போலிடோண்டுவுக்கு இறுதி அஞ்சலி
“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று முன்னமே பாடிவைத்தான் பாரதி.
அவன் எதிர்பார்த்த சுதந்திரம் கைக்கெட்டும் முன்னே அந்த ஆனந்தத்தை பாட்டில் பெற்றான் அந்த பார்ப்பனன்.
பார்ப்பாரை ஐயர் என்ற காலமும் போச்சே என்று வியந்து பாடிய அவனைத்தழுவி, இங்கே நான் ஒரு அஞ்சலிப்பாடல் எழுதுகிறேன்.
*******
போலிடோண்டுவுக்கு இறுதி அஞ்சலி
பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!
கல்லாத வார்த்தைகளை கற்பித்து, கசட்டு தமிழை காதலித்து தளராத முயற்சியால் தமிழ்மணத்தை தழுவினவன் நீ.
நீ இறைத்த சேறு எங்கள் தோட்டத்தில் புதைந்து தாமரை தந்தது.
நீ வீசிய கல் தமிழ்மணத்தில் பலரின் படிக்கட்டாய் ஆனது.
இனப்பற்று கலைவதற்காக இக்கட்டுகளை உருவாக்கி இழிபிறவி என்று பட்டம் ஏற்றாய். பரிதாபமாய் போனது ஏன்?
காது பொத்தி கண்ணீர் மல்கி உன் தாயும், தமக்கையும், தாரமும் தடுத்தும் தயங்காமல் உன் நாக்கால் நிரப்பினாயே நாற்புறமும் கும்பி மணம்! தந்தது போதுமென்று திரும்பிவிட்டாயோ?
பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!
வெறுப்பென்னும் அடிக்கல்லால் நீ கட்டிய கருப்பு மாளிகையில் பொய், புரட்டு கொண்டு நீ இழைத்த மணிமாடங்கள் கனம் தாங்காமல் உன்மேல் கவிழ்ந்து கூட்டினவோ அந்த காலனை?
உன் வசைகளை வைரக்கற்களாக்கி, விரும்பி உன்னை வளர்த்துவிட்டு, வம்பிழுத்து உன்னை விளாயாட்டுப்பொருளாக்கிய வீரர்களை விரக்தியில் விட்டு விழுந்தாயே போலி!
பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!
பிறர் பெயர் தாங்கி, பிறழாமல் அவரை பின்தொடர்ந்து, சீடனாகி கற்று, அவர்மேல் சினத்தை வளர்த்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் ஐயன் பின்தொடர்ந்து, வெட்டி வேலைக்காகவே வாழ்ந்த தியாக தீபமே, திடீரென்று போனது ஏன்?
பலப்பல பெயர் தாங்கி, பார்க்குமிடமெல்லாம் பார்ப்பனரை கற்பித்து, கண்டதும் காதலாகி கசிந்து, கனியிருப்ப காய் கவர்ந்து, காழ்ப்பு என்ற கல்லடி பட்ட கலைஞனே, பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!!
ஆதிக்க வெறியை வேரறுக்க முற்பட்டு அசிங்கத்தை கூவி விற்றாய்.
கருப்புப் போர்வையில் கண்ணுறங்கு உன் கல்லறையில். கலங்காதே வீரா, இழி செயலின் இலக்கணமாய் நீ இட்ட சாக்கடையில் என்னாளும் எங்கோ ஒரு கழிவிட்டு, உன் இறுதி அஞ்சலியை இடையறாது தொடர இளைஞர்கள் ஏராளம்.
பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!
*******