தலித் கிருத்துவர்கள்
கிருத்துவர்களின் மதப்பிரசாரம் ஒரு நூறு வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம், கிருத்துவ தலித்துக்களுக்காக செலவிடப்பட வேண்டும்.
சொல்பவர் நான் இல்லை. உடனே காறித்துப்பி பின்னோட்டம் இட வேண்டாம்.
‘ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கம்’ அமைப்பின் அங்கமான தலித் கிருத்தவர்களின் தேச மாநாட்டில் அதன் தலைவர் R.L.Francis இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
அவர் பேசியது தலித் கிருத்துவர்களின் மனக்குமுறல்களை வெளிக்காட்டியது. கிருத்துவ சர்ச் அமைப்புகள் தலித் கிருத்துவர்களை புறக்கணிக்கின்றன. மேல்ஜாதி கிருத்துவர்கள் மட்டுமே சர்ச்சுகளில் பதவி பெறுகிறார்கள், என்கிறார் அவர்.
இந்தியாவில் அரசாங்கத்துக்கு அடுத்து 40,000 உடல்நல, கல்வி, மற்றும் பிற சமுதாய நிறுவனங்களை நடத்தும் மிகப் பெரிய சக்தி கிருத்துவ சர்ச். இந்த சர்ச்சுகள் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. ஆனால், இது வசதிபடைத்த மேல் மட்டவர்களுக்கே நடத்தப்படுகின்றன. தலைநகர் டில்லியில் கூட தலித்துக்கள் பங்கேற்கும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் மிக குறைவு (என்கிறார் பிரான்சிஸ்).
இதுவரை, தலித் கிருத்துவர்கள் மேம்பாட்டிற்காக சர்ச் ஒரு கல்வி கவுன்சில் மாதிரி அமைப்பை கூட ஏற்படுத்தியதில்லை. இதனால், சர்ச்சின் பணம் முழுதும் மேல்மட்ட கிருத்துவர்களின் கையிலேயே இருக்கிறது. தலித் கிருத்துவர்களின் நலனை புறக்கணித்து சர்ச் பிறர் நலனுக்காக இந்த பணத்தை உபயோகப்படுத்துகிறது, என்கிறார் பிரான்சிஸ்.
ஒரு காரைத் துரத்தும் நாய் போல கிருத்துவ மதம் இந்து தலித்துக்களை துரத்தி ‘அறுவடை’ செய்கிறது (போப்பின் வார்த்தையில்). ஆனால், காரை நெருங்கி விட்ட நாய் போல, பின்னால் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் விட்டு விடுகிறது. (இந்த பாரா வேறு மசாலா. பிரான்சிஸ் சொன்னது இல்லை!)
கிருத்துவர்களும், சர்ச்சுகளும், கிருத்துவ மத்த்தினர் நடத்தும் பள்ளிகளிலும், சமூக அமைப்புகளிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், கிருத்துவர்களுக்கு அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள், என்கிறார் பிரான்சிஸ். என்ன இரட்டை வேடம். இந்த இட ஒதுக்கீடு கேட்பது இவர்கள் ஆளுமைக்காகவே.
இந்த சர்ச்சுகளை நடத்தும் பிஷப்புக்கள் ரியல் எஸ்டேட்டுக்களை தன் மனம் போன படி சுய லாபத்திற்காக விற்பதும், வாங்குவதும் செய்கிறார்கள். தலித் நலனுக்காக வசூல் செய்த பணம், செலவழித்த பணம் எதுக்கும் கணக்கு இல்லை என்கிறார் பிரான்சிஸ்.
ஆனால், இந்த கிருத்துவ அமைப்புகள் மதமாற்ற பிரச்சாரத்திற்காக ஏராளமாக செலவழித்துக்கொண்டிருக்கின்றன. மதம் மாறிய கிருத்துவர்களின் நலனுக்காக சர்ச் ஒன்றுமே செய்வதில்லை என்கிறார் அவர்.
இந்த மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு தலித் கிருத்துவர்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றன. மதப்பிராசர கூட்டங்களில் “குருடர்கள் பார்க்கிறார்கள், மூடர்கள் பேசுகிறார்கள்” என்றெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்க பொய் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் சொல்கிறார்.
ஒருவேளை, தன் மன வலிமையால் யாராவது ஒருவர் ஒருவாறு குணமாகியிருந்தாலும், அதை இவர்கள் பெரிய பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தி மதகுருமார்களின் வலைகளில் மேலும் மக்களை விழ வைக்கிறார்கள், என்கிறார் பிரான்சிஸ்.
இந்த மாதிரி கூட்டங்களில், இதை நடத்தும் பாதிரியார் வியாதிப் பேயை (ghost of sickeness) வெளியேற ஆணையிடுகிறார். இவர் மதகுருமாரா இல்லை மந்திரவாதியா என்று சந்தேகம் வருகிறது என்கிறார் பிரான்சிஸ்.
இந்த தேசிய மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.
RESOLUTIONS PASSED UNANIMOUSLY AT THE 4TH NATIONAL ASSEMBLY OF DALIT CHRISTIANS ORGANISED BY POOR CHRISTIAN LIBERATION MOVEMENT ON 6 AUGUST 2003 IN THE SPEAKERS HALL, CONSTITUTION CLUB, V.P. HOUSE, RAFI MARG, NEW DELHI:
2. மதமாற்ற பிரசாரம் சமுதாய மேன்பாட்டுக்கு வழிசெய்யவில்லை. அதனால், இதை 100 வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம் மதம் மாறிய தலித் கிருத்துவர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.
3. சர்ச் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், மேல் படிப்பு நிலையங்களில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.
4. எல்லா சர்ச்சு நிறுவனங்களும் தங்கள் அமைப்பில் தலித் கிருத்துவர்களின் பங்கேற்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவர்கள் நடத்தும் ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கத்துக்கு எல்லோரும் ஆதரவு தருவோம்.
பொய் பிரசாரத்தில் ஏமாந்து வாழ்க்கையில் ஏமாற்றத்தை ஏந்தியுள்ள இவர்கள் நம் ஆதரவுக்கு உரியவர்கள்.
போன செப்டம்பரில் இவர்கள் டெல்லியில் ஜன்தர் மந்தரில் சர்ச் நிறுவனங்களில் நிலவும் ஊழலை கண்டித்து மிகப்பெரிய தர்ணா நடத்தினார்கள். அப்போது அவர்கள் கிருத்துவ NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள். சர்ச் நிறுவனங்கள் ‘ஊழல், சாதி வெறி, வேண்டுபவர்களுக்கு ஆதரவு ‘ நிறைந்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
1991 சென்சஸ்படி இந்தியாவில் 196.5 லட்சம் கிருத்துவர்கள் இருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் 107 லட்சம். வடகிழக்கு மாநிலங்களில் 36 லட்சம். மீதி பரவலாக.) தமிழ்நாட்டில் இருக்கும் 32 லட்சம் கிருத்துவர்களில் 65% தலித்துக்கள். மதம் மாறுவதால் சமுதாய மேன்மை கிடைக்கும் என்றால், இவ்வளவு அதிக விழுக்காடு தலித், ஆதிவாசிகளை கொண்டிருக்கும் கிருத்துவ மதம் தலித்துக்களுக்காக என்ன செய்கிறது என்று கேட்கிறார் பிரான்சிஸ்.
மதம் மாறிய பிறகு சாதி அடிப்படையில் இவர்களை நடத்துவது நிறுத்தப்பட வேண்டாமா? ஆனால், அப்படி நடக்கவில்லை.
1991 வரை இந்தியாவின் 134 கத்தோலிக்க பிஷப்புக்களில் ஒரு தலித் கூட இல்லை. (முதலாவதாக 1991ல் Bishop Ezra Sargunam உருவானார்.) கோவா, கேரளா தவிர கிருத்துவர்களில் தலித்துக்களே பெரும்பான்மை. ஆனால், அவர்களில் தலித்துக்களை காணுவதே கஷ்டமாக இருக்கிறது. பிஷப், விகார், பாதிரியார்கள், இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், கிருத்துவ மருத்துவமனைகளில் சர்ஜன்கள், மருத்துவ கல்லூரிகளில் சர்ஜன்கள் யாருமே தலித்துக்கள் மிக மிக குறைவு.
தமிழகத்தின் 13 பிஷப் கவுன்சில்களில் தலித்துக்கள் யாருமே இல்லை. தலித்துக்களை பலப்பல உயர் பதவிகளில் இன்று உட்கார்த்தி வைத்து பார்க்கும் இந்து மதத்திலிருந்து (ஏன் ஜனாதிபதி பதவி வரை அவர்களுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது) சமத்துவம், சமுதாய நீதி என்றெல்லாம் மனமாற்றம் செய்து அவர்களை ஆட்கொண்ட மதத்தில் அவர்கள் ஏமாற்றமும் சமுதாய அநீதியும் எதிர்கொள்கிறார்கள் என்பது கொடுமை.
வெறுக்க வைக்கும் தீண்டாமை முதலிய நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை தவறாமல் இந்து மத்த்தில் வைக்கும் இந்த புரட்டுவாதிகள், அந்த நம்பிக்கைகளை தகர்க்கும் இந்து மதவாதிகளை, தங்கள் பிரச்சாரத்துக்கு பலமில்லாமல் போய் விடும் என்று, சதி செய்து எதிர்க்கிறார்கள்.
ஆனால், இந்து மதத்தில் ஒவ்வாத இந்த தீண்டாமை எவ்வாறு பரவியது என்று ஒரு செக்குலர்வாதிகளும் நடுநிலையில் பார்ப்பது இல்லை. மேல்நாட்டு ‘அடிமை வியாபாரம்’ போன்று (அதெற்கும் இஸ்லாமிய, கிருத்துவ அமைப்புகள் பல நூறு வருடங்களாக ஆதரவு தந்ததை வசதியாக மறந்துவிடுகிறார்கள்) இந்த தீண்டாமை ஒரு சரித்திர-சமுதாய அரசியலமைப்பு சூழலை சார்ந்து எழுந்தது என்று தெரிந்தாலும் அதை புரட்டு பேசி மறைக்கிறார்கள்.
தீண்டாமை மட்டுமே தலித் கிருத்துவர்களின் சாபக்கேடு அல்ல. இன்றுவரை, மேல்சாதி கிருத்துவர்களுக்கும், தலித் கிருத்துவர்களுக்கும் கலப்பு மணம் மிகமிக அரிது. அப்படிப்பட்ட கலப்பு மணங்கள், இந்து சமுதாயத்தில் சாதாரணமாகி வருகின்றன என்பதால் இப்போதெல்லாம் இது ஒரு செய்தி கூட இல்லை. மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்.
பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.
இவ்வாறு, கிருத்துவ அமைப்புகளில், தீண்டாமை சுவர்க்கத்திலும், நரகத்திலும் கூட நிரந்தரமாக்கப்படுகிறது. (செத்தபிறகு, சுவர்க்கமோ, நரகமோ நிரந்தரம் என்பது கிருத்துவ நம்பிக்கை).
விவரங்கள் இங்கே.
http://www.saxakali.com/southasia/PCLM.htm