நடந்தால் சந்தோஷம்//
ஜயராமன் அய்யா,
ஒரு சிறு நம்பிக்கை தான். சில சமயம் யோசித்தால், நப்பாசை தானா என்ற நிராசையும் எழுகிறது.
இந்திய உப கண்ட இஸ்லாமியர்களுக்காவே உருவாக்கப்பட்ட பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கம் பிரிந்த்தது, மற்றும் Sind,Balochistan போன்ற oppressed provinces சேர்ந்த மக்கள் பஞ்சாப் dominated பாகிஸ்தான் ஆட்சியை விரும்பாதது ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது வெறும் மத அடிப்படையில் அமைந்த பாகிஸ்தான் கூடிய சீக்கிரம் மேலும் பிளவு படுவதற்க்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தோன்றுகிறது.
ஆகையால் இந்திய இஸ்லாமியர்களும், இந்த பாகிஸ்தான் பரிசோதனை, ஒரு தோல்வி, என்ற முடிவுக்கு வருவார்கள் என்ற ஒரு சிறு நம்பிக்கை எனக்குள் எழுகிறது.
ஆனால், இந்த இடது சாரிகள் என்றுமே இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களால் எற்பட்டுள்ள அபாயம், இஸ்லாமிய தீவிரவாதத்தை விட மோசமான அபாயம் என்று நான் கருதுகிறேன்.
பாலா
ஜயராமன் சார்,
குண்டு வைத்தவர்களைப் பிடித்ததைப் பற்றி நீங்கள் சொல்லுகிறீர்கள். இந்த வலைப்பதிவுலகத்தில் தீவிரவா...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மன்னிக்கவும், அமைதி மார்க்கமான இஸ்லாத்தை பரப்பும் புனிதப்பணி செய்யும் இஸ்லாமியர் ஒருவர் கருணாநிதி ஆட்சி ஏற்றபோது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடிகளில் ஒருவன் இஸ்லாமியன் என்பதலாயே இந்த அரசு இஸ்லாத்திற்கு எதிராக அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கின்றது என்று எழுதினார்.
லோக்கல் ரௌடியைக்கூட இஸ்லாமியன் என்றால் ஒன்றும் செய்யக்கூடாது என்று கூறுபவர்களுக்கு நடுவில், தீவிரவாதி...சீ..சீ. ஜிஹாதியப் போராளிகளைப் பிடித்தால் எழும் எதிர்வினைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்.
இங்கனம் பிக்பாக்கெட், முடிச்சவிழ்ப்பவன், மொள்ளமாரிகளை முல்லாமாரிகளாக மாற்றும் போக்கை கண்டிப்பதால் நீங்கள் மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராகப் போகிறீர்கள்.
ஜயராமன் அய்யா,
நம்ம புதுவை சுகுமாரன் அய்யாவுக்கு
இன்னும் பல வருஷங்களுக்கு ஓயாத வேலை போட்டு குடுக்கறாங்க நம்ம ஊர் இஸ்லாமியர்கள்.
அவருக்கு ஜாலி தான். Saudi டொனேஷன் கூரையை பிச்சிண்டு வரும்.
பாலா
Post a Comment
<< Home