இது பாடலா?
ஒருமை இந்தியாவின் பேரிகை முழக்கமா?
இந்த வரிகள் நம் இந்திய பெருமையை சீர்தூக்குகிறதா?
ஆமாம்!!
இது ஒரு அற்புதமான பாடல். பக்கிம் அவர்களின் மிக Inspired பாடல் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது ரபீந்திரநாத் தாகூர் அவர்களால் இசை அமைக்கப்பட்டு முதலில் பாடப்பட்டது. இதன் கருத்தாழத்தை மேலும் வெளிக்கொணர்ந்தவர் அரபிந்தோ தான்.
ஆனால், இதன் கவிநயத்துக்காக இதை பாட வேண்டாம்.
இந்த பாடல் முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டு பின்னர் முதல் இரண்டு பாடல்களே இதில் தேசிய பாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய பாடலை ஒரு தேசபக்தன் பாடி பெருமை கொள்ள முடியாத சிறுமனமாகி விட்டோம் நாம்?
அந்த பாடல் எதற்காக, யாரால் எழதப்பட்டது என்பதா முக்கியம்?
இவ்வாறு கேட்பதே நம் தேசபக்திக்கு இழுக்குதான்.
ஜனகனமண பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. நாம் விரும்பும் "ஸாரே ஜஹாங் ஸே அச்சா" பாட்டுக்கும் ஒரு இயற்பாளர் உண்டு. ஆனால், இந்த பாடல்கள் எல்லாமே, அதன் வரலாற்றை, ஆசிரியரின் குறைநிறைகளை ஏந்தி வருவதில்லை.
வந்தே மாதரம் என்ற கூக்குரலில் பல லட்சக்கணக்கான தேசபக்தர்களின் குருதியை பார்க்க முடியவில்லையா! இந்த கூவல் செய்துகொண்டுதானே அவர்கள் மடிந்தார்கள், போராடினார்கள். அதற்காக நான் இந்த பாட்டை மதிக்கிறேன். அதன் பூர்வீகமும், அதன் மதமும் எனக்கு ஒரு இலக்கில்லை.
பாகிஸ்தானுக்கு வித்திட்டவரின் ஸாரே ஜஹாங் ஸே அச்சா என்பது அவன் சொன்ன என் மண்ணைத்தானே. அரபி மொழியில் ஹிந்திஸ்தான் என்றால் இந்தியாதானே! அதற்காக மொழியை மாற்றவா முடியும்! அரேபியர்களே நீங்கள் இந்தியா என்று சொன்னால்தான் சரி என்றால் அவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்களே!
மனமும், உறவும் விகாரமான சூழலில் நாட்டு பற்று என்பது மக்களுக்கு ஒரு பேரம் பேசும் பொருளானது மிகவும் துரதிர்ஷட்மானது.
இன்று காலை ஹைதராபாத் முல்லாவினால் ஒரு பட்வா பிறப்பித்து இப்பாடல் பாடப்படும் பள்ளிகளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் படிக்க கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம், நல்ல இஸ்லாமிய மக்களை மதமா, தேசபற்றா என்று தேர்ந்தெடுக்க சொல்கிறது. இது மிகவும் துயரமான நிலை.
இந்த பாடலின் முதல் இரண்டு செய்யுளில் அற்புதமாக தேசத்தை தாயாக உருவக படுத்தியுள்ளது. தாயே வணக்கம் என்று சொல்வதில் மதக்கோட்பாடுகள் குறிக்குடும் என்று எண்ணுவதே சரியான மத விளக்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது இஸ்லாமிய கொள்கை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
தவறு என்று சாதித்தால் எல்லாமே தவறுதான். "ஸாரே ஜஹாங் ஸே அச்சா" என்பதே இஸ்லாத்துக்கு எதிரானதுதானே! (இந்தியாதான் எல்லா இடங்களையும் விட சிறந்தது என்பது மெக்கா, மெதினாவே தரம் குறைக்கவில்லையா!) அது ஏன் பாடும்போது மனம் இடறவில்லை சிலருக்கு! இது விதண்டாவாதம் இல்லை. பலர் பல சமயங்களில் சொன்னதுதான்.
சினிமாக்களில் குத்தாட்டம் போடும் இஸ்லாமிய சகோதரிகளும், டாஸ்மாக்கில் ஊழியம் செய்யும் இஸ்லாம் சகோதரர்களும் இஸ்லாமிய கோட்பாடுகளை மீறியவர்கள்தான்.
ஆனால், இது காலத்தின் கோலம். வயிற்றுப்பாட்டின் கட்டாயம்.
அவரவர்களுக்கு அவரவர் அளவுகோலே மதத்தில் நியாயம்.
அதிலெல்லாம் வராத இஸ்லாமிய அடைகாப்போர், இதில் குரல் கொடுப்பதை முதில் கண்டிக்க வேண்டியது இஸ்லாமிய சகோதர்ர்களே!
வந்தே மாதரம்
நன்றி